நம்ம ஊருல தீபாவளி ஒருநாள் விழாவாக கொண்டாடுகிறோம். ஆனால் வட மாநிலங்களில் தீபாவளியை 5 நாள் கொண்டாடுவது வழக்கம். தீபாவளின் முதல் நாள் தந்தேராஸ் கொண்டாடப்படுகிறது. தன் என்றால் செல்வம் தேராஸ் என்பது கிருஷ்ண பக்ஷத்தின் 13வது நாளை குறிக்கிறது.
இந்த நாளில் தங்கம் மற்றும் தங்க நகைகள் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த புனித நாளில் தங்கம் வாங்கினால் பெரும் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டு வரும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர்.

தந்தேராஸ் அன்று செல்வத்தின் தெய்வம் என்று அழைக்கப்படும் லட்சுமி தேவி, தன்வந்திரியுடன் வீட்டிற்கு வந்து பணம், வருமான வாய்ப்புகள், வணிக வாய்ப்புகள் மற்றும் வெற்றியை வழங்குவதாக இந்துக்கள் நம்புகிறார்கள். தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்கள் மங்களகரமானவை மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தருவதாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு தந்தேராஸ் வரும் வெள்ளிக்கிழமை (நவ.10) கொண்டாடப்பட உள்ளது. தந்தேராஸ் கொண்டாடுவதற்கான நல்ல நேரம் நவம்பர் 10ம் தேதி மதியம் 12.35 மணிக்கு தொடங்கி நவம்பர் 11ம் தேதி மதியம் 1.57 மணிக்கு முடிவடையும். ஆகையால் நவம்பர் 10ம் தேதி தந்தேராஸ் கொண்டாடப்படும். தந்தேராஸ் பூஜைக்கான முகூர்த்த நேரம் மாலை 5.47 முதல் 7.43 மணி வரை என்று கூறப்பட்டுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளியை தவிர்த்து, மக்கள் தந்தேராஸின் போது வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பு தண்ணீர் அல்லது உணவை நிரப்ப செம்பு, பித்தளை மற்றும் வெள்ளி பாத்திரங்களை வாங்குகிறார்கள். மேலும் அன்று களிமண் லட்சுமி மற்றும் விநாயகர் சிலைகள் வாங்குவதும் மங்களரமானதாக கருதப்படுகிறது. உபகரணங்கள், லேப்டாப், பிரிட்ஜ, மைக்ரோவேவ் மற்றும் பலவற்றையும் நீங்கள் வாங்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications