லித்தியத்திற்கு அடுத்தப்படியாக பிளாஸ்டிக்-கிற்கு ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஒரு கிராமத்தில் மக்கள் பிளாஸ்டிக் குப்பைகளை கொடுத்து தங்கம் நாணயம் வாங்கிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை அந்த கிராமத்தின் தலைவரால் அறிவிக்கப்பட்டு, இப்பொழுது அக்கிராமம் பிளாஸ்டிக் இல்லாத இடமாக மாறியுள்ளது.
தெற்கு காஷ்மீரின் அன்ந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சடிவாரா என்ற கிராமம் இப்பொழுது பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அக்கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் அறிவித்த ஒரு மெகா திட்டம்தான்.

பிளாஸ்டிக் கொடு - தங்கத்தை வாங்கிக்கோ : சடிவாரா கிராமத்தில் அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் அக்கிராமம் முழுவதும் பரவியிருந்துள்ளது. குறிப்பாக ஆறுகள் மற்றும் ஓடைகளில் அதிக அளவு பிளாஸ்டிக் இருப்பதை கண்ட அக்கிராமத்தின் பஞ்சாயத்து தலவைரான ஃபரூக் முகமது கனாய்க்கு ஒரு யோசனை வந்துள்ளது.
15 நாட்களில் நடந்த அதிசயம்! : அதனையடுத்து அவர் மக்கள் பிளாஸ்டிக் குப்பைகளைக் கொடுத்து தங்கத்தை வாங்கிச் செல்லும் ஒரு அற்புதமான திட்டத்தை மக்களுக்கு அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து சடிவாரா கிராம மக்கள் தலைவர் ஃபரூக்குடன் இணைந்து பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு 15 நாட்களில் அக்கிராமத்தை பிளாஸ்டிக் இல்லாத கிரமமாக மாற்றியுள்ளனர்.
200 கிலோ பிளாஸ்டிக் : சடிவாரா கிராமத் தலைவர் ஃபரூக்கின் அறிவிப்பின்படி, மக்கள் 20 குவிண்டால் (200 கிலோ) பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால், அவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக தரப்படும் என அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அக்கிராமம் இப்பொழுது பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக மாறியுள்ளது.

பிளாஸ்டிக் இல்லாத கிராமம் : இத்திட்டம் அறிமுகமாகி இரண்டே வாரங்களில் அக்கிராமம் பிளாஸ்டிக் இல்லாத கிரமமாக மாறியதை துணை ஆணையர் ஜனவரி 7 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இப்பணியில் அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு இந்த பணியை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
அரசு திட்டம் : பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் 2014 ஆம் ஆண்டு ஸ்வ்ச் பாரத் அபியான் திட்டம் ஒரு உந்துகோலாக இருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாகவும் ஃபரூக் கூறியுள்ளார்.
காஷ்மீர் டூ கன்னியாகுமாரி : தொடர்ந்து பேசிய ஃபரூக் இத்திட்டத்தை காஷ்மீரோடு மட்டும் விட்டுவிடாமல், காஷ்மீரை சுற்றியுள்ள கிராமம் தொடங்கி கன்னியாகுமரி வரை எடுத்துச் செல்ல தான் தயாராக இருப்பதாகவும், இந்தியாவை பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத நாடாக மாற்றப்போவதாகவும் கூறியுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications