தடுமாறும் தங்கம் விலை.. மீண்டும் உச்சத்தினை நோக்கிய பயணம்.. குறையவே குறையாதா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது இந்திய ப்யூச்சர் வர்த்தகத்தில், கடந்த புதன்கிழமையன்று பலத்த சரிவினைக் கண்ட நிலையில், நேற்றும் இரண்டாவது நாளாக சரிவினைக் கண்டது. இது கிட்டதட்ட 1.07% சரிவினைக் கண்டது.

 

எனினும் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது காலை நேர வர்த்தகத்தில் சரிவில் தொடங்கியிருந்தாலும், முடிவில் ஏற்றத்தில் தான் முடிவடைந்துள்ளது. சொல்லப்போனால் வியாழக்கிழமையன்று அவுன்ஸூக்கு 1960.40 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 1960.20 டாலர்களாகவே தொடங்கியுள்ளது.

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், வியாழக்கிழமையன்று தங்கம் விலையானது 1962.95 டாலர்கள் உச்சத்தினை தொட்ட நிலையில், இன்று இதுவரையில் தொட்ட உச்சமும் 1962.95 டாலர்களாக உள்ளது.

வேலையின்மை குறித்த டேட்டா

வேலையின்மை குறித்த டேட்டா

ஒரு வேளை இந்த 1962.25 டாலர்களை உடைத்து தங்கம் விலையானது அதிகரித்தால், சற்று அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த அமர்வில் 3% அதிகமாக விலையேற்றம் கண்டது. அமெரிக்க வேலையின்மை குறித்த டேட்டா, கடந்த வாரத்தில் வெளியான நிலையில் எதிர்பாராத விதமாக மீண்டும் 1 மில்லியனைத் தாண்டியது.

பொருளாதாரம் குறித்த கவலை

பொருளாதாரம் குறித்த கவலை

இதன் காரணமாக அமெரிக்கா ஃபெடரல் ரிசர்வ் வங்கி பொருளாதார மீட்சி குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. இதன் காரணமாகத் தான் தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தட தடவென ஏற்றம் கண்டுள்ளது. ஏனெனில் தங்கத்தினை வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தினை முதலீட்டாளர்கள் உணர்ந்துள்ளனர். தங்கம் பாதுகாப்பு புகலிடமாக இருக்கும் நிலையில், தொடர்ந்து முதலீட்டாளர்கள் இதில் லாபமும் பார்த்து வருகின்றனர்.

பண ஆதரவு தேவைப்படலாம்
 

பண ஆதரவு தேவைப்படலாம்

ஆக அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டத்தில், பொருளாதாரம் மிக நிச்சயமற்ற பாதையை எதிர்கொண்டுள்ளதாகவும், இதற்காக பண ஆதரவு தேவைப்படலாம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர். அதோடு பலவீனமான வேலையின்மை உரிமைகோரல்கள் 1 மில்லியனுக்கும் அதிகமானவை மற்றும் பலவீனமான அமெரிக்க பங்குகளும் தங்கத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

டாலர் & கரன்சிகள்

டாலர் & கரன்சிகள்

அதோடு அமெரிக்க டாலரின் மதிப்பானது 0.2% வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது. இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமைந்துள்ளது. அதோடு மற்ற நாட்டு நாணயங்களின் மதிப்பும் சரிவில் உள்ளது. இதுவும் தங்கம் விலைக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது அதிகரித்து காணப்படுகிறது.

 அடிப்படைகள் எதுவும் மாறவில்லை

அடிப்படைகள் எதுவும் மாறவில்லை

தங்கத்தின் பின்னால் உள்ள முக்கிய அடிப்படைகள் எதுவும் மாறவில்லை என்று ED & F man capital markets ஆய்வாளர் எட்வர்ட் மீர் கூறியுள்ளார். துண்டுதல் இன்னும் வந்து கொண்டுள்ளது. நாங்கள் உலகளவில் மீண்டு வருகிறோம். அதிக விகிதங்களையும் வலுவான டாலரை பார்க்க வேண்டும் என்பது பழையது. ஆனால் உண்மையை சொல்லவேண்டுமானல் அதிலிருந்து பல மாதங்கள் தொலைவில் இருக்கிறோம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றோம்.

