தீபாவளிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. என்ன வாங்க ரெடியா இருக்கீங்களா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் மற்றும் வெள்ளி விலையினை பொறுத்தவரையில் கடந்த சில தினங்களாக தடுமாற்றத்தில் தான் உள்ளன.

நடப்பு மாத தொடக்கம் முதல் கொண்டே தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த தங்கம் விலையானது, கொரோனா தடுப்பூசி பற்றிய அறிவிப்புகள் வந்தவுடன் தடதடவென சரிவினைக் கண்டது.

அதுவும் ஒரு வார காலமாக தட்டு தடுமாறி ஏற்றம் கண்ட தங்கம் விலையானது ஒரே நாளில், ஒற்றை அறிவிப்பில் வீழ்ச்சி கண்டது. இதன் எதிரொலியாக ஆபரண தங்கத்தின் விலையும் பெரும் சரிவினைக் கண்டது. உண்மையில் இது வரவிருக்கும் தீபாவளி மற்றும் தந்தேராஸ் நாட்களில் தங்க நகை வாங்குபவர்களுக்கு இது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

அரசின் அறிவிப்புகளுக்கு செவிமடுக்காத சந்தை.. சரிவில் சென்செக்ஸ் நிஃப்டி..!அரசின் அறிவிப்புகளுக்கு செவிமடுக்காத சந்தை.. சரிவில் சென்செக்ஸ் நிஃப்டி..!

தங்கம் தேவை அதிகரிக்கலாம்

தங்கம் தேவை அதிகரிக்கலாம்

தீபாவளிக்கு முந்தைய நாள் தந்தேராஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா, தீபாவளி, தந்தேராஸுடன் ஆரம்பமாகிகிறது. இந்த திருநாளில் தான் லட்சுமி பூஜையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு செய்யப்படும். மக்கள் தங்கள் வீட்டீல் செல்வ செழிப்பு வளர வேண்டும் என்று இந்த நாளில் பூஜை செய்வார்கள். இந்த நாளில் பெரும்பாலான மக்கள் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டுவார்கள். இதனால் இந்த விழாக்காலத்தில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்கள் ஆர்வம்

முதலீட்டாளர்கள் ஆர்வம்

இந்த பூஜையை நாம் செய்யும் போது நமக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆக இந்த நாளில் லாபம் கிடைத்தால், அந்த வருடம் முழுவதும் லாபகரமான வருடமாக இருக்கும் என்றும் கூறுவார்கள். இதனால் தான் இந்திய பங்கு சந்தை மற்றும் கமாடிட்டி வர்த்தகத்தில் கூட மூகூர்த் டிரேங்க் கொண்டாடப்படுகிறது. இது ஆண்டு தோறும் இந்திய பங்கு சந்தைகளிலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் நடைபெற்று வரும் ஒரு சிறப்பு வர்த்தக நாளாகும். இதனால் மற்ற நாட்களில் வர்த்தகம் செய்வதை விட, இந்த நாளில் வர்த்தகம் செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

செம சரிவில் தங்கம் விலை
 

செம சரிவில் தங்கம் விலை

தங்கம் விலையானது கடந்த திங்கட்கிழமையன்று மட்டும் 5 சதவீதத்திற்கு மேலாக சரிவினைக் கண்டது. வெள்ளி விலையும் 7% மேல் வீழ்ச்சி கண்டது. எனினும் அதன் பிறகு எந்தவொரு பெரியளவிலான ஏற்றத்தினையும் காணவில்லை. ஆக இது தங்கம் வாங்குபவர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து ஒப்பிடும்போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது பெரும் சரிவினைக் கண்டுள்ளது. அதிலும் இந்த தீபாவளி தந்தேராஸ் நேரத்தில் நகை வாங்க இது சரியான நேரம் தான்.

