பட்டைய கிளப்பும் தங்கம் விலை.. நிபுணர்கள் சொன்னதெல்லாம் பலித்துவிடும் போலிருக்கே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது (Gold price) நாளுக்கு நாள் நிபுணர்கள் சொன்னதைபோல், தொடர்ந்து சிறுக சிறுக ஏற்றம் கண்டு தான் வருகின்றது.
எனினும் ஆபரணத் தங்கத்தின் விலையில் இது, இதுவரையில் எதிரொலிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது. எனினும் மொத்தமாக பார்க்கும்போது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

எனினும் வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10 கிராம் தங்கம் விலையானது 11,000 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக இது நடுத்தர மக்களுக்கும், தங்க முதலீட்டாளர்களுக்கும் தங்கத்தினை வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? இந்த இரு சந்தைகளிலும் வெள்ளி விலை நிலவரம் என்ன? தங்கத்திற்கு சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? நீண்டகால நோக்கில் இனி தங்கம் விலை நிபுணர்கள் கூறியது போல ஏற்றத்தில் தான் இருக்குமா? இன்று எப்படி இருக்கும்? இன்று வாங்கலாமா? இனி குறையுமா? குறையாதா? என பலவற்றையும் பார்க்கவிருக்கிறோம்.

 

பட்டையை கிளப்பும் காமெக்ஸ் தங்கம் விலை

பட்டையை கிளப்பும் காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலையானது நல்ல ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 21.45 டாலர்கள் அதிகரித்து, 1748.55 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று கேப் அப் ஆகி மேலாகத் தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலையானது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. 1738 டாலர்களை உடைத்துக் காட்டினால் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறிய நிலையில், தற்போது அதனையும் உடைத்து நேற்றைய உச்சமான 1750.60 டாலர்களையும் உடைத்துக்காட்டியுள்ளது. வார கேண்டில் பேட்டர்னிலும் தங்கம் விலையானது ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

றெக்கை இல்லாமல் பறக்கும் வெள்ளி விலை

றெக்கை இல்லாமல் பறக்கும் வெள்ளி விலை

தங்கத்தின் விலையினை போலவே, வெள்ளியின் விலையும் நல்ல ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது, 2.19% ஏற்றம் கண்டு, 26.622 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையும் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று கேப் அப் ஆகி மேலாகத் தான் தொடங்கியுள்ளது. அதோடு நேற்றைய உச்சத்தினையும் உடைத்துக் காட்டியுள்ளது. வார கேண்டில் பேட்டர்னிலும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான நேரமே.

தூள் கிளப்பும் எம்சிஎக்ஸ் தங்கம் விலை

தூள் கிளப்பும் எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது இன்று காலை தொடக்கத்தில் இருந்தே, சர்வதேச சந்தையின் எதிரொலியாக பலமான ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 411 ரூபாய் அதிகரித்து, 45,251 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் தொடக்க விலையானது நேற்றைய முடிவு விலையை விட, சற்று மேலாக தொடங்கியுள்ளது. தங்கம் விலையும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. இதில் வார கேண்டில் பேட்டர்னில் டோஜி பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான நேரமாக பார்க்கப்படுகிறது.

செம ஏற்றத்தில் எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

செம ஏற்றத்தில் எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையானது, சர்வதேச சந்தையின் எதிரொலியாக செம ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 942 ரூபாய் அதிகரித்து, 68,169 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக வெள்ளியின் விலையும் சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

ஊக்கம் தந்த அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி

ஊக்கம் தந்த அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி

அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது வட்டி விகிதத்தில் தற்போதைக்கு மாற்றமில்லை, இது பூஜ்ஜியத்துக்கு அருகிலேயே தொடரும் என அறிவித்துள்ளது. அதோடு ஜிடிபி குறித்த கணிப்பினையும் அதிகரித்துள்ளது. ஆக இதனையடுத்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது கேப் அப் ஆகியுள்ளன. இது பணவீக்கத்திற்கு வழிவகுக்குமோ என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.

