மீண்டும் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. இப்போது வாங்கலாமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில தினங்களாகவே தங்கம் விலையானது தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சரிவினை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது.

எனினும் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

அதிலும் இன்று காலையில் தொடக்கத்தில் இருந்தே, பெரிய அளவில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது. குறிப்பாக சர்வதேச சந்தையில் சற்று ஏற்றத்திலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் சற்று சரிவிலும் காணப்படுகிறது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று குழப்பத்தினையே ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தில் புராபிட் புக்கிங்

தங்கத்தில் புராபிட் புக்கிங்

கடந்த ஒரு வார காலமாகவே தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, தொடர்ச்சியாக தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வந்தது. இந்த நிலையில் தற்போது சற்று குறைவது, முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை புக் செய்வதனால்இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

நிபுணர்கள் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்று கூறி வரும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக அவ்வப்போது சரிவினைக் கண்டாலும் மீண்டும் மீண்டும் ஏற்றம் கண்டு வருகிறது. இதனால் மீண்டும் குறைந்த விலையில் வாங்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா? அல்லது இப்படியே ஏற்றம் காணுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையில் தான் தற்போது தங்கம் விலையானது சற்று சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் கடந்த நான்கு வர்த்தக அமர்வுகளாகவே, சற்று ஏற்றத்தினை கண்டு வந்த நிலையில், இன்று சற்று சரியும் விதமாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அவுன்ஸூக்கு 0.20 டாலர் அதிகரித்து, 1880.60 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. அதோடு முந்தைய அமர்வில் 1880.40 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்திலும் 1880.40 டாலர்களாக தொடங்கியுள்ளது கவனிக்கதக்கது.

சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி

தங்கம் விலை சற்று ஏற்றத்தில் காணப்பட்டாலும் வெள்ளி விலையானது 1% மேலாக சரிவில் தான் காணப்படுகிறது. இது தற்போது 1.40% சரிந்து, 26.165 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையும் கடந்த 4 வர்த்தக அமர்வுகளாகவே ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று சரிவினைக் கண்டுள்ளது. இது 27.635 டாலர்களை உடைத்து சென்றால் இன்னும் இன்று சற்று அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று 26.980 டாலர்கள் வரை சென்று பின்னர் திரும்பியது. .

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் காலையில் தொடக்கத்தில் ஏற்றத்தினை கண்ட தங்கம் விலை, முடிவில் சரிவினைக் கண்டும் வருகின்றது. எனினும் இன்று புராபிட் புக்கிங் காரணமாக,
தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 58 ரூபாய் குறைந்து, 49,955 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

ரூ.6000க்கு மேல் சரிவு

ரூ.6000க்கு மேல் சரிவு

நிபுணர்கள் சொல்வதனை போல் தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று சற்று சரியும் விதமாகவே காணப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலையானது வரலாறு காணாத உச்சத்தை தொட்ட நிலையில், இன்றைய விலையுடன் ஒப்பிடும்போதும் 6000 ரூபாய்க்கு மேம் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான நேரமாகத் தான் பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சரிவில் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 847 ரூபாய் குறைந்து, 67,970 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. முந்தைய அமர்வில் வெள்ளி விலையானது முடிவில் 68,817 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 68,555 ரூபாயாக தொடங்கியுள்ளது. இதனால் வெள்ளி விலையானது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடு குறைப்பு

பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடு குறைப்பு

அமெரிக்காவில் கொரோனாவிலிருந்து பொருளாதாரத்தினை மீட்டெடுக்க, 900 பில்லியன் டாலர் ஊக்கத் தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க உதவும். இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி காணும் என்றும் எதிர்பார்க்கபப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக பங்கு சந்தைகள் மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தில் தங்களது முதலீடுகளை குறைக்க தொடங்கியுள்ளனர்.

தொடர் ஏற்றமும் ஒரு காரணம்

தொடர் ஏற்றமும் ஒரு காரணம்

தங்கம் விலையானது கடந்த இரண்டு வாரங்களாகவே அவ்வப்போது சற்று சரிவினைக் கண்டாலும், தொடர்ந்து ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் கிடைத்த லாபத்தினை எடுக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் விலைகுறைந்தால் மீண்டும் வாங்கிக் கொள்ளலாம் என புதிய முதலீடுகளையும் தாமதித்து
வருகின்றனர். ஆக இதன் காரணமாகவும் தங்கம் விலையானது இன்று சற்று தடுமாற்றத்தில் உள்ளது.

அடுத்தாண்டில் தங்கம் எப்படி இருக்கும்?

அடுத்தாண்டில் தங்கம் எப்படி இருக்கும்?

பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக தங்கம் உள்ள நிலையில், இதுவும் தங்கம் விலை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும். தங்கம் விலைக்கு சாதகமாக கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில், அது சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலையை மாற்றும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் புதிய வகை கொரோனாவுக்கு இந்த தடுப்பூசிகள் சாதகமாக இருக்குமா? இதனால் தங்கம் விலையானது என்னவாகும் என்ற குழப்பமும் முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ளது.

தூள் கிளப்பும் பங்கு சந்தைகள்

தூள் கிளப்பும் பங்கு சந்தைகள்

கொரோனா வைரஸ் காரணமாக, இந்திய சந்தையானது ஒரு காலகட்டத்தில் பலத்த சரிவினைக் கண்டு வந்தன. எனினும் தற்போது கொரோனாவின் தாக்கம் இருந்தாலும் தூள் கிளப்பி வருகின்றன. அனுதினமும் புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றன. இது அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தைகள் ஏற்றத்தின் காரணமாக இருக்கலாம் என்றும், அன்னிய முதலீடுகள் வரத்து காரணமாகவும் ஏற்றம் கண்டு வருகின்றன.

தங்கத்திற்கு சாதகமான காரணிகள்

தங்கத்திற்கு சாதகமான காரணிகள்

அமெரிக்க சீன வர்த்தக போர், குறைவான வட்டி விகிதம், அரசியல் பதற்றம் என பலவும் தங்கத்தின் விலைக்கு இனி சாதகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பரவி வரும் புதிய வகை கொரோனா காரணமாக,
மீண்டும் பொருளாதாரம் என்னவாகுமோ? தடுப்பூசியே செயல்பாட்டுக்கு வந்தாலும், இந்த புதிய கொரோனாவுக்கு சரியாகுமா? என்ற நிலையும் இருந்து வருகிறது. அதோடு வரவிருக்கும் பண்டிகை காலங்களில், இந்தியா மற்றும் சீனாவில் தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதெல்லாம் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இனி என்ன செய்யலாம்?

இனி என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் தங்கம் விலை உச்சத்தில் இருப்பதால் சற்று குறையும் போது வாங்கலாம். நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் தற்போது வாங்கி வைக்கலாம். எனினும் குறைந்த விலையில் வாங்கும்போது லாபம் இன்னும் அதிகரிக்கும். இந்த ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold and silver prices struggling in India

Gold price update.. gold and silver prices struggling in India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X