டாலர் முதல் ஜி7 வரையில்.. அடுத்த வாரம் தங்கம் விலையினை தீர்மானிக்கும் 5 முக்கிய காரணிகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு வாரத்திலேயே தங்கம் விலையானது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று சரிவில் காணப்பட்டது. இது தங்க முதலீட்டாளர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாக பார்க்கப்பட்டது. இது இன்னும் சரியுமா? என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில் வரவிருக்கும் வாரத்தில் தங்கம் விலையில் பிரதிபலிக்கும் முக்கிய காரணிகள் என்னென்ன? வரும் வாரத்தில் தங்கம் விலை எப்படியிருக்கும்? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

ஒரே வாரத்தில் ரூ.1000 சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா?

தங்கம் & வெள்ளி விலைக்கு ஆதரவு

தங்கம் & வெள்ளி விலைக்கு ஆதரவு

தொடர்ந்து அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தங்கம் விலையானது நடப்பு வாரத்திலேயே சரிவில் காணப்பட்டது.

இதற்கிடையில் நிபுணர்கள் ரெசசன் குறித்தான அச்சத்தினை எழுப்பியுள்ளனர். இதுவே தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது தங்கம் மற்றும் வெள்ளி விலைக்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .

கவனத்தில் கொள்ள வேண்டிய காரணிகள்

கவனத்தில் கொள்ள வேண்டிய காரணிகள்

அதோடு வரும் வாரத்தில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானின் பொருளாதாரம் குறித்தான தரவானது வெளியாகவுள்ளது. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக அமெரிக்காவின் முதல் காலாண்டு ஜிடிபி தரவு, ஜி7 கூட்டம் மற்றும் டாலர் மதிப்பு, ஓபெக் கூட்டம் என பலவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

ஜி 7 கூட்டம் 2022
 

ஜி 7 கூட்டம் 2022

ஜி7 கூட்டம் ஜூன் 26 - 28ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இது உக்ரைன் ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. ஆக இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது. இதில் சீனா மற்றும் வியட்னாமின் நடவடிக்கையானது மேற்கொண்டு தங்கம் விலையினை அதிகரிக்க வழிவகுக்கலாம்.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

அமெரிக்க டாலரின் மதிப்பானது தங்கம் விலையில் பிரதிபலிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். அமெரிக்காவின் மத்திய வங்கியானது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். மத்திய வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் நிலையில், இது ரெசசனை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது. இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

ஒபெக் கூட்டம்

ஒபெக் கூட்டம்

வரும் வாரத்தில் ஒபெக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் உற்பத்தி அதிகரிப்பு குறித்தான முக்கிய முடிவு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறிப்பாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தி அதிகரிப்பு குறித்தான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும். இது பணவீக்க விகிதத்திலும் எதிரொலிக்கலாம். இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.

அமெரிக்கா ஜிடிபி

அமெரிக்கா ஜிடிபி

அமெரிக்காவின் முதல் காலாண்டு ஜிடிபி தரவானது வெளியாகவுள்ளது. இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியினை இருப்பதை சுட்டிக் காட்டினால் இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம்.

ரூபாய் Vs டாலர்

ரூபாய் Vs டாலர்

இந்திய சந்தையில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவினைக் கண்டது. இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக தங்கம் விலையில் இது இந்திய சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dollar to G7 summit: Top 5 key reasons that may dictate gold price next week

The price of gold has seen a slight decline this week among investors. This was seen as a good opportunity for gold investors. It has also raised expectations that it will decrease further.
Story first published: Sunday, June 26, 2022, 13:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X