செம சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு வழியாக நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததை போல் கொரோனாவுக்கு மருந்து 90% மேல் வெற்றி கண்டாகி விட்டது. இனியும் பாதுகாப்பு புகலிடமான விளங்கும் தங்கம் விலை அதிகரிக்குமா? அல்லது இனியாவது குறையுமா? என்பது தான் பலரின் கேள்வியாகவே இருக்கும்.

சரி இன்று தங்கம் விலை எப்படி இருக்கிறது? என்னென்ன காரணம்? நிபுணர்களின் கருத்து என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

ஒரு வழியாக உலகினையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தாகி விட்டது. இனி பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் எப்படி இருக்கும் வாருங்கள் பார்க்கலாம்.

தங்கம், வெள்ளி நேற்றைய நிலவரம்

தங்கம், வெள்ளி நேற்றைய நிலவரம்

சொல்லப்போனால் இந்த செய்தி நேற்று வெளியானதை அடுத்து, கடந்த எட்டு தினங்களாக திக்கி திணறி ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலையானது, நேற்று ஒரே நாளில் வீழ்ச்சி கண்டது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலையானது 5% வீழ்ச்சி கண்டது. இதே வெள்ளி விலையானது 7% வீழ்ச்சி கண்டது.

சர்வதேச சந்தையில் தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது நேற்று காலையில் அவுன்ஸூக்கு 1956 டாலர்களாக தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக 1848 டாலர்கள் வரையில் சென்று முடிவில் 1854.40 டாலர்களாக முடிவுற்றது. எனினும் இன்று காலை தொடக்கத்தில் 1870.10 டாலர்களாகவும் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது 33.55 டாலர்கள் அதிகரித்து, 1887.80 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

வெள்ளி விலையானது நேற்று 7% மேல் சரிந்த நிலையில், இன்று 3.14% ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது வெள்ளியின் விலையானது 3.14% ஏற்றம் கண்டு 24.445 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. நேற்று அதிகபட்சமாக 23.600 வரை சென்ற வெள்ளி விலையானது, முடிவில் 23.701 டாலர்களாக முடிந்தது. இன்று காலை தொடக்கத்திலும், 24.270 டாலர்களாக தொடங்கியது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலிய இந்திய சந்தையிலும் இன்று தங்கம் விலையானது சற்று ஏற்றம் கண்டு வருகின்றது. நேற்று 10 கிராம் தங்கம் விலையானது 2,500 ரூபாய் சரிந்த நிலையில், தற்போது 10 கிராமுக்கு 829 ரூபாய் அதிகரித்து, 50,577 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய முடிவு விலையானது 49,748 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 49,931 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையும் நேற்று கிலோவுக்கு 4,600 ரூபாய் சரிவடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று தொடக்கம் முதல் கொண்டே ஏற்றம் கண்டு வருகின்றது. தற்போது கிலோவுக்கு 1749 ரூபாய் அதிகரித்து, 62,603 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் கடந்த ஏழு தினங்களாக ஆபரணத் தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று தடாலடியாக சரிவினைக் கண்டுள்ளது. இன்று கிராமுக்கு 156 ரூபாய் குறைந்து, 4,766 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 1248 ரூபாய் குறைந்து, 38,128 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சென்னையில் தூய தங்கம் விலை

சென்னையில் தூய தங்கம் விலை

சென்னையில் தூய தங்கத்தின் விலையும் கடந்த ஏழு தினங்களாக தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்தது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு 139 ரூபாய் குறைந்து, 5,199 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 1390 ரூபாய் குறைந்து 51,990 ரூபயாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே ஆபரண வெள்ளியின் விலையானது, கடந்த 5 தினங்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று மட்டும் கிராமுக்கு 4.1 ரூபாய் குறைந்துள்ளது. இதே கிலோவுக்கு 4,100 ரூபாய் குறைந்து, 66,900 ரூபாயாகவும் விற்பனை
செய்யப்பட்டும் வருகிறது. உண்மையில் பண்டிகை காலத்தில் இது முதலீட்டாளார்களுக்கும், நகை வாங்க நினைப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்பு தான்.

தங்கம், வெள்ளி டெக்னிக்கல் லெவல்ஸ்

தங்கம், வெள்ளி டெக்னிக்கல் லெவல்ஸ்

தங்கம்
சப்போர்ட் லெவல்கள் - 49,200 - 48,900
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 49,900 - 50,500

வெள்ளி -
சப்போர்ட் லெவல்கள் - 60,300 - 59,200
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 62,600 - 63,500

 

இனி தங்கம் விலை எப்படி இருக்கும்?

இனி தங்கம் விலை எப்படி இருக்கும்?

ஓரு வழியாக முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப கொரோனா தடுப்பூசியும் கிட்டதட்ட கண்டுபிடித்தாகி விட்டது. அதே போல அமெரிக்கா தேர்தலும் முடிந்து, அதிலும் பிடனும் வெற்றி கண்டு விட்டார். இதனையடுத்து வட்டி விகிதத்திலும் மாற்றமில்லை. இந்த நிலையில் அனைவரின் எதிர்பார்ப்பும் அமெரிக்காவின் ஊக்கத் தொகையாக உள்ளது. இது எவ்வளவு கொடுக்கப்படலாம். பொருளாதாரம் எப்படி மேம்பட போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold and silver jewellery price big falls today

Gold and silver jewellery price big falls today, its great chance to buy gold
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X