டெல்லி: தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருவது சாமனியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், மறுபுறம் கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் மூலம் முதலீட்டாளர்கள் லாபம் பார்த்து வருகின்றனர்.
இதனாலேயே தற்போது பலரின் பார்வையும் இந்த கமாடிட்டி வர்த்தகத்தின் மீது விழுந்துள்ளது.
இந்த நிலையில் நாளையுடன் எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் உள்ள ஆகஸ்ட் மாத காண்டிராக்டில் உள்ள தங்கம் விலையானது எக்ஸ்பெய்ரி ஆக உள்ள நிலையில், தங்கம் விலையானது இன்று பெரிய அளவில் மாற்றம் இல்லை எனினும் சற்றே ஏற்றம் கண்டு காணப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை அதிகரிக்க காரணம்
சர்வதேச சந்தையில் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இதன் காரணமான ஆபரண தங்கத்தின் விலையும் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. அதிலும் தங்கத்தின் இறக்குமதியினை குறைக்கும் பொருட்டு, அரசு இறக்குமதி வரி அதிகரிப்பு மற்றும் ஜிஎஸ்டியும் அதிகரித்தது. இதன் விலையும் ஆபரண தங்கத்தின் விலையும், தேவை குறைந்திருந்தாலும் கூட, விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
திங்கட்கிழமையன்று வர்த்தகம்
தொடர்ந்து வரலாற்று உச்சத்தினை தொட்டு வரும் தங்கம் விலையானது, வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமையன்று மீண்டும் புதிய உச்சத்தினை தொட்டது. எனினும் முதலீட்டாளர்கள் டாலரின் மதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கிய நிலையில், புராபிட் செய்ததால் தங்கம் விலையானது காலை நேர வர்த்தகத்தில் ஏற்றம் கண்டாலும், மாலை நேர வர்த்தகத்தில் சற்று குறைந்திருந்தது.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்புக்கு மத்தியில் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவின் தாக்கம் அதிகரிப்புக்கு மத்தியில், வட்டி விகிதங்கள் குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை தங்கத்தின் பக்கம் திருப்பி வருகின்றனர். இதுவும் தொடர்ந்து தங்கம் விலையானது அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
முதலீட்டாளர்கள் மத்தியில் பயம்
ஏற்கனவே பொருளாதாரம் என்ன ஆகுமோ? என்ற பயத்தில் உள்ள முதலீட்டாளர்களுக்கு, இன்னும் பயத்தினை தூண்டும் வகையில், உலக சுகாதார அமைப்பு, கொரோனாவிற்கான சரியான தடுப்பூசியை கண்டுபிடிக்க இன்னும் நீண்ட காலம் ஆகும் என்றும் எச்சரித்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் மேலும் பய உணர்வை அதிகரித்துள்ளது.
சிறந்த ஹெட்ஜிங்
எனினும் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக தங்கம் இருப்பதால், தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். இப்படி பலதரப்பட்ட காரணங்கள் தங்கம் விலையேற்றத்திற்கு மட்டுமே சாதகமாக அமைந்துள்ளது. சரி தங்கம் விலை குறைய வாய்ப்பே இல்லையா என்றால் உண்டு. அது கொரோனாவுக்கான சரியான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால், அப்போது குறையலாம். அதுவரையில் தங்கம் விலையானது குறைந்தாலும் அது நிரந்தரமல்ல.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், தற்போது அவுன்ஸுக்கு 5.70 டாலர்கள் அதிகரித்து 1980.40 டாலர்கலாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய சந்தையில் புதிய உச்சமான 1997 டாலர்களை தொட்ட நிலையில், தற்போது சர்வதேச சந்தையில் முந்தைய நாள் உச்சத்தினையும் அதிகரித்து, முந்தைய நாள் குறைந்தபட்ச விலையையும் தாண்டி வர்த்தகமாகியுள்ள நிலையில், தினசரி கேண்டில் பேட்டனில் bearish engulfing pattern பார்ம் ஆகியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் தங்கம் விலையானது சற்று இன்று குறையவும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் இது தற்காலிகமானது ஏனெனில் ஃபண்டமெண்டல் அனைத்தும் தங்கத்திற்கு ஆதரவாகத் தான் உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையினை தொடர்ந்து வெள்ளியின் விலையும் ஏற்றம் கண்டு காணப்படுகிறது. தற்போது வெள்ளியின் விலையானது 0.080 டாலர்கள் அதிகரித்து 24.497 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது தற்போது 0.27% அதிகரித்து காணப்படுகிறது. தங்கத்தினை போல வெள்ளியின் தினசரி கேண்டில் பேட்டனில் bearish engulfing pattern பார்ம் ஆகியுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆக நீண்டகால நோக்கில் இல்லாவிட்டாலும், இன்று வெள்ளி விலையானது சற்று குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை
எம்சிஎக்ஸ் சந்தையினை பொறுத்த வரையில் நாளை ஆகஸ்ட் மாத கான்டிராக்ட் எக்பெய்ரி ஆக உள்ள நிலையில், தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் காணப்படவில்லை. அக்டோபர் கான்டிராக்டில் 10 கிராம் தங்கத்தின் விலையானது 63 ரூபாய் அதிகரித்து, 53,780 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் வெள்ளியின் விலையானது பெரியளவில் மாற்றம் இல்லமல் காணப்படுகிறது. இது தற்போது 1 கிலோவுக்கு 102 ரூபாய் அதிகரித்து, 65,850 ரூபாயாக காணப்படுகிறது. இது 0.16% ஏற்றமாகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications