ஆடிப்போன அமெரிக்கா.. உளவுத்துறை, நிதித்துறை மீது சைபர் அட்டாக்.. நினைத்தது அப்படியே நடக்குதே..!!

ஐரோப்பாவில் நடந்தது போலவே அமெரிக்காவிலும் மிகப்பெரிய சைபர் அட்டாக் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிரம்ப் அரசு சிறப்புக் குழு அமைத்து பழைய டெக் கட்டமைப்புகளைக் கூடுதல் பாதுகாப்புடன் புதிதாக மேம்படுத்தும் பணிகளை சில நாட்களுக்கு முன்பு துவங்கியது.

இந்த நிலையில் நேற்று அமெரிக்காவின் உளவுத்துறை மற்றும் நிதியமைச்சகத்தின் மீது சைபர் அட்டாக் நடந்துள்ளது. டெக்னாலஜியில் உச்சம், பாதுகாப்பின் கிங்மேக்கர் எனக் கூறிக்கொள்ளும் அமெரிக்காவில் ஒரே நாளில் 3 முக்கிய அமைப்புகள் மீது சைபர் அட்டாக் நடந்துள்ளது பலரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

ஆடிப்போன அமெரிக்கா.. உளவுத்துறை, நிதித்துறை மீது சைபர் அட்டாக்.. நினைத்தது அப்படியே நடக்குதே..!!

அமெரிக்க நிதிப் புலனாய்வு அமைப்பு

அமெரிக்க நிதித்துறையின் கீழ் பல்வேறு அமைப்புகளும், பிரிவுகளும் செயல்படும் வேளையில் நிதிப் புலனாய்வு அமைப்பான FinCEN என அழைக்கப்படும் Financial Crimes Enforcement Network அமைப்பின் மீது நேற்று சைபர் அட்டாக் நடந்துள்ளது.

FinCEN அமைப்பின் மீதான சைபர் அட்டாக் மூலம் அனுமதியின்றி தனது டிஜிட்டல் கட்டமைப்புக்குள் நுழைந்துள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது, மேலும் முன்னெச்சரிக்கையாக சில முக்கிய தொழில்நுட்ப சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது FinCEN நிர்வாகம்.

மேலும் இந்த தாக்குதல் மூலம் எத்தகைய தகவல்கள் திருடப்பட்டு உள்ளது, யார் தாக்குதல் நடத்தியுள்ளனர் போன்ற தகவல்கள் இன்னும் FinCEN அமைப்பு தெரிவிக்கவில்லை.

FinCEN அமைப்பின் முக்கியமான பணியே அமெரிக்க நிதி அமைப்பில் நடக்கும் சட்டவிரோதமான பணப் பரிமாற்றங்களைக் கண்காணிப்பது தான். இத்தகைய பாதுகாப்பான, அதிகாரமிக்க அமைப்பின் மீது தாக்குதல் நடந்துள்ளது பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

Also Read

மக்கள் மத்தியிலும், நிறுவனங்கள் மத்தியிலும் நடக்கும் அனைத்து விதமான நிதி பரிமாற்றங்களைப் பல மட்டங்களில் சந்தேகம் ஏற்படாதா வகையில் ஆய்வு செய்யும் பலம் கொண்ட FinCEN மீது சைபர் அட்டாக் நடந்துள்ளது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் ஜேபி மோர்கன் சேஸ் வாங்கியில் முக்கிய வாடிக்கையாளர்களின் தரவுகளை
சைபர் அட்டாக் மூலம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த FinCEN அமைப்பு பணமோசடி, பணசலவை, பயங்கரவாத அல்லது தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பது போன்ற முறையற்ற பண பரிவர்த்தனைகளை தடுப்பது அடிப்படை பணியாகும்.

Recommended For You

அமெரிக்க உளவுத்துறை மீதும் சைபர் அட்டாக்

ஒருபக்கம் FinCEN அமைப்பு பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் மறுபக்கம் அமெரிக்காவின் உளவுத் துறையான CIA மீதும், அந்நாட்டின் உளவுத்துறை இயக்குநர் அலுவலகமான ODNI ஆகியவை பிரத்தியேகமாகப் பயன்படுத்தும் ஒரு ஒப்பன் சோர்ஸ் இன்டலிஜென்ஸ் அமைப்பு மீது சைபர் அட்டாக் நடந்துள்ளது என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. FinCEN அமைப்பின் மீது நடத்த சைபர் அட்டாக்கிற்கும் இதற்கும் தொடர்புடையதா என்பது உறுதி செய்யப்படவில்லை.

பொதுவெளியில் கிடைக்கக்கூடிய பல்வேறு தகவல்களை ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படும் இன்டலிஜென்ஸ் அமைப்பு மீது நடந்துள்ள சைபர் அட்டாக் மூலம் எத்தகைய தகவல் திருடப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகவில்லை என்பதை CIA அமைப்பு உறுதி செய்யவில்லை என்றாலும் AP செய்தி தளம் ரகசியத் தகவல்கள் இதில் கசியவில்லை என்று தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 3 முக்கிய அமைப்புகளில் தாக்குதல் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதேவேளையில் தான் மைக்ரோசாப்ட் சமீபத்தில் எதிர்கொண்ட Outage பிரச்சனையை இனி வரும் காலத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக Code Red அறிவித்து ஒட்டுமொத்த நிறுவனமும் இப்பிரச்சனையைச் சரி செய்வதில் இறங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+