Gold: இருமடங்காக மாறிய முதலீடு.. தங்கம் எடுத்துக் கொண்ட காலம் எவ்வளவு தெரியுமா?

தங்கத்தின் விலை இனியும் அதிகரிக்குமா? ஏற்கனவே வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது. இனியும் இந்த போக்கு தொடருமா? தங்கத்தில் முதலீடு செய்தால் இனியும் முதலீடு என்பது இரட்டிப்பு ஆகுமா?

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. ஆக இனி எப்படியிருக்கும்? தற்போதைய விலையில் வாங்கலாமா? வேண்டாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன?

பணத்தை இரட்டிப்பாக்கியுள்ளதா?

பணத்தை இரட்டிப்பாக்கியுள்ளதா?

கடந்த 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு (24 கேரட்) 30,000 ரூபாய் என்ற லெவலில் இருந்து 60,000 ரூபாயாக ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது.

ஆக 5 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் இன்று உங்கள் முதலீடு கிட்டதட்ட இருமடங்காக ஆகியிருக்கும்.

 

 போர்ட்போலியோவில் கட்டாயம்?

போர்ட்போலியோவில் கட்டாயம்?

தற்போது தங்கம் விலையானது வரலாறு காணாத உச்சத்தில் இருந்தாலும், கட்டாயம் போர்ட்போலியோவில் இருக்க வேண்டும் என ஆலோசகர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

ஏனெனில் அது எப்போதும் மோசமான காலங்களில், நெருக்கடியான காலங்களில் முதலீட்டாளர்களை ஆதரிக்கிறது. பாதுகாப்பு புகலிடமாக திகழ்கிறது. எனினும் நெருக்கடியான சூழ்நிலையில், தங்கத்தை எவ்வாறு வாங்குவது என்பதையும் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

 

தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி?

தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி?

நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பினால், அதனை ஆன்லைனில் வாங்க வேண்டும். இதே தங்க நகைகளை வாங்கியிருந்தால் அது முதலீடாக இருக்காது. அதில் பெரியளவில் லாபமும் கிடைக்காது.

மாறாக உங்கள் தங்கத்தில் தேய்மானம் இருக்கலாம். நகை வடிவில் தங்கத்தை வாங்கும்போது, ​​அதை விற்கும்போது நிறைய பணம் கழிக்கப்படுகிறது. ஆக இதுபோன்ற சமயத்தில் குறைந்தபட்சம் 3 - 5 ஆண்டுகளுக்குப் பிறகு விற்பனை செய்தால் சற்று லாபம் கிடைக்கலாம்.

 

பாதுகாப்பு இருக்கா?

பாதுகாப்பு இருக்கா?

அதோடு அதில் பாதுகாப்பும் பிரச்சனை, இது தங்க நகைகள் மட்டும் அல்ல, பிஸ்கட் மற்றும் நாணயங்கள் வடிவில் வாங்கலாம். ஆனால் அதனையும் வைத்திருப்பது கடினம். இதில் தரம் என்பது பெரும் பிரச்சனை.

ஆனால் அதனை ஆன்லைனில் வாங்குவது எளிது. விற்பனை செய்வதும் எளிது. இதில் பாதுகாப்பு, தரம் பிரச்சனை கிடையாது. குறிப்பாக ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்க பத்திரத்தினை வாங்கியும் லாபம் பார்க்கலாம். இதே எம்சிஎக்ஸ் கமாடிட்டியிலும் வாங்கி விற்கலாம். இதற்கு டீமேட் கணக்கு தேவைப்படும். இதில் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு பாதுகாப்பு உண்டு.

 

ஆப் மூலமாகவும் வாங்கலாம்?

ஆப் மூலமாகவும் வாங்கலாம்?

தங்கத்தினை இன்றைய காலகட்டத்தில் பல்வேறு ஆப்கள் மூலமாகவே வாங்கலாம். இதில் மிக குறைந்த அளவில் கூட முதலீடு செய்ய முடியும். தங்கத்தில் முதலீடு செய்வதையும் ஆப் மூலம் செய்யலாம். இதற்காக பல்வேறு தள்ளுபடிகளை நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

இதனை உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தே செய்யலாம். இந்த ஆப்களில் தங்கத்தை குறைந்தபட்சம், குறைந்த தொகையில் இருந்தும் கூட வாங்கலாம். இதில் தரம் என்பது பெரும் பிரச்சனையாக இருக்காது.

 

கடந்த 10 ஆண்டு நிலவரம்?

கடந்த 10 ஆண்டு நிலவரம்?

கடந்த 10 ஆண்டுகளில் 5 ஆண்டுகளாக தங்கத்தின் விலை ஏறக்குறைய ஒரே மாதிரியாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை மிக வேகமாக உயர்ந்துள்ளது. பங்கு தரகு நிறுவனமான ஐஐஎஃப்எல் செக்யூரிட்டிஸின் துணைத் தலைவர் அனுஜ் குப்தா, நடப்பு ஆண்டு இறுதிக்குள், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 65,000 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என கணித்துள்ளார். .

முதலீடு எப்படியிருக்கணும்

முதலீடு எப்படியிருக்கணும்

எனினும் தங்கத்தில் உங்கள் போர்ட்போலியோவில் கணிசமான முதலீட்டை மட்டுமே செய்ய வேண்டும் என்பது அவர்களின் ஆலோசனை. உங்கள் போர்ட்ஃபோலியோவில் தங்கத்தின் பங்கு 10 - 15% வரை மட்டுமே இருக்க வேண்டும் என பரிந்துரை செய்கின்றனர்.

தங்கம் விலை 10 ஆண்டு வரலாறு?

தங்கம் விலை 10 ஆண்டு வரலாறு?

  • மார்ச் 2013ல் தங்கம் விலை ரூ.29,100
  • மார்ச் 2014-ல் தங்கம் விலை ரூ.29,178
  • மார்ச் 2015-ல் ரூ.26,300
  • மார்ச் 2016-ல் ரூ.28,588
  • மார்ச் 2017-ல் ரூ.28,796
  • மார்ச் 2018-ல் ரூ.30,907
  • மார்ச் 2019-ல் ரூ.32,152
  • மார்ச் 2020-ல் ரூ.41,273
  • மார்ச் 2021-ல் ரூ.44,728
  • மார்ச் 2022-ல் ரூ.52,063
  • மார்ச் 2023-ல் ரூ.59,653

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+