எப்போதெல்லாம் பொருளாதாரத்தில் சமநிலை தடுமாறுகிறதோ அப்போதெல்லாம் தங்கம் முக்கியமான முதலீடாக மாறும், உதாரணமாக 2008ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் சரிந்தபோது, 2020ஆம் ஆண்டில் உலகையே வீட்டி கட்டிப்போட்ட கொரோனா தொற்றின் போது தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கும் மிகப்பெரிய லாபம் கிடைத்தது. இப்போது இதேபோன்ற ஒரு வாய்ப்பு 2026ல் கிடைத்துள்ளது.
இதனால் 2008, 2020ல் வாய்ப்பை இழந்தவர்கள் 2026ல் கிடைத்திருக்கும் வாய்ப்பை மிஸ் செய்துவிட வேண்டாம்.

எந்தொரு முதலீட்டுச் சொத்தாக இருந்தாலும் அதன் உச்ச விலையில் வாங்குவது ஆபத்தானது, காரணம் அந்த உச்சநிலையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் சரியலாம். அதே சொத்து உச்சவிலையில் இருந்து குறைவாக இருக்கும் போது, சந்தையில் அதற்கு போதுமான டிமாண்ட் இருக்கும் பட்சத்தில் மீண்டும் உச்ச நிலையை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இத்தகைய நிலையில் தான் தங்கத்திற்கும், வெள்ளிக்கும் தற்போது கிடைத்துள்ளது, ஏன் மொத்த கமாடிட்டி சந்தையும் இந்த நிலையில் தான் உள்ளது.
2026ஆம் ஆண்டின் உச்ச விலையிலிருந்து தங்கம் 36 சதவீதமும், வெள்ளி 67 சதவீதமும் சரிந்துள்ளது. இதேபோல் பிளாட்டினம் 56 சதவீதமும், காப்பர் 19 சதவீதமும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 39 சதவீதமும், அமெரிக்க இயற்கை எரிவாயு 79 சதவீதமும் சரிந்துள்ளன. இந்த வீழச்சி தான் நீண்ட கால முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் அறியப் பொக்கிஷம் என The Gold & Silver Club ஆய்வு தலைவர் லார்ஸ் ஹேன்சன் கூறுகிறார்.
2008-ல் தங்கம் கொடுத்த வாய்ப்பு
2008ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடி உருவாகி, வங்கிகள் பெரும் சிக்கலில் மாட்டிய போது, உலகளாவிய பொருளாதாரம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
இப்போது தங்கம் முக்கியமான முதலீடாக மாறியது, இதன் விளைவாக அக்டோபர் 2008ல் தங்கம் ஒரு அவுன்ஸ் 712.50 டாலராக இருந்த நிலையில், செப்டம்பர் 2009ல் 1,000 டாலரை எட்டியது, இதன் பின் 2011ல் 1,895 டாலர் வரையில் உயர்ந்தது. இதன் மூலம் மொத்தம் 166% உயர்ந்தது.
இதேவேளையில் பொருளாதார சூழ்நிலை மாறிய பின்பு மீண்டும் 1000 டாலருக்குச் சரிந்த போது 90 சதவீதம் வரையில் உயர்வதற்கான வாய்ப்பை கொண்டு இருந்தது.
2020 கொரோனா காலத்தில் பெரிய லாபம்
கொரோனா தொற்று காலத்தில் உலகளவில் வர்த்தகம், பங்குச்சந்தை முடங்கிய நிலையில் பெருமளவிலான முதலீடுகள் தங்கம் மீது திரும்பிய காரணத்தால் 2019ல் 35220 ரூபாயாக இருந்த 10 கிராம் 24 கேரட் தங்கம் 52,670 ரூபாய் வரையில் உயர்ந்தது.
இதேகாலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை 3 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்தது. மேலும் காப்பர் விலை 84 சதவீதமும், சோளம் விலை 80%க்கும் அதிகமாக உயர்ந்தது.
2026ல் நிலை என்ன..?
நவம்பர் மாதம் மட்டுமே தங்கம் வெள்ளி விலையில் பெரும் மாற்றம் பதிவு செய்துள்ளது. பத்திர சந்தை, டாலர் மதிப்பு ஆகியவற்றின் காரணமாகத் தங்கம் விலை நவம்பர் மாதம் 14 மாத சரிவை எட்டியது.
இதன் மூலம் நவம்பர் 20 அன்று தங்கம் ஒரு டிராய் அவுன்ஸ் சுமார் 3,500 டாலராக இருந்தது, வெறும் 3 நாட்களில் அதாவது நவம்பர் 23ஆம் அன்று 3,700 டாலரைத் தொட்டது. இதேபோல் வெள்ளி விலை 40.70 டாலரிலிருந்து 44 டாலராக உயர்ந்தது.
சரி 2027ல் தங்கம் விலை எப்படி இருக்கும்..?
உலகின் முன்னணி முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி தனது கணிப்பில் 2027ஆம் ஆண்டின் 2ஆம் பாதியில் தங்கம் விலை சர்வதேசச் சந்தையில் 5,000 டாலருக்கு மேல் செல்லலாம் எனக் கணித்துள்ளது.
இதேபோல் கோல்டுமேன் சாக்ஸ் 2027ஆம் ஆண்டு இறுதியில் தங்கம் விலை ஒரு டிராய் அவுன்ஸ் 4,650 டாலருக்கும், 2028ஆம் ஆண்டின் இறுதியில் 5600 டாலருக்கு உயரும் என கணித்துள்ளது.
இந்த விலை உயர்வுக்கு பலம் சேர்க்கும் வகையில் உலகளாவிய மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கி வருகிறது. மேலும் உலகளவில் பெரும் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் Gold ETF-ல் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால் தற்போது தங்கம், வெள்ளியில் முதலீடு செய்வது உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு 3வது வெல்த் டிரான்ஸ்பர் வாய்ப்பாக அமையலாம் என கூறுகிறார் The Gold & Silver Club ஆய்வு தலைவர் லார்ஸ் ஹேன்சன்.
தங்கம் வெள்ளி மட்டும் அல்லாமல் கமாடிட்டி சந்தையில் பிளாட்டினம், இயற்கை எரிவாயு, கோதுமை, காப்பர், கச்சா எண்ணெய் போன்றவற்றிலும் மிகப்பெரிய லாப உயர்வு வாய்ப்புகள் உள்ளது.
உதாரணமாக உலகம் முழுவதும் குளிர்காலம் துவங்கும் வேளையில் இயற்கை எரிவாயு மற்றும் எரிபொருள் அதிகம் தேவைப்படும். ஈரான் மூலம் இன்னும் சப்ளை இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் இதன் விலை உயரலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Tamil.Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

