தங்கம் விலை 2வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது, பணவீக்கத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து வட்டி விகிதத்தை உயர்த்தினால் அமெரிக்கப் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்குள் மாட்டிக்கொள்ளும் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் பெடரல் ரிசர்வ்-க்கு மறைமுக செய்தியைக் கொடுத்த நிலையில் தங்கம் 2 நாட்களாக உயர்ந்து வருகிறது.
இன்று சென்னை ரீடைல் சந்தை 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 124 ரூபாய் உயர்ந்து 12,780 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. இதுவே 22 கேரட் தங்கம் விலை 115 ரூபாய் உயர்ந்து 11,715 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை தொடர்ந்து எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 1 கிலோ 1,75,000 ரூபாய் அளவிலேயே வர்த்தகமாகிறது.
இன்றைய உயர்வு மூலம் 14 மாத சரிவில் இருந்த தங்கம் விலை மீண்டுள்ளது.

ஆனால் தங்கம் விலை உயர்வுக்கு ஒரு முக்கியமான சிக்கல் உள்ளது, நவம்பர் 25ஆம் தேதி அமெரிக்காவின் அக்டோபர் மாத ரீடைல் பணவீக்க தரவுகள் வெளியாக உள்ள நிலையில், பெடரல் ரிசர்வ் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து முக்கிய முடிவை எடுக்க உள்ளது. இந்த ஒரு புள்ளிவிவரம் தான் தங்கம் விலையின் போக்கைத் தீர்மானிக்கும்.
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் ஏஐ முதலீடுகள் போதுமான லாபம் வருமா என்ற சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தார். இந்த சந்தேகத்திற்கு ஜென்சன் ஹுவாங் மீண்டும் என்விடியா-வின் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டது மூலம் அமெரிக்க ஏஐ துறையின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 2 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் தற்போது இருக்கும் கேள்வி பணவீக்கம் மட்டுமே.
இன்று சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் விலை 0.3 சதவீதம் உயர்ந்து 3,643.47 டாலராக வர்த்தகமாகிறது. நேற்றைய வர்த்தகத்தில் 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்த தங்கம் தற்போது பணவீக்க தரவுகளின் அச்சம் காரணமாக வெறும் 0.2 சதவீத உயர்வில் மட்டுமே உள்ளது.
என்விடியா-வில் ஜென்சன் ஹுவாங் வருகை மூலம் மொத்த முதலீட்டுச் சந்தையும் பங்குச்சந்தை பக்கம் திரும்பியதும் தங்கம் விலை உயர்வில் மந்த நிலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அமெரிக்காவின் பணவீக்க அளவு குறைவதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில் பெட்ரல் ரிசர்வ் எத்தகைய முடிவை எடுக்கும் என்பதில் பெரும் கேள்வியும் குழப்பமும் உள்ளது.
மேலும் பெடரல் ரிசர்வ் தலைவர் கெவின் வார்ஷ் அமெரிக்க பொருளாதாரத்திற்காகவும், டிரம்ப் அரசுக்காகவும் சாதமான முடிவை எடுப்பாரா அல்லது பணவீக்கத்திற்கு ஏற்ப வட்டி விகிதம் உயர்த்துவாரா என்பதை டிசம்பர் 9ஆம் தேதி நடக்கும் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளில் தெரிய வரும்.


Click it and Unblock the Notifications
