நாட்டின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நிறுவனம் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. அமிரி, அர்மானி, வெர்சேஸ், பலென்சியாகா போன்ற பிரபலமான சர்வதேச பிராண்டுகள் இந்தியாவில் ரிலையன்ஸ் ரீடெய்லின் பார்ட்னர் பிராண்டாகக் கிடைக்கின்றன.
ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வரும் இந்த நிறுவனத்தை கையாளுவது என்பது கடினமான காரியம். ஆனால் ஈஷா அம்பானி இந்த விஷயத்தில் அதிர்ஷ்டம் செய்தவர். ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்திற்கு முக்கிய முடிவுகளை எடுக்கும் சில நம்பகமான உதவியாளர்கள் அவரிடம் உள்ளனர். அவர்களில் மிகவும் நெருக்கமான உதவியாளர் தர்ஷன் மேத்தா. இவரை ஈஷா அம்பானியின் வலது கை என்று குறிப்பிடுகின்றனர்.

தர்ஷன் மேத்தா ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பிராண்ட்ஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக உள்ளார். இவர் சி.ஏ. படித்தவர். ஓட்டப்பந்தய வீரர் மற்றும் மலையேற்றம் மற்றும் மலைகளில் ஏறுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 2007ல் முகேஷ் அம்பானியால் நிறுவப்பட்ட இந்த பிராண்டின் முதல் ஊழியர் இவர்தான்.
மேத்தா ஆரம்பத்தில் விளம்பரத் துறையில் ஈடுபட்டு மெதுவாக சில்லரை வர்த்தகத்தை நோக்கி சென்றார். டாமி ஹிலிகர், காண்ட் மற்றும் நவுடிகா போன்ற பிராண்டுகளை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் மேத்தா முக்கிய பங்கு வகித்ததாக தகவல்.
ரிலையன்ஸின் தரவுகளின்படி, கடந்த 2020-21ம் நிதியாண்டில் தர்ஷன் மேத்தா ரூ.4.89 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் ஈஷா அம்பானியின் வெற்றிக்கு பின்னால் இவர் ஒரு முக்கிய நபராக இருக்கிறார். அண்மையில் நடைபெற்ற மெகா ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகழ்வில் ஈஷா அம்பானி பேசுகையில், கடந்த ஆண்டில ரிலையன்ஸ் ரீடெயில் 3,300 கடைகளை திறந்துள்ளது.
78 கோடி வாடிக்கையாளர் வருகை மற்றும் 100 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளுடன் ரிலையன்ஸ் ரீடெய்ல் உலகில் அதிகம் பேர் வந்த டாப் 10 சில்லறை விற்பனை நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. மேலும் டாப் 100 சில்லரை விற்பனையாளர்கள் பட்டியலில் உள்ள ஒரே இந்திய சில்லரை விற்பனையாளரும் இதுதான்.
கடந்த 2 ஆண்டுகளில் ரிலையன்ஸ் ரீடெய்ல் ரூ.82,646 கோடி முதலீடு செய்துள்ளது. அனைத்து கையகப்படுத்துதல் மற்றும் முதலீடுகளுக்கு பிறகு, ரிலையன்ஸ் ரீடெய்லின் தற்போதைய ஸ்டோர் எண்ணிக்கை 18,040ஆக உள்ளது.
ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் தற்போது 2.5 லட்சம் பணியாளர்கள் உள்ளதாக ஈஷா அம்பானி தெரிவித்தார். 2022 ஆகஸ்ட் மாதம் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் தலைவராக அவரது மகள் ஈஷா அம்பானி அறிவிக்கப்பட்டார். ஈஷா அம்பானியின் விரிவாக்க யுக்திகள் பலனால் ரிலையன் ரீடெய்லின் மதிப்பு ரூ.8.4 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications