என்விடியா-வை விடுங்க.. பிளிப்கார்ட் சிஇஓ ராஜினாமா செய்தது தெரியுமா..?

உலகமே என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் வெளியேறி மீண்டும் சிஇஓ பதவிக்கு வந்துள்ளதைப் பேசி கொடுக்கும் இருக்கும் நிலையில் இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் அதிர்ச்சி அளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் முக்கிய நிறுவனமாக இருக்கும் பிளிப்கார்ட் கடந்த சில மாதங்களாக ஊழியர்கள், நிர்வாகம் மத்தியில் பல்வேறு பிரச்சனைகள் வெடித்த நிலையில், இந்நிறுவனத்தை 11 வருடமாக நிர்வாகம் செய்து வந்த KK என அழைக்கப்படும் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

 என்விடியா-வை விடுங்க.. பிளிப்கார்ட் சிஇஓ ராஜினாமா செய்தது தெரியுமா..?

இதுகுறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக ஊழியர்கள் உடனான டவுன்ஹால் கூட்டத்தில் கல்யாண் தெரிவித்தார். மேலும் இந்நிறுவனத்தின் சீஃப் ப்ராடெக்ட் மற்றும் டெக்னாலஜி ஆபிசராக இருக்கும் பாலாஜி தியாகராஜன் இடைக்கால சீஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் இந்த புதன்கிழமை பிளிப்கார்ட் நிறுவனத்தின் வரலாற்றில் முக்கிய நாளாக மாறியுள்ளது.

இந்தியா ரீடைல் சந்தையில் நேரடியாக நுழைய முடியாத அமெரிக்காவின் வால்மார்ட், பிளிப்கார்ட் மற்றும் அதன் கிளை நிறுவனங்களை மொத்தமாகக் கைப்பற்றி இந்தியாவில் தனது வர்த்தகத்தை இயக்கி வருகிறது.

Also Read

வால்மார்ட் கைப்பற்றலுக்குப் பின்பு பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்களான சச்சின் பன்சால், பின்னி பன்சால் வெளியேறிய நிலையில், பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஆரம்பக்கால முதலீட்டாளரான டைகர் குளோபல் நிறுவனத்தின் மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்த KK பிளிப்கார்ட் சிஇஓவாக 2017ல் நியமிக்கப்பட்டார்.

இவர் 2013ல் Flipkart நிறுவனத்தில் இடைக்கால தலைமை நிதியியல் அதிகாரியாகவும் பணியாற்றினார். இதன் பின்பு தான் 2018 முதல் Flipkart குழுமத்தின் குரூப் சிஇஓ-வாகப் பொறுப்பேற்றார்.

தற்போதைய ராஜினாமா மூலம் கல்யாண் கிருஷ்ணமூர்த்தியின் 10 ஆண்டுக்கால தலைமை நிர்வாக பயணம் முடிவுக்கு வருகிறது, இவருடைய நிர்வாக காலத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகம் 5 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

பிளிகார்ட்-ன் வால்மார்ட் கைப்பற்றில் முக்கிய பங்காற்றியது மட்டும் அல்லாமல், கைப்பற்றலுக்குப் பின்பு இரு நிர்வாக மத்தியிலான சூழலை மேம்படுத்த கல்யாண் கிருஷ்ணமூர்த்தி மிகப்பெரிய அளவில் உதவினார் என வால்மார்ட் இண்டர்நேஷ்னல் சிஇஓ கிரிஸ் நிகோலஸ் தெரிவித்துள்ளார். மேலும் கல்யாண் கிருஷ்ணமூர்த்தியின் அடுத்தடுத்து முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் எனவும் கிரிஸ் தெரிவித்துள்ளார்.

பிளிப்கார்ட் கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது, இதில் முக்கியமாக ஐபிஓ வெளியிடுவதில் தாமதம், ஐபிஓ வெளியிட முடியாத காரணத்தால் புதிய முதலீட்டு ஆதாரங்களை தேடியது போன்ற பிரச்சனைகள் நிலவியது.

இதை தாண்டி பிளிப்கார்ட் நிறுவனத்தின் Stock Buyback நடவடிக்கையில் தற்போது இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, ஏற்கனவே வெளியேறிய முன்னாள் ஊழியர்களிடம் பாரபட்சம் காட்டுகிறது என முன்னாள் Flipkart ஊழியர்கள் 1,000-க்கும் மேற்பட்டோர் வால்மார்ட் நிர்வாகக் குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+