EPFO அப்டேட்: தனியார் நிறுவன ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. இனி எல்லாமே உங்க கையில் தான்..!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO கோடிக்கணக்கான தனியார் நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது. இதன் மூலம் பிஎஃப் கணக்கில் பணம் பங்களிப்பு செய்யும் முறையே பெரிய மாற்றம் காண உள்ளது.

தற்போது ஊழியர்கள் தங்களது தகுதியான ஊதியத்தில் 12% தொகையை பிஎஃப் கணக்கில் மாதம் தோறும் பங்களிப்பாக செலுத்தி வருகின்றனர். ஊழியர்கள் விருப்பத்தின் அடிப்படையில் கூடுதல் தொகையை செலுத்தும் வசதி ஏற்கனவே இருந்தாலும், அது தற்போது நிறுவனங்களின் Payroll மூலமாகவே செல்கிறது. அதாவது கூடுதலாக நீங்கள் எவ்வளவு தொகையை பங்களிப்பு செய்ய விரும்புகிறீர்கள் என தெரிவித்தால் நிறுவனம் அதனை பிடித்து உங்கள் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கும். ஆனால் புதிய முன்மொழிவின்படி, நிறுவனங்களை சாராமல் ஊழியர்களே தங்கள் பிஎஃப் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்த முடியும்.

EPFO அப்டேட்: தனியார் நிறுவன ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. இனி எல்லாமே உங்க கையில் தான்..!!

அதாவது மாதம் தோறும் பிடித்தம் செய்யப்படும் 12% தொகை என இல்லாமல் கூடுதலாக நீங்கள் எவ்வளவு தொகையை பிஎஃப் கணக்கில் போட முடிவு செய்கிறீர்களோ அதனை நேரடியாக நீங்களே வங்கி கணக்கில் இருந்து பிஎஃப் கணக்கிற்கு செலுத்தலாம். இதனால் பிஎஃப் கணக்கில் பணம் வரவு வைக்கும் முழு அதிகாரமும் ஊழியருக்கே கிடைக்க உள்ளது.

இந்தியாவில் கிக் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் டிப்ஸ், உபரி வருமானம் மற்றும் ஃப்ரீலான்சர்களின் கூடுதல் வருமானம் போன்றவற்றை நேரடியாக பிஎஃப் கணக்கில் சேர்க்க இந்த திட்டம் வழிவகை செய்கிறது. கிக் ஊழியர்களுக்கு நிரந்த சம்பளம் இல்லை என்பதால் அவர்கள் மாதாந்திர வருமானத்திற்கு ஏற்ப பிஎஃப் பங்களிப்பை மாற்ற முடியும். எனவே ஒட்டுமொத்தமாகவே அனைத்து பிஎஃப் சந்தாதாரர்களுக்கும் இந்த நடைமுறையை கொண்டு வர முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read

பிஎஃப் கணக்கில் உள்ள பணத்திற்கு அரசு 8.25% வட்டி தருவதால் நம் ஓய்வூதிய சேமிப்பில் கூடுதல் தொகை பெற முடியும். பாதுகாப்பான அரசு உத்தரவாதம் கொண்டு முதலீடாகவும் பிஎஃப் இருப்பதால் பலரும் தாமாக முன் வந்து பிஎஃப் பங்களிப்பை அதிகரிப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

தற்போதைக்கு இது ஒரு முன்மொழிவாகவே இருக்கிறது விரைவில் இதன் தொழில்நுட்ப மற்றும் கொள்கை ரீதியான விவரங்கள் இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இப்படி நேரடியா செலுத்தப்படும் கூடுதல் பிஎஃப் பங்களிப்புகளுக்கு வருமான வரி சலுகைகள் வழங்குவது குறித்தும் தொழிலாளர் அமைச்சகம் நிதி அமைச்சகத்துடன் ஆலோசித்து வருகிறதாம்.

அண்மையில் பிஎஃப் அமைப்பின் மத்திய அறங்காவலர் குழுவின் 240-வது கூட்டம் நடந்தது. இதில், ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் பிஎஃப் தொகை பெறும் முறை Systematic Withdrawal Plan, பகுதியளவு தொகை எடுப்பதற்கான விதிமுறைகளில் தளர்வு ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பிஎஃப் பணத்தை, ஏடிஎம் மற்றும் யூபிஐ வாயிலாக எடுத்து பயன்படுத்தும் வசதியும் டிசம்பருக்குள் வர இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+