சர்வதேச சந்தையில் பல மாதங்களாக தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஆறு தினங்களாகவே தொடர்ந்து தங்கம் விலையானது தடாலடியாக சரிந்து வருகிறது.
இது தங்கத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.
நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், தங்க ஆபரணத்தினை வாங்குவது பெரிதும் குறைந்துள்ளது. எனினும் இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் முதலீடுகள் அதிகரித்துள்ளது.
டாலரின் மதிப்பு சரிவு
தங்கம் விலைக்கு ஆதரவாக டாலரின் மதிப்பு சற்று சரிவிலேயே உள்ளது. எனினும் நடப்பு வாரத்தில் தங்கம் விலையானது 4% வீழ்ச்சி கண்டுள்ளது. எனினும் இனி வரும் காலத்தில் தங்கம் விலையானது அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளதாகவும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
தங்கம் விலை குறைய என்ன காரணம்?
தங்கம் விலையானது தொடர்ந்து வரலாற்று உச்சம் கண்டு வந்த நிலையில், முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தங்கம் விலையானது தொடர்ச்சியாக இன்றும் சரிந்து வருகிறது. இதனுடன் கொரோனா தடுப்பூசியும் ரஷ்யா ஒப்புதல் அளித்துள்ள நிலையில்,இது தங்கத்திற்கு சாதமாக அமைந்துள்ளது.
சாதகமான அமெரிக்காவின் டேட்டா?
கடந்த வியாழக்கிழமையன்று தங்கத்தின் விலைக்கு ஆதரவாக அமையும் விதமாக, வேலையின்மை நலனுக்காக க்ளைம் செய்யும் விகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதுவும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் இது ஒரு மில்லியனுக்கும் குறைவாக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் 28 மில்லியன் மாக்கள் இப்போதும் இந்த ஊக்கத்தொகையினை பெற்றுக் கொண்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. ஆக இது பலவீனாமான் சந்தையை குறிக்கிறது.
தங்கம் விலை இனி அதிகரிக்கும்?
தங்கம் விலையானது நடப்பு ஆண்டில் இதுவரை இந்த ஆண்டு கிட்டதட்ட 30% அதிகரித்துள்ளது. இது இன்னும் பலமாக ஏற்றம் காணும் என்று நிபுணர்கள் மத்தியில் கூறப்படுக்கிறது. இது நடப்பு ஆண்டின் இறுதிக்குள் தங்கம் விலையானது 3000 டாலரினை தொடலாம் என்றும் கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து ஆறாவது நாளாக வீழ்ச்சி கண்டு வருகிறது. இது தற்போது 0.45% வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 8.75 டாலர் குறைந்து, 1961.65 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை காலையில் சரிந்து வரும் நிலையில், மாலையில் ஏற்றம் கண்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை
வெள்ளி விலையானது சர்வதேச சந்தையில் 1.33% சரிந்து காணப்படுகிறது. தற்போது 0.360 டாலர்கள் குறைந்து, 27.355 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் சந்தையானது, இன்று காலை நேர வர்த்தகத்திலேயே சரிந்து காணப்படுகிறது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
தங்கம் விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தங்கம் விலையானது சரிந்து காணப்படுகிறது. இது தற்போது 0.58% வீழ்ச்சியாகும். தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 309 ரூபாய் குறைந்து, 52,621 ரூபாயாக வீழ்ச்சி கண்டு வருகிறது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் வெள்ளி விலையானது சரிந்து காணப்படுகிறது. இது தற்போது 1.02% சரிந்து காணப்படுகிறது. தற்போது கிலோ வெள்ளியின் விலையானது 750 ரூபாய் குறைந்து, 70,327 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

Today Gold Silver Rate Live: தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications