தங்கத்தின் தேவையானது கடந்த ஆண்டில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
இது குறித்து வெளியான தொழிற்துறை அறிக்கை ஒன்றில், கொரோனா வைரஸ் காரணமாக, தங்கம் விலையானது வரலாறு காணாத அளவு கடுமையாக உயர்ந்தது. இந்த காரணத்தால், தேவை மிகப்பெரியளவில் வீழ்ச்சியினைக் கண்டது.
இதனால் நகை வாங்குவதும் குறைந்து. மத்திய வங்கிகளின் கொள்முதலும் குறைந்தது.
தங்கத்தின் விலை அதிகரிப்பு
இந்த தொற்று நோய் தங்கத்தின் போக்கினை மாற்றியமைத்துள்ளது. ஆசியாவில் பெரும்பாலான தங்கங்கள் தங்க நகைகளாக விற்பனை செய்யப்படுகின்றது. இதே ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முதலீட்டாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் முக்கிய காரணியாகவும் உள்ளது. இதன் காரணமாக கடந்த 2020ம் ஆண்டில் தங்கத்தின் மதிப்பு 25% வரை அதிகரித்தது.
தங்கம் தேவை சரிவு
ஏனெனில் நகை சந்தையை விட, முதலீட்டாளர்கள் சந்தையில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கிடையில் கடந்த ஆண்டில் தங்கம் தேவையானது 3,759.6 டன்னாக கடந்த ஆண்டில் குறைந்தது. இது கடந்த 2019வுடன் ஒப்பிடும்போது 14% சரிவாகும். இதே கடந்த 2009க்கு பிறகு 4000 டன்னுக்கு கீழாக முதன் முறையாக குறைந்துள்ளது என்று உலக தங்க கவுசில் சமீபத்தில் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
கடந்த காலாண்டில் எவ்வளவு சரிவு?
அதுவும் கடந்த ஆண்டு முடிவில் மிகவும் பலவீனமாகவே இருந்தது. குறிப்பாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 28% குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் தேவை 783.4 டன்னாக குறைந்தது. இது கடந்த 2008க்கு பிறகு எந்த காலாண்டிலும் இல்லாத அளவு குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.அதுவும் கடந்த ஆண்டு முடிவில் மிகவும் பலவீனமாகவே இருந்தது. குறிப்பாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 28% குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் தேவை 783.4 டன்னாக குறைந்தது. இது கடந்த 2008க்கு பிறகு எந்த காலாண்டிலும் இல்லாத அளவு குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
தங்கம் ஒரு பாதுகாப்பு புகலிடம்
தங்கமானது காலம் காலமாக பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் நிலவிய நெருக்கடியான காலகட்டத்தில் கூட, முதலீட்டாளர்கள் கடந்த 2019ம் ஆண்டினை விட, 40% அதிகரித்து 2020ல் 1773.2 டன்னாக தங்கத்தினை
வாங்கிக் குவித்துள்ளனர். உண்மையில் சொல்லப்போனால் இது எந்தவொரு ஆண்டிலும் இல்லாத அளவுக்கு உச்சமாகும்.
சப்ளையும் சரிவு
கடந்த ஆண்டில் மத்திய வங்கிகளில் 273 டன் தங்கத்தினை வாங்கியுள்ளன. இது கடந்த 2019வுடன் ஒப்பிடும்போது 59% குறைவாகும். குறிப்பாக கடந்த ஆண்டின் பிற்பாதியில் தங்கம் வாங்குவதும் கடுமையான வீழ்ச்சியினைக் கண்டது. தொற்று நோய் சுரங்க வேலைகளுக்கு இடையூறாக இருந்ததால், தங்கத்தின் சப்ளை 4% குறைந்து, 4,633 டன்னாக குறைந்தது என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications