தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்று சர்வதேச சந்தையில் சரிவினைக் கண்டு வரும் நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வீழ்ச்சி கண்டு வருகின்றது.
நெருக்கடியான நிலையாக இருந்தாலும், பாதுகாப்பு புகலிடமாக இருக்கும் தங்கம் விலையானது, நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தங்கம் விலையானது அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து, 6,000 ரூபாய் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
ஆகஸ்டில் வரலாற்று உச்சம்
முந்தைய அமர்வில் தங்கம் விலையானது எம்சிஎக்ஸ் சந்தையில் 0.4% அதிகரித்திருந்தது. இதே வெள்ளியின் விலையானது 1.6% அதிகரித்திருந்தது. (கடந்த வெள்ளிக்கிழமையன்று எம்சிஎக்ஸ் சந்தை பொது விடுமுறை என்பதால் விடுமுறையாகும்.) தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதன் வரலாற்று உச்சத்தினை தொட்டது. அந்த நேரத்தில் தங்கம் விலையானது 56,200 ரூபாயாகவும், வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 77,700 ரூபாய் வரையிலும் அதிகரித்தது.
இன்றைய இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இன்றும் 10 கிராம் தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகிறது. இது தற்போது 10 கிராமுக்கு 270 ருபாய் குறைந்து, 50,300 ரூபாயாக காணப்படுகின்றது. ஆகஸ்ட் மாதத்தில் 56,200 ரூபாயினை தொட்ட நிலையில், தற்போதைய நிலவரப்படி உச்சத்திலிருந்து கணக்கிடும்போது 5,900 ரூபாய் குறைந்துள்ளது. இதுவே இன்றைய காலை நிலவரப்படி 10 கிராமுக்கு 6,000 ரூபாய்க்கு மேல் சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் தங்கம் என்ன நிலவரம்
சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான இன்றும் சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது டாலரில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1906.30 டாலர்களாக காணப்படும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 7 அன்று அதிகபட்சமாக 2089.20 டாலர்கள் வரை சென்றது. இன்றைய நிலவரப்படி தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அவுன்ஸூக்கு 182.9 டாலர்கள் குறைந்துள்ளது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை எவ்வளவு குறைந்துள்ளது?
வெள்ளியின் விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக இன்று காலை தொடக்கத்தில் சரிந்திருந்த நிலையில், தற்போது 24 ரூபாய் அதிகரித்து 61,169 ரூபாயாக காணப்படுகிறது. இது சுமார் ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 77,700 ரூபாய் வரையில் சென்று திரும்பியது. இது இன்றைய நிலவரப்படி, 16,531 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் வெள்ளி நிலவரம்
சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையானது இன்று காலை வர்த்தக அமர்வில் சரிவிலேயே இருந்தது. இந்த நிலையில் தற்போது சற்று ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது வெள்ளியின் விலையானது அவுன்ஸூக்கு 0.55% ஏற்றம் கண்டு, 24.163 டாலர்களாக காணப்படுகின்றது. கடந்த ஆகஸ்ட் 7 அன்று அதிகபட்சமாக வெள்ளியின் விலையானது 29.915 டாலர்களாக அதிகரித்தது. இந்த நிலையில் தற்போதும் கூட வெள்ளியின் விலையானது 5.752 டாலர்கள் சரிவில் தான் காணப்படுகிறது.
சென்னயில் ஆபரணத் தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தினை பொறுத்த வரையில் இன்று கிராமுக்கு 49 ரூபாய் குறைந்து, 4,802 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 392 ரூபாய் குறைந்து, 38,416 ரூபாயாகவும் காணப்படுகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக சவரனுக்கு 43,600 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இன்றைய நிலவரப்படி, சவரனுக்கு 5,184 ரூபாய் குறைந்துள்ளது.
தூய தங்கத்தின் விலை
இன்று சென்னையில் தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 53 ரூபாய் குறைந்து, 5,238 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 424 ரூபாய் குறைந்து 41,904 ரூபாயாகவும் காணப்படுகிறது. இது அதிகபட்சமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சவரனுக்கு 44,400 ரூபாயாகவும் காணப்பட்டது. இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி, 2,496 ரூபாய் உச்சத்திலிருந்து குறைந்துள்ளது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளியின் விலையானது கிராமுக்கு 60.70 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 510 ரூபாய் குறைந்து, 60,700 ரூபாயாகவும் சென்னையில் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 71,500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத உச்சத்தோடு ஒப்பிடும்போது, இன்றைய நிலவரப்படி கிலோவுக்கு 10,800 ரூபாய் குறைந்துள்ளது.
இனி தங்கம் விலை எப்படி இருக்கும்?
தங்கத்தினை பொறுத்த வரையில் பாதுகாப்பு புகலிடமாக விளங்குவதால் நீண்டகால நோக்கில் அதிகரிக்கப்பதற்காக வாய்ப்புகள் மிக அதிகம். ஆக எப்போதெல்லாம் குறைகிறதோ, அப்போதெல்லாம் வாங்கி வைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆக நீண்ட கால நோக்கில் தங்கம் மற்றும் வெள்ளியினை வாங்கி வைக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications