தங்கம் விலை அதிகரித்தால் என்ன.. தள்ளுபடியை வாரி வழங்கும் டீலர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு வாரத்தில் தங்கம் விலையானது வரலாறு காணாத உச்சத்தினை கண்டது. ஏற்கனவே நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே தொடர்ந்து விலையேற்றம் கண்டு வரும் தங்கமானது, தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வருகிறது.

இதன் காரணமாக ஆபரண தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் செய்யட்டிருந்த நிலையில், கிட்டதட்ட மூன்று மாதங்களாக மூடிக் கிடந்த நகைக்கடைகள் தற்போது மீண்டும் பல கட்டுப்பாடுகளுடன் துளிர்விடத் தொடங்கியுள்ளன. எனினும் விலை அதிகரிப்பு காரணமாக விலை அதிகளவில் விற்பனையாகது என்ற நிலையில், தங்க நகை டீலர்கள் தள்ளுபடியை அதிகரித்து வருகின்றனர்.

பணப்புழக்கம் குறைவு
 

பணப்புழக்கம் குறைவு

எனினும் மக்களின் கையின் பணப்புழக்கம் குறைவு, பொதுப்போக்குவரத்து முடக்கம் என பல பிரச்சனைகளினால் மக்கள் தங்கத்தினை வாங்க முடியவில்லை. அதோடு தங்கத்திற்கான இறக்குமதி வரி 12.3 சதவீதம் மற்றும் ஜிஎஸ்டி 3 சதவீதம் என தங்க ஆபரண விலையை உயர்த்தி வருகின்றன.

பெரும் தள்ளுபடிகள்

பெரும் தள்ளுபடிகள்

இந்த நிலையில் நகைகளை எப்படியேனும் விற்பனை செய்யவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ள டீலர்கள், பெரும் தள்ளுபடிகளை வாரி வழங்கி வருகின்றன. கடந்த வாரத்தில் அவுன்ஸூக்கு 13 டாலர்கள் தள்ளுபடியுடன் கிடைத்த தங்கம், இந்த வாரத்தில் 18 டாலர்கள் வரை தள்ளுபடி கிடைத்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

வரலாற்று உச்சம் தொட்ட தங்கம்

வரலாற்று உச்சம் தொட்ட தங்கம்

நடப்பு வாரத்தில் கடந்த புதன் கிழமையன்று எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலையானது 48,589 ரூபாயாக புதிய உச்சத்தினை தொட்டது. இது முன்னர் 48,315 ரூபாயாக வரலாற்று உச்சம் இருந்தது குறிப்பிடத்தக்கது. விலையுயர்ந்த உலோகங்களிலேயே தங்கம் தனித்துவம் மிக்கதாக இருந்து வருகிறது.

என்ன காரணம்?
 

என்ன காரணம்?

அமெரிக்கா சீனா பதற்றங்களால் இது சர்வதேச சந்தையில் 16 சதவீதம் ஏற்றம் கண்ட நிலையில், பாதுக்காப்பு புகலிடமான தங்கம் விலையானது உயர்ந்துள்ளது. புளும்பெர்கின் மதிப்பீட்டின் படி, தங்கத்திற்காக வலுவான முதலீட்டு தேவையின் அறிகுறியால் கோல்டு இடிஎஃப் முதலீடுகளும் அதிகரித்துள்ளன. நிகர இருப்பு 600 டன்களுக்கும் அதிகமாக வருவாய் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold discounts on India go up as price touch new high

Physical gold discounts in India widened this week as prices hit new high and a surge in coronavirus cases.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X