1964ல் 10 கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா.. கேட்டா ஆடிப்போயிருவீங்க..!

இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகள் முழுவதும் ஒவ்வொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தான் டிமாண்டு இருக்கும், இதற்கு பல உதாரணங்கள் சொல்ல முடியும். ஆனால் தங்கம் மட்டுமே ராஜாக்கள் ஆட்சி செய்த காலத்தில் இருந்து இன்று வரையில் டிமாண்ட் குறையாமல் உள்ளது. அதுமட்டும் அல்லாமல் அனைத்து தரப்பினரும் வங்கும் விலையுயர்ந்த பொருளாகவும் தங்கம் விளங்குகிறது.

இந்நிலையில் கடந்த 57ஆண்டுகளில் தங்கம் விலை எப்படியெல்லாம் மாறியுள்ளது என்பதை ஒரு சின்ன பிளாஷ்பேக்-ஆக பார்க்கலாம் வாங்க

 தங்கம் விலை வரலாறு

தங்கம் விலை வரலாறு

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 10 கிராம் தங்கத்தின் வருடாந்திர சராசரி விலை அளவுகள் பட்டியலிடப்பட்டு உள்ளது. இதன் படி 1964ஆம் ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை வெறும் 63.25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2020ஆம் ஆண்டில் 48,651 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.

 வரலாற்றுத் தரவுகள்

வரலாற்றுத் தரவுகள்


1964ஆம் ஆண்டு - 63.25 ரூபாய்
1965ஆம் ஆண்டு - 71.75 ரூபாய்
1966ஆம் ஆண்டு - 83.75 ரூபாய்
1967ஆம் ஆண்டு - 102.50 ரூபாய்
1968ஆம் ஆண்டு - 162.00 ரூபாய்
1969ஆம் ஆண்டு - 176.00 ரூபாய்
1970ஆம் ஆண்டு - 184.00 ரூபாய்
1971ஆம் ஆண்டு - 193.00 ரூபாய்
1972ஆம் ஆண்டு - 202.00 ரூபாய்
1973ஆம் ஆண்டு - 278.50 ரூபாய்
1974ஆம் ஆண்டு - 506.00 ரூபாய்
1975ஆம் ஆண்டு - 540.00 ரூபாய்
1976ஆம் ஆண்டு - 432.00 ரூபாய்
1977ஆம் ஆண்டு - 486.00 ரூபாய்
1978ஆம் ஆண்டு - 685.00 ரூபாய்
1979ஆம் ஆண்டு - 937.00 ரூபாய்
1980ஆம் ஆண்டு - 1,330.00 ரூபாய்
1981ஆம் ஆண்டு - 1,800.00 ரூபாய்
1982ஆம் ஆண்டு - 1,645.00 ரூபாய்
1983ஆம் ஆண்டு - 1,800.00 ரூபாய்
1984ஆம் ஆண்டு - 1,970.00 ரூபாய்
1985ஆம் ஆண்டு - 2,130.00 ரூபாய்
1986ஆம் ஆண்டு - 2,140.00 ரூபாய்
1987ஆம் ஆண்டு - 2,570.00 ரூபாய்
1988ஆம் ஆண்டு - 3,130.00 ரூபாய்
1989ஆம் ஆண்டு - 3,140.00 ரூபாய்
1990ஆம் ஆண்டு - 3,200.00 ரூபாய்
1991ஆம் ஆண்டு - 3,466.00 ரூபாய்
1992ஆம் ஆண்டு - 4,334.00 ரூபாய்
1993ஆம் ஆண்டு - 4,140.00 ரூபாய்
1994ஆம் ஆண்டு - 4,598.00 ரூபாய்
1995ஆம் ஆண்டு - 4,680.00 ரூபாய்
1996ஆம் ஆண்டு - 5,160.00 ரூபாய்
1997ஆம் ஆண்டு - 4,725.00 ரூபாய்
1998ஆம் ஆண்டு - 4,045.00 ரூபாய்
1999ஆம் ஆண்டு - 4,234.00 ரூபாய்
2000ஆம் ஆண்டு - 4,400.00 ரூபாய்
2001ஆம் ஆண்டு - 4,300.00 ரூபாய்
2002ஆம் ஆண்டு - 4,990.00 ரூபாய்
2003ஆம் ஆண்டு - 5,600.00 ரூபாய்
2004ஆம் ஆண்டு - 5,850.00 ரூபாய்
2005ஆம் ஆண்டு - 7,000.00 ரூபாய்
2006ஆம் ஆண்டு - 8,400.00 ரூபாய்
2007ஆம் ஆண்டு - 10,800.00 ரூபாய்
2008ஆம் ஆண்டு - 12,500.00 ரூபாய்
2009ஆம் ஆண்டு - 14,500.00 ரூபாய்
2010ஆம் ஆண்டு - 18,500.00 ரூபாய்
2011ஆம் ஆண்டு - 26,400.00 ரூபாய்
2012ஆம் ஆண்டு - 31,050.00 ரூபாய்
2013ஆம் ஆண்டு - 29,600.00 ரூபாய்
2014ஆம் ஆண்டு - 28,006.50 ரூபாய்
2015ஆம் ஆண்டு - 26,343.50 ரூபாய்
2016ஆம் ஆண்டு - 28,623.50 ரூபாய்
2017ஆம் ஆண்டு - 29,667.50 ரூபாய்
2018ஆம் ஆண்டு - 31,438.00 ரூபாய்
2019ஆம் ஆண்டு - 35,220.00 ரூபாய்
2020ஆம் ஆண்டு - 48,651.00 ரூபாய்

 வருடத்திற்குச் சராசரியாக 13.90% வளர்ச்சி

வருடத்திற்குச் சராசரியாக 13.90% வளர்ச்சி

1964 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் தங்கம் விலை வருடத்திற்குச் சராசரியாக 13.90 சதவீதம் அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இது கிட்டதட்ட ஒரு ரூபாய் வட்டி வருமானத்திற்கு இணையானது. பொதுவாக நீண்ட கால முதலீட்டில் வருமானத்தின் அளவு கணிசமாகக் குறையும் ஆனால் தங்கம் சிறப்பான லாபத்தைக் கொடுத்துள்ளது.

 2020 மற்றும் 2011ஆம் ஆண்டு

2020 மற்றும் 2011ஆம் ஆண்டு

அதிலும் 2020ல் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சுமார் 38.13 சதவீத லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது, இதற்கு முன்பு 2011ல் 42.70 சதவீத லாபத்தை அளித்துள்ளது.

 வியக்கவைக்கும் வளர்ச்சி

வியக்கவைக்கும் வளர்ச்சி


மேலும் 1977, 1978, 1979, 1980, 1981 இந்த 5 வருடத்தில் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 3.5 மடங்கு லாபத்தை கொடுத்துள்ளது. இதேபோல் 1974ல் சுமார் 81 சதவீத லாபத்தை கொடுத்துள்ளது.

என்ன தான் இருந்தாலும் தங்கம் தங்கம் தான்.. நீங்க என்ன சொல்றீங்க..?!

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+