சரிவில் தங்கம் விலை.. இது வாங்க இன்னொரு சூப்பர் வாய்ப்பு.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது (Gold price) வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக, சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.

இது பெரியளவில் சரிய வாய்ப்பில்லை என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்களுக்கும், நீண்டகால முதலீட்டாளார்களுக்கும் நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே அவ்வப்போது சற்று சரிவினைக் கண்டு வந்தாலும், தொடர்ந்து ஏற்றத்தினை மட்டுமே கண்டு வந்தது.

இது நல்ல வாய்ப்பு

இது நல்ல வாய்ப்பு

நிபுணர்கள் சொன்னதைபோல், தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் தங்கத்தினை, குறைந்த விலையில் வாங்க இது நல்ல வாய்ப்பு தான்.
அதிலும் கடந்த ஆகஸ்ட் மாத வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10 கிராம் தங்கம் விலையானது 11,000 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக இது நடுத்தர மக்களுக்கும், தங்க முதலீட்டாளர்களுக்கும் தங்கத்தினை வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? இந்த இரு சந்தைகளிலும் வெள்ளி விலை நிலவரம் என்ன? தங்கத்திற்கு சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? நீண்டகால நோக்கில் இனி தங்கம் விலை நிபுணர்கள் கூறியது போல ஏற்றத்தில் தான் இருக்குமா? இன்று எப்படி இருக்கும்? இன்று வாங்கலாமா? இனி குறையுமா? குறையாதா? என பலவற்றையும் பார்க்கவிருக்கிறோம்.

சற்றே சரிவில் காமெக்ஸ் தங்கம் விலை

சற்றே சரிவில் காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலையானது சற்றே சரிவில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1.55 டாலர்கள் குறைந்து, 1730.95 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. ஆக இது முதலீட்டாளர்களுக்கு தங்கத்தினை வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

 வெள்ளி விலையும் கிட்டதட்ட 1% சரிவு

வெள்ளி விலையும் கிட்டதட்ட 1% சரிவு

வெள்ளியின் விலையும், தங்கத்தின் விலையினை போல சற்ற சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது, கிட்டதட்ட 1% சரிந்து, 26.108 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் வெள்ளியின் விலையானது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கேப் டவுன் ஆகி கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக இன்று சற்று சரியும் விதமாகவே காணப்படுகிறது.

இந்தியர்களுக்கு ஆறுதல் தந்த தங்கம் விலை

இந்தியர்களுக்கு ஆறுதல் தந்த தங்கம் விலை

இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது இன்று காலை தொடக்கத்தில் இருந்தே, சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 81 ரூபாய் குறைந்து, 44,865 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் தொடக்க விலையானது நேற்றைய முடிவு விலையை விட, சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. தங்கம் விலையும் சற்று சரியும் விதமாகவே காணப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

செம சரிவில் எம்சிஎக்ஸ் வெள்ளி

செம சரிவில் எம்சிஎக்ஸ் வெள்ளி

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையானது, சர்வதேச சந்தையின் எதிரொலியாக செம சரிவில் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 548 ரூபாய் குறைந்து, 67,199 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக வெள்ளியின் விலையும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

டாலர் மதிப்பு ஏற்றம்

டாலர் மதிப்பு ஏற்றம்

அமெரிக்காவின் பத்திர லாபம் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இதனால் குறைந்த வட்டி விகிதம், வட்டியில்லா முதலீடான தங்கத்தினை வைத்திருப்பதனையும் முதலீட்டாளர்கள் யோசிக்கின்றனர். அதொடு வட்டி விகிதமும் தொடர்ந்து பூஜ்ஜியத்துக்கு அருகில் இருக்கும் என்ற நிலையில், டாலரின் மதிப்பு மீண்டும் ஏற்றம் காண தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் விலையானது இன்று சற்று அழுத்தத்தில் காணப்படுகிறது.

முக்கிய லெவல்கள்

முக்கிய லெவல்கள்

தொடர்ச்சியான ஏற்ற இறக்கத்தின் மத்தியில், தங்கத்தின் மீடியம் டெர்ம் ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 45,200/45,600 ஆகவும், சப்போர்ட் லெவல்கள் 44,100 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும் தங்கம் விலையானது சற்று சரியும் விதமாகவே காணப்படுகிறது. இது 1745 டாலர்களுக்கு கீழேயே இருந்தால், இது இன்னும் குறையும் விதமாகவே காணப்படுகிறது. அதிலும் 1660 டாலர்களை உடைத்தால் பெரிய அளவிலான சரிவினைக் காணலாம். அப்படி இல்லாமல் ஏற்றம் கண்டால் 1760 டாலர்களை தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

10 வருட பத்திர லாபம்

10 வருட பத்திர லாபம்

அமெரிக்காவின் 10 வருட பத்திர லாபபமானது 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.75% லாபம் அதிகரித்துள்ளது. ஆக இந்தளவுக்கு லாபம் தரும் நிலையில், இது வட்டியில்லா முதலீட்டினை ஒதுக்க வழிவகுத்துள்ளது. இதனால் டாலரின் மதிப்பும் 91.882 டாலர்களாகவும் அதிகரித்துள்ளது. இது டாலர் அல்லாத முதலீட்டாளர்களுக்கு மிக அதிக விலையுள்ளதாகவும் மாற்றியுள்ளது.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

வட்டியில்லா முதலீடான தங்கத்தின் மீதான ஆர்வமின்மையால், தங்கத்தில் உள்ள முதலீடுகள் வெளியேற ஆரம்பித்துள்ளது. இதனால் தங்க இடிஎஃப்களில் இருந்தும் முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதனால் தங்கம் விலையானது சற்று அழுத்தத்தில் காணப்படுகிறது. எனினும் முதலீட்டாளர்கள் அமெரிக்கா - சீனா பற்றிய பேச்சு வார்த்தையினை கவனித்து வருகின்றனர்.

தங்கத்திற்கு ஆதரவளிக்கும் பணவீக்கம்

தங்கத்திற்கு ஆதரவளிக்கும் பணவீக்கம்

தொடர்ச்சியான மத்திய வங்கியின் ஆதரவுக்கு மத்தியில், பணவீக்கம் பற்றிய கவலைகள் அதிகரித்துள்ளது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக பத்திர லாபமும் சீராக இருந்து வருகின்றது. இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும் தங்கத்திற்கு ஆதரவளிக்கிறது. ஆக நீண்டகால நோக்கில் தங்கம் வாங்க இது சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது தற்போது சற்று குறையும் விதமாகவே காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிப்பதற்கே பல காரணிகளும் சாதகமாக உள்ளன. அதோடு உச்சத்தில் இருந்து தங்கம் விலையானது, 11,000 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கம் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold and silver today drop amid US bond yields

Gold price update.. gold and silver today drop amid US bond yields
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X