உங்களுக்கு அடிக்கடி வெளியில் சாப்பிடும் பழக்கம் இருக்கிறதா? அப்படியானால் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரியின் விகிதங்கள் குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விகிதங்கள் உணவகத்தின் இருப்பிடம், உணவகம் அமைந்துள்ள வளாகம் ஆகியவற்றைப் பொறுத்து வாடிக்கையாளர்களிடம் 5 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை ஜிஎஸ்டி வசூலிக்கப்படவுள்ளது.
நீங்கள் வெளியில் சாப்பிட்டால் உங்களிடம் 3 விதமான ஜிஎஸ்டி கட்டணங்கள் வசூலிக்கப்படலாம். அதாவது இனி நீங்க எந்த உணவைச் சாப்பிடுகிறீர்கள் என்பதைத் தாண்டி எங்குச் சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். அவை என்ன? என்பது குறித்து முழுமையாகப் பார்ப்போம்.

தனியாக இயங்கும் உணவகங்கள்: ஒரு உணவகம் தனியாக இயங்கினால்.. அதாவது வேறு எந்த ஹோட்டலுடனும் இணைக்கப்படாமல் செயல்பட்டு வந்தால் அந்த உணவகத்தில் நீங்கள் உண்ணும் உணவுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.
ஹோட்டல் வளாகத்தில் இருக்கும் உணவகங்கள்: ஹோட்டல் வளாகத்தினுள் இயங்கும் உணவகங்களுக்கு 2 விதமான ஜிஎஸ்டி விகிதங்கள் பொருந்தும்.
குறிப்பிட்ட வளாகங்கள்: ஒரு ஹோட்டல் அறைக்கான 1 நாள் வாடகை ரூ. 7,500-க்கும் மேல் இருந்தால் அந்த ஹோட்டல், வளாகம் என்று கருதப்படும். இது போன்ற ஹோட்டல்களில் உள்ள உணவகங்களில் நீங்கள் சாப்பிடும் உணவுக்கு 18 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.
வளாகங்கள் அல்லாத ஹோட்டல்: ஒரு ஹோட்டல் அறைக்கான ஒரு நாள் வாடகை 7,500-க்கும் குறைவாக இருந்தால் அந்த ஹோட்டல், வளாகமாகக் கருதப்படாது. இது போன்ற ஹோட்டல்களில் உள்ள உணவகங்களில் நீங்கள் சாப்பிடும் உணவுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.
எடுத்துக்காட்டாக, தாஜ், லலித் மற்றும் ஹயாட் போன்ற பெரிய லக்சரி ஹோட்டல்கள் வளாகங்களாக கருதப்படும். எனவே, GST விகிதம் ITC உடன் 18 சதவீதமாக இருக்கும்.
எனவே இதன் அடிப்படையில் ஹோட்டல் நிர்வாகம் எந்த வரையறைக்குள் வருகிறது என்பதை ஒரு படிவத்தில் தாக்கல் செய்து தெரிவிக்க வேண்டும். இதை செய்தால் 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். ஒரு வேலை ஹோட்டல் நிறுவனங்கள் விண்ணப்பத்தை தாக்கல் செய்யவில்லை என்றால் 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.


Click it and Unblock the Notifications