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலை அதிகரிக்கலாம்

இந்த விழாக்கால பருவத்தில் தங்கம் தேவையானது அதிகரிக்கும் நேரத்தில், விலையும் சற்று அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் விலையானது கடந்த இரண்டு தினங்களாக சற்று ஏற்றத்தினை கண்டு வந்த நிலையிலும் கூட, கடந்த திங்கட்கிழமை சரிவுடன் ஒப்பிடும்போது தங்கம் விலையானது சரிவில் தான் காணப்படுகிறது. ஆக இது தங்கம் வாங்குபவர்களுக்கு நல்ல வாய்ப்பு தான்.

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் இன்று காலை தொடக்கத்தில் இருந்தே, தங்கம் விலை பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகமாகி வருகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 5.60 டாலர்கள் அதிகரித்து, 1867.20 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. நேற்றைய முடிவில் தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் 1861.60 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 1863.25 டாலர்களாக தொடங்கியுள்ளது.

சர்வதேச வெள்ளி நிலவரம்

சர்வதேச வெள்ளி நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் இல்லாததையடுத்து, வெள்ளியின் விலையும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. இது தற்போது 0.37% அதிகரித்து, 24.355 டாலர்களாக காணப்படுகிறது. நேற்று வெள்ளியின் விலையானது 24.267 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 24.310 டாலர்களாகவும் தொடங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தடுமாறிக் கொண்டுள்ள நிலையில், இந்திய சந்தையில் சற்று ஏற்றத்தினையே கண்டுள்ளது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 193 ரூபாய் அதிகரித்து 50,362 ரூபாயாக காணப்படுகிறது. நேற்று தங்கம் விலையானது 50,169 ருபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 50,315 ரூபாயாகவே தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, தங்கத்தின் முக்கிய சப்போர்ட் விகிதமாக 50,000 ரூபாய், ஆக இதன் அருகில் வரும் போது வாங்கலாம் என்று நிபுணர்கள் கூறியிருந்தனர். ஆக இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளியின் விலையும், இந்திய கமாடிட்டி சந்தையில் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 258 ரூபாய் அதிகரித்து, 62,805 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையை பொறுத்த வரையில் 62,541 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 62,767 ரூபாயாக தொடங்கியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கம்

கடந்த சில தினங்களாக சரிவினைக் கண்டு வரும் ஆபரண தங்கத்தின் விலையானது, இன்றும் சற்று சரிவினைக் கண்டுள்ளது. இன்று கிராமுக்கு 12 ரூபாய் குறைந்து, 4,752 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து, 38,016 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சர்வதேச சந்தையில் விலை அதிகரித்துள்ள போதிலும், இந்தியாவில் பண்டிகை காலத்தில் இப்படி விலை குறைந்துள்ளது, தங்க நகை வாங்குபவர்களுக்கு நல்ல விஷயமே.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் கிராமுக்கு 12 ரூபாய் குறைந்து, 5,185 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து 51,850 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதுவும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஆபரண வெள்ளி நிலவரம்

சென்னையில் ஆபரண வெள்ளி நிலவரம்

கடந்த சில தினங்களாகவே பெரியளவில் மாற்றம் இன்றி காணப்படும் ஆபரண வெள்ளியின் விலையானது, இன்று கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிராம் 67 ரூபாயாகவும், இதே 10 கிராம் வெள்ளியின் விலையானது 670 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது விழாக்கால பருவத்தில் முதலீடு செய்வதற்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே முதலீட்டாளர்கள் கூறிவருகின்றனர். அதற்கேற்ப கடந்த சில தினங்களாகவே தங்கம் விலையானது சரிந்து வந்த நிலையில், இது வாங்க சரியான இடமாகவும் பார்க்கப்படுகிறது. அதிலும் இது தீபாவளி சமயத்தில் சரிந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Diwali 2020: gold and silver prices up today, but still down from recent high

Gold jewellery prices fall for third day in a row, but silver rates in little higher
Story first published: Thursday, November 12, 2020, 17:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X