இன்ஜினியர் மாப்பிள்ளை, மாசம் 3 லட்சம் சம்பளம்.. ஆனாலும் பொண்ணு கிடைக்கல..!

திருமணம் என்று வரும் போது ஆண், பெண் என இருபாலருக்கும் கல்வி, சம்பளம், வேலை ஆகியவை மிகவும் முக்கியமான அளவுகோளாக இருந்து வருகிறது, ஆனால் சில நேரங்களில் வருமானம் அதிகமாக இருந்தாலும் செய்யப்படும் வேலை பெரும் கேள்விக்குறியாக மாறுகிறது.

இதற்கு உதாரணமாக டிவிட்டரில் அபியோகி என்ற நபர் செய்த பதிவு தற்போது பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

இன்ஜினியர் மாப்பிள்ளை, மாசம் 3 லட்சம் சம்பளம்.. ஆனாலும் பொண்ணு கிடைக்கல..!

அபியோகி செய்த டிவிட்டர் பதிவில் தனது நண்பரின் மகன் கார்ப்ரேட் வேலையை விட்டுவிட்டு தொழில் துவங்கிய காரணத்தால் தற்போது திருமணம் தொடர்ந்து காலதாமதமாகி வருவதாக கூறியுள்ளார். தனது நண்பரின் மகன் நல்ல கல்லூரியில் படித்து மற்ற பிள்ளைகள் போல் நல்ல கார்ப்ரேட் வேலையில் சேர்ந்துள்ளார்.

இந்த பணியில் ஒரு சில வருடத்திலேயே வருடத்திற்கு 12 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கு அளவுக்கு உயர்ந்துள்ளார். இதன் பின்பு அந்த நபர் தனக்கான பாதையை, தான் விரும்பிய பாதையில் உருவாக்க முடிவு செய்துள்ளார்.

Also Read

இதனால், தான் நிலையான சம்பளம் வரும் கார்ப்ரேட் வேலையை விட்டுவிட்டு தொழில் துவங்க முடிவு செய்தார். தற்போது இந்தியா முழுக்க டிரெண்டாகி வரும் புட் டிரக் வர்த்தகத்தைத் தனது நண்பர் உடன் இணைந்து துவங்கினார்.

புட் டிர்க் வர்த்தகம் என்பது சற்று கடினம் என்றாலும் விரும்பி செய்யும் அந்த இளைஞர் காலை 9 - 11 மணி வரையிலும், மாலையில் 6 - 10 வரையிலும் பணியாற்றுகிறார்.

இதன் மூலம் மாதம் 3 லட்சம் வரையில் லாபமாக மட்டுமே சம்பாதிக்கிறார், இதேபோல் அந்த இளைஞன் தான் விரும்பிய பணியைச் செய்து மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

வருடம் 12 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் நபர் இந்த பிஸ்னஸ் மூலம் ஒரு மாதத்திற்கே 3 லட்சம் வரையில் சம்பாதிக்கிறார்.

Recommended For You

ஆனாலும் திருமணம் தொடர்ந்தது தள்ளிப்போவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது எனக் கூறும் அபியோகி, இந்தியாவில் இன்னும் ஆண்களின் வேலையை வைத்து அவர்களின் தகுதி நிர்ணயம் செய்யப்படுகிறதா என்றால்.. ஆம் என்பது தான் பதில் என அபியோகி தனது பதிவை முடிக்கிறார்.

உண்மையிலேயே ஆண்களுக்கு மட்டும் தான் இத்தகைய பிரச்சனை இருக்கிறதா என்றால் இல்லை, பெண்களும் இதேபோன்ற பிரச்சனைகளைப் பல வழிகளில் எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் சம்பாதிக்கத் துவங்கியது மூலம் அவர்களுக்கான துணையைத் தேர்வு செய்வதில் அவர்களுக்கு முழு உரிமையும் உள்ளது என்பது தான் நிதர்சனம்.

இந்த பதிவுக்குப் பதில் அளித்த பலர் அந்த இளைஞருக்கு பெரியளவில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால், தொழில்முனைவோருக்கு இத்தகைய பிரச்சனை இருப்பது கவலை அளிக்கிறது. இதனால் இளம் தலைமுறையினர் (ஆண்கள் - பெண்கள்) சொந்தமாகத் தொழில் செய்யும் முயற்சிகளை எடுப்பதைத் தவிர்க்க வாய்ப்புகள் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+