டாலர் வீழ்ச்சி

டாலர் வீழ்ச்சி

இந்த குறைந்த வட்டி விகிதமானது குறைந்தபட்சம் 2023 வரையில் அப்படியே இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாலரின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியினை கண்டது. இது அமெரிக்கா அல்லாத முதலீட்டாளர்களுக்கு தங்கத்தினை மலிவானதாக மாற்றியது. இது மீண்டும் தங்கத்தினை வாங்க முதலீட்டாளர்களை தூண்டியுள்ளது. இது தங்கத்தினை மீண்டும் ஏற்ற பாதைக்கு திருப்பியுள்ளது.

பட்டையை கிளப்பி வரும் பங்கு சந்தைகள்

பட்டையை கிளப்பி வரும் பங்கு சந்தைகள்

அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி ஏறக்குறைய 40 ஆண்டுகளில் அமெரிக்க பொருளாதாரம் அதன் விரைவான விரிவாக்கத்திற்கான பாதையில் இருப்பதாக அமெரிக்க மத்திய வங்கி கூறியதையடுத்து, அமெரிக்க பங்கு சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தன. இதன் எதிரொலியாக பல ஆசிய சந்தைகளும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன.

சீரான பத்திர லாபம்

சீரான பத்திர லாபம்

அமெரிக்க பத்திர லாபம் தொடர்ந்து சீராக இருந்து வருகின்றது. குறைந்த வட்டி விகிதம், வட்டியில்லா முதலீடான தங்கத்தினை வைத்திருப்பதனையும் முதலீட்டாளர்கள் மதிப்பிடுகின்றனர். இதனால் டாலரின் மதிப்பு அழுத்தத்தில் காணப்படுகிறது. ஆக மத்திய வங்கியின் இந்த நடவடிக்கைகளால் அமெரிக்காவின் எஸ் & பி500 வரலாற்று உச்சத்தினையும் தொட்டுள்ளது.

பணவீக்கம் பற்றிய கவலை

பணவீக்கம் பற்றிய கவலை

தொடர்ச்சியான மத்திய வங்கியின் ஆதரவுக்கு மத்தியில், பணவீக்கம் பற்றிய கவலைகள் அதிகரித்துள்ளது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக பத்திர லாபமும் சீராக இருந்து வருகின்றது. இது பங்கு சந்தை மற்றும் தங்கம் போன்ற சொத்துகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. ஆக இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவு அளித்துள்ளது.

தங்கம் விலை லெவல்கள்

தங்கம் விலை லெவல்கள்

நிபுணர்கள் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி 1700 - 1735 டாலர்களுக்குள்ளேயே வர்த்தகமாகலாம் என்று கணித்துள்ளனர் . எனினும் இதில் ஏதேனும் ஒரு பக்கம் உடைத்து சென்றால் தான், சந்தையின் போக்கினை கணிக்க முடியும். அப்படி உடைத்து செல்லும் போது முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 1775 டாலர்களாகும். இதே முக்கிய சப்போர்ட் லெவல் 1660 டாலர்களாகும் என கூறியிருந்த நிலையில், தற்போது 1735 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக அடுத்த முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் என்பது 1775 டாலர்களாகும்.

இரண்டாம் கட்ட கொரோனா அச்சம்

இரண்டாம் கட்ட கொரோனா அச்சம்

தற்போது இந்தியா உள்பட சில நாடுகளில் இரண்டாம் கட்ட கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த இரண்டாம் கட்ட பரவல் என்பது, எந்தளவுக்கு பாதிப்பினை ஏற்படுத்தவுள்ளதோ என்ற அச்சத்தினையும் எழுப்பியுள்ளது. இதன் காரணமாக பொருளாதாரம் மீண்டும் சரிவினைக் காணுமோ என்ற அச்சமும் நிலவி வருகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. டெக்னிக்கல் கேண்டில் பேட்டர்ன்களும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. முக்கிய லெவலகளையும் உடைத்துக் காட்டியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, வரலாற்று உச்சத்தில் இருந்து தங்கம் விலையானது, 11,000 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. ஆக இது தங்கம் வாங்க சரியான நேரமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சாமனிய மக்களுக்கு இது நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. மேலும் நீண்ட கால நோக்கில் தங்கம் வாங்க இது சரியான நேரமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold and silver prices jump after US Federal bank keeps rate near zero

Gold price update.. gold and silver prices jump after US Federal bank keeps rate near zero
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X