அடடே ரொம்ப நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிட்டோமோ..பவுனுக்கு ரூ.840 குறைஞ்சிருக்கே..அதுவும் மூன்று நாளில்..!

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போன கதையாகத் தான் இருக்கிறது தங்கம் விலையும். ஏனெனில் தங்கம் விலைக் குறைந்து இருந்தாலும் அதனை வாங்க முடியாத சூழல் தான் நிலவி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு எழுதிய ஒரு கட்டுரையில் தான் படித்தோம். நீண்ட கால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. ஆக சான்ஸ் கிடைக்கும் போது வாங்கி வைக்கலாம் என்றும் கூறியிருந்தோம்.

ஆக தங்கம் விலை குறைந்திருந்தாலும் தங்கம் வாங்க முடியாத நிலையே தான் தற்போது நிலவி வருகிறது. எனினும் பேப்பர் தங்கம் என்று அழைக்கப்படும் தங்கப் பத்திரம், தங்கப் பண்டுகள், எம்சிஎக்ஸ் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யலாம்.

தங்கத்தில் முதலீடு செய்யலாம்

தங்கத்தில் முதலீடு செய்யலாம்

அதிலும் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், தங்கத்தில் முதலீடு செய்யலாம். குறுகிய காலத்தில் அவை சற்று விலை குறைந்தாலோ அல்லது ஏற்றம் கண்டாலோ அதனை பற்றி கவலை பட வேண்டாம். ஏனெனில் அது நீண்ட கால நோக்கில் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கூறினோம். அதிலும் பிசிகல் தங்கமாக அல்லாமல், தங்க பத்திரமாகவோ அல்லது தங்கம் இடிஎஃப் ஆகவே வாங்கி வைக்கலாம் என்றும் கூறியிருந்தோம்.

தங்கம் விலை சரிவு

தங்கம் விலை சரிவு

இதற்கிடையில் கடந்த மூன்று தினங்களுக்கு பிறகு தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்து இருந்தாலும், கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து தங்கம் விலையானது வீழ்ச்சி கண்டு வந்திருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு 840 ரூபாய் குறைந்து வர்த்தகமாகி இருக்கிறது.

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

கடந்த மே 20ம் தேதியன்று மட்டும் சவரனுக்கு 448 ரூபாய் குறைந்து, 36,304 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதே மே 21 அன்று சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து, 36,192 ரூபாயாகவும் இருந்துள்ளது.
இதே மே 22 அன்று சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து, 35,896 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று தங்கம் விலை எப்படி?

இன்று தங்கம் விலை எப்படி?

இந்த நிலையில் இன்று சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 35,904 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று தங்க ஆபரணத்தின் விலை சற்று அதிகரித்து இருந்தாலும் கடந்த மூன்று தினங்களாக சரிந்து இருந்த நிலையில், அத்துடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 832 ரூபாய் குறைந்து தான் உள்ளது.

வெள்ளி ஆபரண விலை

வெள்ளி ஆபரண விலை

சென்னையில் இன்று வெள்ளி ஆபரண விலையானது கிராமுக்கு 48.35 ரூபாயாக உள்ல நிலையில், கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து 48,350 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
தங்கம் விலையானது கடந்த மூன்று தினங்களாக குறைந்து இருந்தாலும், வெள்ளியின் விலையானது மே 21 அன்று மட்டும் கிலோவுக்கு 800 ரூபாய் குறைந்து இருந்த நிலையில், தொடர்ச்சியாக இன்று வரையில் ஏற்றம் கண்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+