உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் Thanksgiving பரிசாக அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலா இரண்டு பங்குகளை கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
விண்வெளி பயணத்தையும், விண்வெளி தொழில்நுட்பத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டு புரட்சி செய்துள்ள ஸ்பேஸ்எக்ஸ் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது, மட்டும் அல்லாமல் அதிகரிக்கும் கம்பியூட்டிங் பவர் தேவையைப் பூர்த்தி செய்யவும். ஏஐ துறைக்கான பலத்தை விண்வெளியில் இருந்து கொடுக்கவும் விண்ணில் டேட்டா சென்டர் அமைப்பதற்காக 10 லட்சம் செயற்கைகோள்களை ஏவுவதற்கு அமெரிக்க விண்வெளி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் எலான் மஸ்க் Thanksgiving நாளில் டிவிட்டர் ஒரு முக்கிய பதிவை வெளியிட்டார். இதில் அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா 2 ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் அளிக்கப்படும், இதில் ஒன்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் மூலமாகவும், மற்றொன்று தனிப்பட்ட முறையில் தனது பங்கு இருப்பில் இருந்து கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சார்பாக அளிக்கப்படும் பங்குகளை அடுத்த மாதம் டிரான்ஸ்பர் செய்யப்படும் என்றும், அடுத்த வருடம் ஜூன் மாதம் தனக்கான பங்குகள் இருப்புகள் மீதான லாக் எடுக்கப்பட்ட பின்பு எலான் மஸ்க் தனது பங்குகளை பகிர உள்ளதாக தெரிவித்தார்.
ஸ்பேஸ்எக்ஸ் வேற்று கிரகத்தில் வாழ்வதற்கான வாய்ப்புகளையும், சூரியனின் எனர்ஜியில் இம்மியளவு உருவாக்கினால் இந்த பங்குகளின் மதிப்பு பல மடங்கு உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதை சாதிக்கப் பல தடைகளும், சவால்களும் இருந்தாலும், இதற்கான பாதைகள் உள்ளதாக தெரிவித்தார். இதனால் இந்த பங்குகளை அமெரிக்க குழந்தைகள் விற்காமல் வைத்திருக்க வேண்டும் என தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார்.
unicef தரவுகள் படி அமெரிக்காவில் 2023 நிலவரத்தின் அடிப்படையில் சுமார் 74.11 மில்லியன் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு தலா 2 பங்குகள் எனில் கிட்டத்தட்ட 149 மில்லியன் பங்குகள் அளிக்க வேண்டும்.
நேற்றைய ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளின் 127.44 டாலர் விலையை வைத்து கணக்கிட்டால் கிட்டத்தட்ட 18.99 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை எலான் மஸ்க் அமெரிக்க குழந்தைகளுக்கு கொடுக்கிறார். இந்திய ரூபாய் மகிப்பில் இது கிட்டத்தட்ட 1.76 லட்சம் கோடி ரூபாயாகும். இத்தகைய பெரும் மதிப்பிலான பங்குகளை இந்திய பணக்காரர்களான முகேஷ் அம்பானி, கௌதம் அதானியால் நன்கொடியாக அளிக்க முடியுமா..?
மேலும் இந்த பங்குகள் நேரடியாக குழந்தைகளின் கணக்கிற்கு செல்ல எலான் மஸ்க், டிரம்ப் அக்கவுன்ட்-ஐ பயன்படுத்த உள்ளது.
டிரம்ப் கணக்கு என்பது அமெரிக்காவில் உள்ள 18க்கு கீழ் இருக்கும் குழந்தைகளின் எதிர்காலச் சேமிப்பு மற்றும் முதலீட்டிற்காக அமெரிக்க அரசு அறிமுகப்படுத்திய ஒரு சிறப்பு சேமிப்புத் திட்டமாகும். இதை சிறப்பாக பயன்படுத்தும் வகையில் எலான் மஸ்க் வெறும் 19 பில்லியன் டாலர் செலவில் சுமார் 74 மில்லியன் புதிய பங்குதாரர்களை பெற்றுள்ளார்.
இந்த 19 பில்லியன் டாலர் என்பது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பான 1.72 டிரில்லியன் டாலரில் வெறும் 1.10 சதவீதம் மட்டுமே. மேலும் புதிய முதலீட்டாளர்கள், அதிலும் பங்குகளை விற்காத பங்குதாரர்களை பெற்றது மூலம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை தடுமாற்றத்தை பெரியளவில் குறைக்க முடியும். இதனால் தொடர்ந்து வேகமாக வளர்ச்சி பாதையில் பயணிக்க முடியும்.
மேலும் எலான் மஸ்க்-கிற்கு தனது தனிப்பட்ட சொத்து மதிப்பில் 9.5 பில்லியன் டாலர் என்பது சிறு தொகையே. எலான் மஸ்க் பங்குகளை கொடுப்பதாக அறிவித்த விலையில் நேற்றைய வர்த்தகத்தில் ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் விலை 1.30 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் விட்ட தொகையை முதல் நாளிலேயே பெற்றுள்ளது ஸ்பேஸ்எக்ஸ்.


Click it and Unblock the Notifications

