சவுதியில் திடீர் அட்டாக்: 2 இந்தியர்கள் உட்பட 11 பேர் காயம்! Financial District கட்டிடத்தை தாக்கிய ஹவுதிக்கள்!

வளைகுடாவில் அமெரிக்கா - ஈரான் மத்தியிலான போர் தாக்குதல் நடந்து வரும் இதேவேளையில் சவுதி அரேபியா - ஹவுதி படைகளுக்கு மத்தியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்று சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்-ல் இருக்கும் வங்கி, முதலீட்டு, கார்ப்ரேட் அலுவலங்கள் நிறைந்த KAFD என்னும் அழைக்கப்படும் Financial District பகுதியில் ஒரு உயரமான கட்டிடம் மீது ஹவுதி கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சவுதியில் திடீர் அட்டாக்: 2 இந்தியர்கள் உட்பட 11 பேர் காயம்! Financial District கட்டிடத்தை தாக்கிய ஹவுதிக்கள்!

இந்த தாக்குதலைச் சவுதி அதிகாரிகள் உறுதி செய்துள்ளது மட்டும் அல்லாமல் இந்த கொடூரமான தாக்குதலைப் பயங்கரவாதத் தாக்குதல் என சவுதி அரசு அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்த முதல் கட்ட தகவலில் சுமார் 11 பேர் காயமடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இத்தாக்குதலில் காயமடைந்தவர்களில் 2 சவுதி அரேபியர்கள், 2 இந்தியர்கள், 3 நேபாள நாட்டினர், 4 எகிப்து நாட்டினர் என தெரிய வந்துள்ளது.

Also Read

கடந்த சில மாதங்களாக யெமன் நாட்டில் பெரும்பகுதியைக் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுதி படையினர், சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள், எண்ணெய் கட்டமைப்புகள், சவுதி ஆராம்கோ தலைமையகம், எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் என குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மேலும் ஹவுதி படைகள் தங்களுடைய தாக்குதல் எல்லையைத் தொடர்ந்து சவுதியில் விரிவாக்கம் செய்துள்ளது மூலம் இன்று அந்நாட்டின் முக்கிய வர்த்தக பகுதியான KAFD என்னும் அழைக்கப்படும் Financial District பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Recommended For You

இதற்கு முன்பு ஹவுதி படைகள் நவம்பர் 8ஆம் தேதி சவுதி அரசுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான அராம்கோ-வின் தலைமையகத்தில் தாக்குதல் நடத்தியதில் பெரும் பாதிப்புக்குள்ளானது.

ஜூலை மாதம் முதல் சவுதி அரேபிய ராணுவமும், யெமன் நாட்டின் ராணுவமும் ஹவுதிக்கள் எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ஆனாலும் ஹவுதி படையினரின் விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதேவேளையில் ஹார்முஸ் வழித்தடத்தில் ஈரான் படைகள் வைத்த கடல் கண்ணிவெடிகள் மீது மோதி 6 எண்ணெய் கப்பல்கள் தீப்பற்றி எறிந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+