அமெரிக்க சீன பதற்றம்

அமெரிக்க சீன பதற்றம்

அமெரிக்கா சீனா இடையேயான பதற்றமும் அதிகரித்து வருகிறது. இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் கோடக் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 அன்று நடைபெறவிருந்த முதல் கட்ட ஒப்பந்தம் பற்றிய ஆய்வுக் கூட்டமானது ரத்து செய்யப்பட்ட நிலையில், விரைவில் மீண்டும் இருக்கலாம் என்றும் சீனா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது 0.64% ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக அவுன்ஸூக்கு 11.80 டாலர்கள் அதிகரித்து 1958.60 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இரண்டாவது நாளாக சர்வதேச சந்தையில் இன்றும் தங்கம் விலையானது அதிகரித்து வருகிறது. இன்றைய உச்ச விலையினை 1962.50 டாலரினை தாண்டி வர்த்தகம் செய்தால் தங்கம் விலையானது இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது.

சர்வதேச வெள்ளின் விலை

சர்வதேச வெள்ளின் விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது 1.26% ஏற்றம் கண்டுள்ளது. இது தற்போது 0.341 டாலர்கள் அதிகரித்து, 27.488 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. கடந்த சில வாரங்களாகவே தங்கத்திற்கு இணையாக வெள்ளியின் விலையும் அதிகளவில் வர்த்தகமாகி வருகிறது. இது சீனா தொழிற்சாலைகள் மீண்டடு வருவதையே சுட்டிக் காட்டுகிறது. ஏனெனில் வெள்ளியினை அதிகளவில் உபயோகப்படுத்தும் நாடுகளில் சீனா தான் முதன்மையானது. அது ஆபரணமாக மட்டும் அல்லாமல், தொழில்சாலைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம்

எம்சிஎக்ஸ் தங்கம்

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலையானது, சர்வதேச சந்தையின் எதிரொலியாக தற்போது சற்று ஏற்றத்துடன் காணப்படுகிறது. இது தற்போது 0.32% ஏற்றத்துடன் காணப்படுகிறது. 10 கிராம் தங்கம் விலையானது 128 ரூபாய் அதிகரித்து, 52,278 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது நேற்றைய முடிவு விலையானது 52,151 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 52,160 ரூபாயாக தொடங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் வெள்ளி

எம்சிஎக்ஸ் வெள்ளி

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளியின் விலையானது 1.51% ஏற்றம் கண்டுள்ளது. இது தற்போது கிலோவுக்கு 1055 ரூபாய் அதிகரித்து, 68,650 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த இரண்டு தினங்களாகவே சரிவினை கண்டு வந்த வெள்ளி விலையானது, இன்று மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது

ஆபரணத் தங்கம்

ஆபரணத் தங்கம்

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது மாற்றம் காணாத நிலையில், கிராமுக்கு 72 ரூபாய் குறைந்து, 5,084 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 576 ரூபாய் குறைந்து, 40,672 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இது தற்போது இன்னும் பெரியளவில் மாற்றம் காணப்படவில்லை.

ஆபரண வெள்ளி

ஆபரண வெள்ளி

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது இன்று இன்னும் பெரியளவில் மாற்றம் காணப்படாத நிலையில், வியாழக்கிழமையன்று கிராமுக்கு 67 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 670 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 1,100 ரூபாய் குறைந்து, 67,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

தங்கம் விலை இனி எப்படி இருக்கும்?

தங்கம் விலை இனி எப்படி இருக்கும்?

தங்கம் விலையானது கொரோனாவுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் இதனால் மக்கள் பாதிக்கப்படுவதோடு, பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வருகிறது. அதோடு வேலையின்மையும் அதிகரித்து வருகிறது. எல்லாவற்றுற்கும் மேலாக மக்கள் கையில் பணப்புழக்கம் குறைந்துள்ளது. இதனால் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold and silver prices are trade higher in world market

Gold price update.. Gold and silver prices are trade higher in world market
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X