செம சரிவில் தங்கம் விலை.. வெள்ளி விலையும் படு வீழ்ச்சி.. காரணம் என்ன.. இன்னும் குறையுமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில வர்த்தக தினங்களாக வீழ்ச்சி கண்டு வரும் தங்கம் விலையானது, இன்றும் வீழ்ச்சி கண்டுள்ளது.

நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், இன்று சரிந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக சர்வதேச சந்தையின் நிலவரத்தினை பொறுத்தே தங்கம் விலையானது நிர்ணயிக்கப்படுவதால், ஆபரணத் தங்கத்தின் விலையும் சற்று குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன பார்க்க போகிறோம்?

என்னென்ன பார்க்க போகிறோம்?

சரி தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரம் என்ன? சர்வதேச சந்தையில் எவ்வளவு? இந்திய சந்தையில் விலை எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? என்னென்ன காரணங்கள் தங்கத்திற்கு ஆதரவாகவும், பாதகமாகவும் உள்ளன என்பதை தான் பார்க்க போகிறோம்.

காமெக்ஸ் சந்தையில் தங்கம் நிலவரம்

காமெக்ஸ் சந்தையில் தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு 6 டாலர்கள் குறைந்து, 1899.30 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது தொடர்ச்சியாக நான்காவது நாளாக சரிவினைக் கண்டு வருகிறது. இது 1982 டாலர்களை உடைத்து செல்லும் பட்சத்தில் இன்னும் வீழ்ச்சி காணும் விதமாகவே உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று தங்கம் விலையானது 1900.50 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 1,900.35 டாலர்களாக தொடங்கியுள்ளது.

சர்வதேச சந்தையில் வெள்ளி நிலவரம்

சர்வதேச சந்தையில் வெள்ளி நிலவரம்

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையும் கிட்டதட்ட 2% வீழ்ச்சி கண்டு, 24.253 டாலர்களாக வீழ்ச்சி கண்டுள்ளது. வெள்ளியின் விலையும் தொடர்ச்சியாக நான்காவது நாளாக வீழ்ச்சி கண்டு வருகின்றது. வெள்லியின் விலையும் கடந்த வெள்ளிக்கிழமையன்று 24.525 டாலர்களாக முடிவடைந்திருந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 24.517 டாலர்களாக தொடங்கியுள்ளது. இது இன்று இன்னும் வீழ்ச்சி காணும் விதமாகவே வர்த்தகமாகி வருகின்றது.

இந்திய எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

இந்திய எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை சரிவிலேயே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 215 ரூபாய் குறைந்து, 50,624 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இந்திய சந்தையில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக வீழ்ச்சி கண்டு வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமையன்று 50,839 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 50,690 ரூபாயாக தொடங்கியுள்ளது குறிப்பிடத்தகக்து.

இந்திய எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

இந்திய எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளி பலத்த சரிவில் காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 959 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 61,490 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கிட்டதட்ட 2% வீழ்ச்சியாகும். வெள்ளியின் விலையும் கடந்த வெள்ளிக்கிழமையன்று 62,449 ரூபாயாக முடிவடைந்திருந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 61,720 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது இன்னும் வீழ்ச்சி காணும் விதமாகவே காணப்படுகின்றது.

தங்கத்திற்கு ஆதரவளிக்கு ம் காரணிகள்

தங்கத்திற்கு ஆதரவளிக்கு ம் காரணிகள்

தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு மெட்டல்களுமே டாலர் பலவீனம், அமெரிக்கா, லண்டன் மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ள கொரோனா வைரஸ் காரணமாக, நீண்ட கால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம் என்று கூறுகின்றனர் நிபுணர்கள். அதோடு அமெரிக்காவில் ஊக்கத் தொகை அறிவிப்பானது வருவதற்கு தாமதமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம்

தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம்

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது இன்னும் சில தினங்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் காணலாம். ஏனெனில் அமெரிக்கா ஊக்கத் தொகை குறித்தான நிலையற்ற தன்மை, வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல், தேர்தலி யார் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகளினால் தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்திலேயே காணப்படும். எனினும் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது, அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

பிரித்வி பின்மார்ட் நிறுவனத்தின் கமாடிட்டி தலைவர் & கரன்சி ரிசர்ச் தலைவர் மனோஜ் ஜெயின், தங்கத்தின் சப்போர்ட் லெவல்ஸ் 50,550 - 50,300 என்ற லெவலில் இருக்கும் என்றும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 51,050 - 51,220 ரூபாய் என்றும் கணித்துள்ளார்.

பாதுகாப்பு புகலிடத்திற்கு ஆதரவு

பாதுகாப்பு புகலிடத்திற்கு ஆதரவு

தங்கம் விலையானது இன்று வீழ்ச்சி கண்டு இருந்தாலும், அது பெரியளவில் வீழ்ச்சி காணவில்லை. ஏனெனில் இது அமெரிக்காவின் ஊக்கத் தொகை எதிர்பார்ப்பு, அதிகரித்து வரும் கொரோனா வழக்குகள் என பலவும் தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளன. ஆக இது பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலைக்கு, இது ஆதரவாக காணப்படுகின்றது.

இன்று தங்கம் விலை எப்படி இருக்கும்? என்ன செய்யலாம்?

இன்று தங்கம் விலை எப்படி இருக்கும்? என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது இன்று சரிவினைக் கண்டாலும் நீண்டகால நோக்கில் காணும்போது அதிகரிக்கலாம் என்றே பல நிபுணர்களும் கூறி வருகின்றனர். கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தங்கம் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என்பதால், நீண்டகல நோக்கில் எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம். அது நிச்சயம் லாபம் காணும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல விஷயமாகத் தான் பார்க்கப்படுகிறது. இது எந்த லெவல் வரை செல்லலாம். நிபுணர்கள் என்ன கூறியுள்ளனர் என்பதை https://tamil.goodreturns.in/news/gold-price-predictions-until-the-next-year-end-021137.html என்ற கட்டுரையில் பார்த்துள்ளோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold and silver prices fall amid weak global trend

Gold price update... Gold and silver prices fall amid weak global trend
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X