இந்திய மக்களுக்கு தங்கம் விலை குறையும் போதும் சரி, உயரும் போதும் சரி, தங்கம் வாங்கலாமா என்ற யோசனை எல்லோருக்கும் இருக்கும். ஆனால் சரியான நேரத்தில் தான் நாம் வாங்குகிறோமா என்ற கேள்வியும், சந்தேகமும் எப்போதும் இருக்கும்.
இந்த சந்தேகத்தைத் தீர்க்க வேண்டுமாயின், தங்கம் வாங்குவோர் முன்கூட்டியே தாயாராகும் பட்சத்தில் சந்தை சூழ்நிலையை எளிதாக புரிந்துகொண்டு தங்கத்தை லாபகரமாக வாங்கிவிட முடியும்.
அப்படி தற்போது தங்கம் வாங்க திட்டமிடுவோர் 3 முக்கியமான தேதிகளை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

2026ஆம் ஆண்டில் தங்கம் அதன் உச்ச விலையான 10 கிராம் 24 கேரட் தங்கம் 1.83 லட்சத்தில் இருந்து தற்போது 31 சதவீதம் சரிந்து 1.26 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமாகிறது (இன்றைய விலை உயர்வையும் சேர்த்து).
தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை அமெரிக்க நிதியமைச்சரின் பேச்சால் இன்று அதிரடியாகக் கிராமுக்கு 148 ரூபாய் உயர்ந்து, தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த பங்குச்சந்தையை 1900 புள்ளிகள் வரையில் சரிய வைத்தது.
இந்த நிலையில் நவம்பர் 25, டிசம்பர் 4, டிசம்பர் 9 ஆகிய 3 தேதிகள் தங்கம் விலையின் போக்கை தலைகீழாக மாற்றும் வல்லமை கொண்டது. தற்போதைய சூழ்நிலையில் தங்கம் விலை அமெரிக்க வட்டி விகிதம், டாலர் மதிப்பு ஆகியவற்றின் மூலம் நிர்ணயம் செய்யப்படக்கூடிய வல்லமை கொண்டு.
நவம்பர் 25ஆம் தேதி
அந்த வகையில் நவம்பர் 25ஆம் தேதி அமெரிக்காவின் அக்டோபர் மாத ரீடைல் பணவீக்க தரவுகள் வெளியாகிறது. இந்த தரவுகள் தான் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தலாமா அல்லது அப்படியே தொடலாமா என்ற முக்கிய முடிவை எடுக்கும் ஆயுதமாகச் செயல்படும்.
அதாவது வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் தங்கம் விலை தற்போதைய நிலையில் இருந்து தடாலடியாகச் சரியும், இதுவே வட்டி விகிதத்தை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்தால் தங்கம் விலை உயர வாய்ப்புகள் உள்ளது.
டிசம்பர் 4ஆம் தேதி
அடுத்தாக டிசம்பர் 4, இந்த நாளில் அமெரிக்காவின் நவம்பர் மாதத்திற்கான வேலைவாய்ப்பு தரவுகள் வெளியாக உள்ளது. இந்த தரவில் நவம்பர் மாதம் எவ்வளவு பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது, எத்தனை பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் அமெரிக்காவில் தவிக்கிறார்கள் என்பது தெரியும்.
உதாரணமாக நவம்பர் மாத ரிப்போர்ட்டில் அமெரிக்காவில் அதிக வேலைவாய்ப்பு உருவாகும் நிலையை இருந்தால் பெடரல் ரிசர்வ் வட்டி விகித உயர்வைத் தாராளமாக நடைமுறைப்படுத்தும், காரணம் வேலைவாய்ப்பு அதிகமாகும் காரணத்தால் வட்டி உயர்வு தாக்கத்தை மக்களால் எதிர்கொள்ள முடியும். இது முற்றிலும் தங்கம் விலையைக் குறைக்கக் கூடிய காரணி.
இதுவே வேலைவாய்ப்பு உருவாக்கம் குறைவாக இருந்தால் வட்டி விகித உயர்வைத் தள்ளிப்போட வாய்ப்புகள் அதிகம், இதனால் தங்கம் விலை உயரக்கூடும்.
டிசம்பர் 9ஆம் தேதி
அடுத்தாக டிசம்பர் 9, பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு தரவுகளை அடிப்படையாக வைத்து வட்டியை உயர்த்தலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் பெடரல் ரிசர்வ்-ன் ஜெட்ஜ்மென்ட் டே.
இந்த நாணய கொள்கை கூட்டத்தில் பெட் Hawkish tone கொண்டு இருந்தால் தொடர்ந்து வட்டி விகிதம் உயர்வு நிச்சயம் என்பதை புரிந்துகொண்டு தங்கம் விலையில் பெரும் சரிவு ஏற்படுவது உறுதி. அடுத்தாக பெட், dovish signal கொடுத்தால் நிலைமை வேறு.
இந்திய சந்தை
இந்த 3 தேதிகளுமே இந்திய தங்க நகை சந்தைக்கு முக்கியம், இந்தியாவில் தங்கம் விலை என்பது சர்வதேச சந்தை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் 2 காரணியும் சாதகமாக இருந்தால் மட்டுமே தங்கம் விலை உயரும், இல்லையெனில் சரியும்.


Click it and Unblock the Notifications
