கல்யாண சீசன் ஆரம்பிக்கப் போகுது, ஆனா தங்கம் விலை என்னடான்னா ராக்கெட் வேகத்தில் ஏறிக்கிட்டே இருக்கே. அப்படின்னு கவலைப்பட்டவங்களுக்கு ஒரு செம குட் நியூஸ். சில மாதங்கள் முன்பு வரையில் அனுதினமும் உச்சத்தை தொட்ட தங்கம், இப்போ அதிலிருந்து 17% வரை சரிந்து முதலீட்டாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவோட அந்த வேலைவாய்ப்பு தரவுகள் வெளியானதுக்கு அப்புறம் மார்க்கெட்டே தலைகீழா மாறி இருக்கு. இப்போ நகை வாங்குறது லாபமா? இல்ல இன்னும் விலை குறையுமா? அடுத்து என்ன செய்யலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன என தெரிந்து கொள்வோம்.

ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ள அமெரிக்கா - ஈரான் பதற்றமானது பொருளாதாரத்தை இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ தெரியவில்லை. இந்த சூழலில் முதலீட்டாளர்கள் கவனம் முழுக்க தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. நடப்பு வாரத்தின் தொடக்கத்தில் சற்று தடுமாறிய தங்கம் விலை 2.20% அளவுக்கு வார இறுதியில் ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக காமெக்ஸ் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 4,679.70 டாலராக காணப்படுகிறது. இதுவே எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராமுக்கு 1,49,650 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இது அதன் வரலாற்று உச்ச விலையான 1,80,779 ரூபாயில் இருந்து பார்க்கும்போது 31,000 ரூபாய் அல்லது 17% சரிவில் காணப்படுகிறது.
இதனிடையே சந்தை நிபுணர்கள், அமெரிக்க அதிபர் டிரம்பின் உரையானது சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா ஈரான் போரில் நிலவி வரும் பதற்றமானது முடிவுக்கு வரலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பை, டிரம்பின் ஒற்றை உரை சுக்கு நூறாக உடைத்து விட்டது. இந்த சூழலில் கருப்பு தங்கமான கச்சா எண்ணெய் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
அதிகரித்து வரும் போர் பதற்றம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட சில காரணிகள் பணவீக்கம் குறித்த கவலையை அதிகரித்துள்ளன. இதனிடையே அமெரிக்க டாலர் மதிப்பு ஏற்றம் ,மற்றும் பத்திர சந்தையானது தங்கம் விலையை பெரிய அளவில் ஏற்றம் காண விடாமல் தடுத்து வருகிறது. இதற்கிடையில் தான் அமெரிக்காவின் வேலை வாய்ப்பு தரவுகளானது எதிர்பார்த்ததை விட சந்தைக்கு சாதகமாக சிறப்பாக வந்துள்ளது. இது போர் பதற்றத்துக்கு மத்தியிலும் அமெரிக்க பொருளாதாரம் வலுவான வளர்ச்சி பாதையில் இருப்பதையே காட்டுகிறது. இதன் விளைவாக அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தை தற்போதைக்கு குறைக்காது என்ற நிலையே காணப்படுகிறது.
இது தங்கத்தின் மீதான ஆர்வத்தை குறைத்து, மாறாக டாலர், பத்திரங்களில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.
இருப்பினும் ஈரான் - அமெரிக்கா பிரச்சனை என்பது தற்காலிகமானது அல்ல. இது இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்று தெரியவில்லை. டிரம்பின் பேச்சு இன்னும் சில காலத்திற்கு நீட்டிக்கலாம் என்ற எதிர்பார்ப்பையே ஏற்படுத்தியுள்ளது. இது ஹார்மூஸ் ஜலசந்தியிலும் பிரச்சனையை நீடிக்க வழிவகுக்கலாம். இது மேற்கொண்டு சர்வதேச எரிபொருள் சந்தையை கவலைக்குரியதாக மாற்றலாம். ஆக நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலை ஏற்றம் காணவே வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. இருப்பினும் மொத்தமாக முதலீடு செய்யாமல் படிப்படியாக முதலீடு செய்யலாம். குறுகிய கால முதலீட்டாளர்கள் மிகவும் கவனமாக வர்த்தகம் செய்வது நல்லது. ஆபரண தங்கம் வாங்க நினைப்பவர்கள் அவசியம் தேவை என நினைப்பவர்கள் வாங்கலாம். மற்றவர்கள் டிஜிட்டல் தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications