இந்தியாவில் விரும்பி அணியப்படும் ஆபரணமான தங்கத்தின் விலையானது நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே அதிக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் சர்வதேச அளவில் நிலவி வரும் காரணிகள் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என்ற நிலையில், உலக அளவில் அதிக அளவில் தங்கத்தின் நுகரும் நாடான சீனாவில், கொடிய கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
சீனாவில் தங்கம் நுகர்வானது குறைந்தாலும், மறுபுறம் முதலீட்டாளர்கள் பாதுகாப்பினை காரணம் காட்டி தங்கத்தில் முதலீடுகளை செய்து வருகின்றனர். இதன் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தங்கம் விலை
சீனாவில் கொடிய வைரஸான கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்த நாட்டில் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அதை மேம்படுத்த அந்த நாட்டு அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் முதலீட்டாளர்கள் பார்வை தங்கத்தின் மீது பதிந்துள்ளது.
உலகம் முழுவதும் பரவல்
உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடான சீனாவில் முதன் முதலில் தோன்றிய கொரோனா வைரஸானது, தற்போது பல நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் இதன் எதிரொலி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீனாவின் நடப்பு காலாண்டு வளர்ச்சியில் 2% இந்த கொரோனா எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
வீழ்ச்சி நிரந்தரம் இல்லை
இதன் விளைவாக போதிய பொருளாதார மீட்பு நடவடிக்கை இல்லையெனில் தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காணலாம் என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆசிய சந்தைகள் அனைத்தும் (ஷாங்காய் மார்கெட் தவிர) வீழ்ச்சியிலேயே காணப்படுகின்றன. ஆக முதலீட்டாளர்களின் கவனம் முழுவதும் தங்கத்தின் மீது விழலாம் என்றும் கருதப்படுகிறது.
சர்வதேச சந்தையில் விலை
கொரேனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது விழத் தொடங்கியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது அவ்வப்போது வீழ்ச்சி கண்டு வந்தாலும், தற்போது அவுன்ஸூக்கு 1574.45 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இது தற்போது 0.05% அதிகரித்து 1574.45 டாலாராக உள்ளது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் விலை சற்று அதிகரித்திருந்தாலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலையானது, 76 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 40,568 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த மூன்று சந்தை தினங்களாகவே ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலையானது, தற்போது சரிந்துள்ள நிலையில், அதுவும் சர்வதேச சந்தையில் விலை அதிகரித்துள்ள நிலையிலும் கூட இந்திய சந்தையில் சற்று குறைந்திருப்பது கவனிக்கதக்கது.
வெள்ளி விலை
தங்கத்தின் விலையை போன்றே வெள்ளி விலையும் சற்று குறைந்து தான் தற்போது வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் இந்திய சந்தையில் தற்போது 43 ரூபாய் வீழ்ச்சி கண்டு 46,063 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலையானது 0.15% அதிகரித்து 17.718 டாலர்களாக வர்த்தகமாகியும் வருகிறது.
ஆபரண விலை எவ்வளவு?
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் 3,999 ரூபாயாகவும், சவரனுக்கு 7.20 ரூபாய் அதிகரித்து, 31,999 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. ஆபரண தங்கத்தினை பொறுத்த வரையில் சென்னையில் கடந்த நான்கு தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஃப்யூச்சர் வர்த்தகத்தில் தங்கம் விலை குறைந்திருந்தாலும், ஆபரண தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சொல்லப்போனால் 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு 1,008 ரூபாய் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!



Click it and Unblock the Notifications