உலகின் மிகப்பெரிய ஏஐ சிப் தயாரிப்பு நிறுவனமாகவும், ஏஐ தொழில்நுட்பத்தின் மையப்புள்ளியாகவும், பல டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஏஐ சர்குலர் எக்னாமியின் ஆணிவேராக இருக்கும் என்விடியா நிறுவனத்தின் சிஇஓ பதவியில் நீக்கப்பட்ட ஜென்சன் ஹுவாங்கிற்கு மீண்டும் சிஇஓ பதவியை வாங்கி கொடுத்துள்ளார் டிரம்ப்.
4 பெண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த காரணத்தால் ஜென்சன் ஹுவாங் சிஇஓ பதவி முதல் அனைத்து நிர்வாக பொறுப்புகளில் இருந்து விலகினார்.

ஜென்சன் வெளியேறிய பின்பு அமெரிக்க ஏஐ தொழில்நுட்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியான நிலையில், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க அரசு நேரடியாக என்விடியா நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஜென்சன் ஹுவாங் மீண்டும் சிஇஓ பதவியில் உட்கார வைக்கப்பட்டு உள்ளார்.
கடந்த 48 மணிநேரத்தில் டிரம்ப், ஸ்காட் பெசென்ட், லட்நிக் ஆகியோர் என்விடியா நிர்வாக குழுவுடனும், ஜேடி வான்ஸ் ஜென்சன் ஹுவாங் உடனும் நேரடியாகப் பேசியுள்ளனர். இதன் பின்பு தான் திங்கட்கிழமை மாலை ஜென்சன் ஹுவாங்கிற்கு மீண்டும் சிஇஓ பதவி அளிக்கப்படுவதாக என்விடியா நிர்வாகம் தெரிவித்தது.
சரி ஏன் டிரம்ப் நேரடியாக இந்த விவகாரத்தில் இறங்க வேண்டும்?
ஜென்சன் ஹுவாங் நியமனத்திற்குப் பின்பு அமெரிக்கத் தொலைக்காட்சியான சிஎன்பிசி-க்கு பேட்டி அளித்த டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்-கிற்கு ஜென்சன் ஹுவாங் மீது அதிகப்படியான மதிப்பு உள்ளது, தற்போது என்விடியாவில் இருந்து ஜென்சன் மொத்தமாக வெளியேறிய நிலையில், ஜி ஜின்பிங் நேரடியாக ஜென்சனை அழைத்து பெரும் சம்பளத்துடன் ஹூவாய் போன்ற முன்னணி சீன டெக் நிறுவனத்திற்குத் தலைமை வகிக்கவும், ஏஐ சிப்-க்கான தொழில்நுட்பத்தை ஜென்சன் ஹுவாங் மூலம் பெறவும் வாய்ப்புள்ளது என டிரம்ப் வெளிப்படையாகத் தனது தலையீடு குறித்துப் பேசினார்.
ஜென்சன் அமெரிக்காவில் தவறாகவும், முறையற்ற வகையிலும் நடத்தப்பட்டால் கட்டாயம் அவர் சீனாவுக்குச் செல்ல வாய்ப்புள்ளது.
ஜென்சன் மற்ற தொழிலதிபர்கள் போல் அல்லாமல் என்விடியா தொழில்நுட்பத்தின் உச்சமாகப் பார்க்கப்படும் Blackwell chip technology அவர் தலைமையில் உருவாக்கப்பட்டது. இது ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பலம், இத்தொழில்நுட்பம் ஜென்சன் மூளையில் இருந்து பிறந்தது, இது அவருடைய குழந்தை போன்றது, இத்தொழில்நுட்பம் குறித்த முழுமையான பலம் அந்நிறுவனத்தில் யாருக்கும் தெரியாது என டிரம்ப் பேசினார்.
இந்த நிலையில் ஜி ஜின்பிங் அழைப்பை ஏற்று ஜென்சன் சீனாவுக்கு சென்றால் அது அமெரிக்காவுக்கு பெரும் இழப்பு.
மேலும் ஜென்சன் உடம்பில் சீன ரத்தம் உள்ளது. ஜென்சன் கோபப்பட்டால், கட்டாயம் இத்தகைய முடிவை எடுக்கக்கூடும், அப்படி சீனாவுக்கு ஜென்சென் சென்றால் இன்னும் பெரிய சாதனைகளையும், புரட்சிகளையும் சிப் தொழில்நுட்பத்தில் செய்ய வாய்ப்புள்ளது என டிரம்ப் தெரிவித்தார்.
தீர்வு...
ஏஐ தொழில்நுட்பத்தில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த வேண்டுமாயின் என்விடியாவும், அதன் தொழில்நுட்பமும் அமெரிக்காவுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்பது டிரம்ப் அரசின் நோக்கமாக உள்ளது.
இந்த நிலையில் தான், சீன பெண் உளவாளியுடன் கள்ள தொடர்பு வைத்திருந்தாலும் சரி என டிரம்ப் அரசு வெறும் 11 நாளில் தனது சிஇஓ பதவியை ஜென்சன் ஹுவாங்-கிற்கு திரும்ப பெற்றுக்கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications

