முதலீட்டாளர்களுக்கு தங்கம் கொடுத்த ஜாக்பாட்.. நான்காவது நாளாக சரிவு.. இன்னும் குறையுமா?

முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக தங்கம் விலை எம்சிஎக்ஸ் சந்தையில் நான்காவது நாளாக குறைந்து வருகிறது. சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் இன்றளவிலும் அதிகரித்து வந்தாலும், தற்போது இரண்டு தடுப்பூசிகள் 90% மேல் வெற்றி கண்டுள்ளது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கொரோனா அதிகரித்தாலும், விரைவில் மீண்டுவிடலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. அதோடு பொருளாதாரத்தினையும் விரைவில் மீட்க முடியும் என்றும் முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். இதனால் தங்கம் விலையானது இன்றும் சரிவில் காணப்படுகிறது.

சரி இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை எப்படி உள்ளது? இந்திய சந்தையில் எப்படி உள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

டாலரின் மதிப்பு அதிகரிப்பு

டாலரின் மதிப்பு அதிகரிப்பு

மற்ற முக்கிய நாணயங்களுக்கு எதிரான டாலரின் மதிப்பானது சற்று வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச பங்கு சந்தைகள் சற்றே வலுவடைந்துள்ளன. குறிப்பாக ஆசிய சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. அமெரிக்காவின் பிப்சர் நிறுவனம், மாடெர்னா நிறுவனம் தங்களது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் 90% மேல் வெற்றி கண்டுள்ள நிலையில், இது மேற்கொண்டு பொருளாதாரத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது மூன்றாவது நாளாக சரிவில் காணப்படுகிறது. இதே எம்சிஎக்ஸ் சந்தையில் நான்காவது நாளாக குறைந்து வருகிறது.

நீண்டகால நோக்கில் தங்கம்

நீண்டகால நோக்கில் தங்கம்

குறுகிய கால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக பல காரணிகள் இருந்தாலும், நீண்ட கால நோக்கிலும் தங்கத்திற்கு ஆதரவாக சில காரணிகள் உள்ளன. குறிப்பாக அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிந்திருந்தாலும், இதுவரையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்கா ஊக்கத் தொகை குறித்தான அறிவிப்புகள் வரவில்லை. அதோடு தடுப்பூசிகள் வெற்றி கண்டிருந்தாலும், அவை செயல்பாட்டுக்கு வர கொஞ்சம் தாமதமாகலாம். இதனால் கொரோனா பரவலை கட்டுபடுத்தும் நோக்கில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம். இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொருளாதாரத்தினை மீட்க சிறிது காலம் ஆகும்

பொருளாதாரத்தினை மீட்க சிறிது காலம் ஆகும்

அமெரிக்காவின் தூண்டுதல் நடவடிக்கை குறித்தான அறிவிப்புகள் இன்னும் பெரியதாக வெளியாகவில்லை. இதற்கிடையில் ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கான அவசர கால திட்டங்கள் வேன்டும். இங்கு மூடுவதற்கான நேரமில்லை. பொருளாதாரத்தினை மீட்க இன்னும் நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளது நினைவு கூறத்தக்கது.

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில், இன்றோடு மூன்று வர்த்தக அமர்வுகளிலும், தங்கம் விலையானது சற்றே சரிவில் காணப்படுகிறது. தற்போது தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 6.50 டாலர்கள் குறைந்து, 1878.60 டாலர்களாக காணப்படுகிறது. நேற்று கூறியது போல தங்கத்தில் bearish engulfing pattern பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில், மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி நிலவரம்

சர்வதேச சந்தையில் வெள்ளி நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையினைப் போலவே, வெள்ளியின் விலையும் இன்று சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தங்கத்தினை போலவே, வெள்ளியின் விலையிலும், bearish engulfing pattern பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 0.49% சரிந்து, 24.530 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது. இந்திய கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்த வரையில் நான்காவது வர்த்தக நாளாக இன்றும் தங்கம் விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 250 ரூபாய் குறைந்து, 50,516 ரூபாயாக காணப்படுகிறது. கடந்த அமர்வில் தங்கம் விலையானது 50,766 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 50,600 ரூபாயாக தொடங்கியுள்ளது. இதுவும் தங்கம் விலை சற்று குறைவதற்கான சிக்னலையே கொடுத்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது. நான்காவது வர்த்தக நாளாக இன்றும் வெள்ளி விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கிலோ வெள்ளியின் விலையானது 420 ரூபாய் குறைந்து, 62,828 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

இன்று விலை எப்படி இருக்கும்?

இன்று விலை எப்படி இருக்கும்?

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டாலும், தற்போது வெளியாகி வரும் சில காரணிகள் தங்கத்திற்கு ஆதரவாக உள்ளது. அதோடு டெக்னிக்கலாகவும் குறுகிய கால நோக்கில் விலை குறையலாம் என்பது போல் தான் பேட்டனும் பார்ம் ஆகியுள்ளது. ஆக அதற்கேற்றாற்போல் முதலீட்டாளர்கள் காத்திருந்து முதலீடு செய்வது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+