வாவ்.. தங்கம் விலையில் டிஸ்கவுன்ட் ஆ.. என்ன ஆச்சரியம்..சர்வதேச சந்தையில் விலையில் தங்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பிசிகல் தங்கத்திற்கு ஆஃபர்களை வாரி வழங்குகிறார்களே எப்படி சாத்தியம்.
இதற்கெல்லாம் முதல் காரணம், தங்கத்திற்கான தேவை குறைவு தான். அரசு தங்கம் இறக்குமதியினை குறைக்க இறக்குமதி வரியினைக் கூட்டியும், ஜிஎஸ்டி வரியினையும் அதிகரித்தது.
ஆனால் அப்போதெல்லாம் குறையாத இந்த தங்கம் இறக்குமதியானது, இந்த கண்ணுக்கு தெரியாத அரக்கனால் குறைந்துள்ளது.
தங்கம் தேவை படு வீழ்ச்சி
இது தான் இப்படி எனில், மறுபுறம் தங்கத்திற்கான தேவை படு வீழ்ச்சி கண்டுள்ளது. ஆனால் அதே நேரம் இறக்குமதி அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பிசிகல் கோல்டு டீலர்கள், இந்தியாவில் தங்கத்திற்கான சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர் எனலாம். கடந்த வாரத்தில் பிசிகல் தங்கத்திற்காக அவுன்ஸூக்கு 20 டாலர்கள் வழங்கியது. இதற்கு முந்தைய வாரத்தில் 2 டாலர்கள் பிரீமியம் கொடுத்த நிலையில், தற்போது 20 டாலர்கள் சலுகை கொடுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்திகள் கூறுகின்றன.
தங்கம் விலை வீழ்ச்சி
இந்தியாவில் உள்நாட்டு தங்க விலையில் 12.5% இறக்குமதி வரியும், 3% ஜிஎஸ்டியும் இதில் அடங்கும் எனலாம். கடந்த வெள்ளிக்கிழமையன்று ப்யூச்சர் சந்தையில் தங்கம் விலையானது 0.35 குறைந்து, 52,001 ஆக குறைந்திருந்தது. எனினும் வாரத்திற்கு வாரம் ஒப்பிடுகையில் தங்கம் விலையானது தட்டையாகத் தான் உள்ளது.
தங்கம் விலை ரூ.4,000 குறைவு
எனினும் ஆகஸ்ட் 7-ம் தேதி உச்சமான 56,200 ரூபாயுடன் ஒப்பிடும்போது தங்கம் விலையானது 4,000 ரூபாய்க்கு அதிகமாக குறைந்துள்ளது. கடந்த வாரம் துபாயில் இருந்து தங்கம் இறக்குமதியானது கணிசமான அளவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இங்கு தேவை இல்லை என்றும் கேப்ஸ் கோல்டின் நிர்வாக இயக்குனர் சந்தா வெங்கடேஷ் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத உச்சம்
உண்மையில் தங்கம் விலையானது இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு புதிய உச்சத்தினை தொட்டது. எனினும் தற்போது நன்றாக விலை குறைந்துள்ளது. எனினும் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் அமெரிக்க பொருளாதாரம் பற்றி கவலைகள் எழுந்துள்ளதோடு, பண ஆதரவு தேவைப்படலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது.
பாதுகாப்பு புகலிடம்
தங்கம் விலையானது தற்போது வரையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும், இந்த ஆண்டு வரையில் 25% அதிகமான ஏற்றத்துடன் உள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் பொருளாதாரம் சரிந்து வந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை தொடர்ந்து குறைத்து வருகின்றன. ஏனெனில் பணவீக்கம் மற்றும் நாணய வீழ்ச்சிக்கு எதிராக திகழும், ஒரு பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலையேற்றம் கண்டு வருகின்றது.
தங்கம் விலை அதிகரிக்கும்
இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்கா டாலரின் மதிப்பும் சற்று வீழ்ச்சி கண்டு வருகின்றது. எனினும் அமெரிக்கா நாணயம் மற்றும் மத்திய வங்கிகளின் அறிவிப்புகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது உள்ளது. இதன் காரணமாக ஆய்வாளர்கள் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்ற எதிர்மறையாக கருத்தினையே கொண்டுள்ளனர்.
More From GoodReturns

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

Today Gold Silver Rate Live: தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications