தங்கம், வெள்ளி விலை குறையுமா.. இனி எப்படி இருக்கும்.. நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது நீண்டகால நோக்கில் ஏற்றம் காணலாம் என்று நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

 

நீண்டகால நோக்கில் ஏற்றம் காணலாம் என்றாலும், அவ்வப்போது சற்று சரிவினையும் கண்டு வருகின்றது. ஆக இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் மத்தியில் எழும் ஒரே கேள்வி இந்த நேரத்தில் வாங்கலாமா? அல்லது இன்னும் குறையுமா? கொஞ்சம் காத்திருந்து வாங்கலாமா? என்பது தான்.

சரி வாருங்கள் பார்க்கலாம்? இனி எப்படி தங்கம் விலை இருக்கும்? என்னென்ன காரணங்கள்.

ஒரே வாரத்தில் ஏன் கேஸ் போட்டீங்க.. ரஜினிக்கு 'நறுக்கு தெறிக்க' சரமாரி கேள்வி எழுப்பிய ஹைகோர்ட்

தங்கம் விலை சரியலாம்

தங்கம் விலை சரியலாம்

தங்கத்தின் விலையானது 2 மணி நேர டைம் பிரேமில் பார்க்கும்போது, சற்று சரிவினைக் காணும் நிலையிலேயே காணப்படுகின்றது. இன்ட்டிரா டே வணிகத்தில் தங்கம் விலையானது சற்று சரிவினை காணும் நிலையிலேயே காணப்படுகிறது. இந்த நிலையில் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் 50,100 ரூபாயாகும். ஓரு வேளை இதிலிருந்து தங்கம் விலையானது குறைய ஆரம்பித்தால் 49,800, 49,500 ரூபாய் என்ற லெவலை கூட தொடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கத்தின் ரெசிஸ்டன்ஸ் லெவல்

தங்கத்தின் ரெசிஸ்டன்ஸ் லெவல்

இதே செல்லிங் டிரெண்டில் விலை குறைந்தாலும், பையிங்கிலும் அதே அளவு ஏற்றத்தினை காணும். அப்படி ஏற்றம் காணும் போது அடுத்தடுத்த முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 50,400 ரூபாய், 50,700, 51,000 ரூபாயினை தொடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது தங்கத்தின் விலையானது 135 ரூபாய் அதிகரித்து, 50,384 ரூபாயாக காணப்படுகின்றது.

வெள்ளியின் விலை நிலவரம்
 

வெள்ளியின் விலை நிலவரம்

இதே வெள்ளியின் விலையானது 2 மணி நேர டைம் பிரேமில் பார்க்கும் போது, வெள்ளியின் விலை அதிகரிக்கும் விதமாகவே உள்ளது. இந்த நிலையில் தற்போது 360 ரூபாய் அதிகரித்து 60,902 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில கேண்டில்கள் சரிவினைக் கண்டிருந்த நிலையில், தற்போது பையிங் லெவலுக்கு மாறியுள்ளது.

வெள்ளியின் சப்போர்ட் லெவல்கள்

வெள்ளியின் சப்போர்ட் லெவல்கள்

வெள்ளியின் விலையானது குறையும் பட்சத்தில் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் 60,200 ரூபாயாகும். இது மேலும் தொடருமானால் அடுத்து 59,400 மற்றும் 58,600 லெவல்கள் வரை கூட செல்லலாம். ஆனால் வெள்ளியின் விலையானது தற்போதைய விலை நிலவரத்திலேயே தடுமாறிக் கொண்டிருந்தால், அது ஏற்றம் காண வழி வகுக்கும்.

வெள்ளியின் ரெசிஸ்டன்ஸ் லெவல்

வெள்ளியின் ரெசிஸ்டன்ஸ் லெவல்

வெள்ளியின் விலையானது அதிகரிகரிக்கும் பட்சத்தில் அதன் அடுத்த முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 61,000 ரூபாயாகும். இதனை உடைத்து செல்லும் பட்சத்தில் 61,800, 62,600 என்ற லெவலை கூட தொடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் தற்போது இந்த முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலை வெள்ளி தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரிய மாற்றம் எப்போது?

பெரிய மாற்றம் எப்போது?

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பட்சத்தில், அதற்கு சரியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பட்சத்தில் தங்கம் விலையில் பெரிய மாற்றம் காணலாம். மோதிலால் ஆஸ்வால் அறிக்கையில், சர்வதேச நாணய நிதியம் உலகப்பொருளாதாரம் - 4.4% வீழ்ச்சி காணலாம் என்றும் கணித்துள்ளது. இது முன்னர் -5.2% சரியலாம் என்று கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது வளர்ச்சியினை நோக்கி சென்றாலும், இன்னும் வீழ்ச்சி காணும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை செய்யலாம் என்றும் கணித்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து எதிர்ப்பார்ப்பு

கொரோனா தடுப்பு மருந்து எதிர்ப்பார்ப்பு

எப்படி இருப்பினும் ஒட்டுமொத்த முதலீட்டாளர்களின் ஒரே எதிர்பார்ப்பு கொரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பு மருந்து தான். ஆனால் இன்று வரையில் எந்தவொரு தடுப்பு மருந்தும் இறுதியாக்கப்படவில்லை. சொல்லப்போனால் இன்று வரை அனைத்தும் பரிசோதனையிலேயே காணப்படுகிறது. ஆக இது மேலும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மலையளவு கடன்- குறைவான ஊக்கத் தொகை

மலையளவு கடன்- குறைவான ஊக்கத் தொகை

கொரோனா பாதிப்பினால் பல சர்வதேச நாடுகளும் அதிகளவிலான கடனை பெற்றுள்ளன. ஆனால் அதே நேரம் ஊக்கத் தொகை என்பது மிகக் குறைவாக காணப்படுகின்றது. அதிலும் வல்லரசு நாடான அமெரிக்காவிலேயே இந்த ஊக்கத் தொகையானது இழுபறி நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு ஏற்கனவே பலத்த அடி வாங்கியிருந்த இந்தியா போன்ற நாடுகளுக்கு, இது இன்னும் பின்னடைவாகவே இருக்கும். இதனால் இது முதலீட்டாளர்களை தங்கத்தினை நோக்கி படையெடுக்கவே வழிவகுக்கும்.

இன்று தங்கம் மற்றும் வெள்ளியினை வாங்கலாமா?

இன்று தங்கம் மற்றும் வெள்ளியினை வாங்கலாமா?

நீண்டகால நோக்கில் வாங்கும்போது தங்கம் வெள்ளியினை வாங்கி வைக்கலாம் என்றும் நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஏனெனில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையை அதிகரிப்பதற்கான ஃபண்டமென்டல் காரணிகள் அதற்கு சாதகமாகவே உள்ளன. ஆக நீண்டகால நோக்கில் வாங்கி வைப்பவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold and silver price prediction

Gold and silver prices move higher amid coronavirus pandemic, its may support long term investment.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X