நம் நாட்டில் சமானிய மக்கள் முதல் பெரும் கோடீஸ்வரர்கள் வரை தங்கத்தில் முதலீடு செய்வதை விரும்புவார்கள். பெரும்பான்மையான மக்கள் நேரடியாக தங்க நகைகள், நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகளை வாங்குகின்றனர். இருப்பினும் இன்றைய நவீன உலகத்துக்கு ஏற்பட டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அரசின் தங்க பத்திரங்கள் மற்றும் கோல்டு இ.டி.எஃப். போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள்.

பரஸ்பர நிதி நிறுவனங்களின் பரஸ்பர நிதி திட்டங்களில் ஒன்றுதான் கோல்டு இ.டி.எஃப்.. இந்த திட்டத்தில் நாம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயும் தங்கத்தில் முதலீடு செய்யப்படும். கோல்டு இ.டி.எஃப். பங்குகள் போன்றவை. மேலும் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வர்த்தக செய்யலாம். இந்த கோல்டு இ.டி.எஃப். திட்டத்தில் நாம் வாங்கும் ஒவ்வொரு யூனிட்டும் ஒரு கிராம் தங்கத்துக்கு சமம். அதேசமயம் நீங்கள் தங்கத்தை உலோகமாக பெற முடியாது என்பது முக்கியமான விஷயம். அதற்கு பதிலாக தங்க யூனிட்கள் உங்களது டீமேட் கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன. உங்கள் தேவைக்கேற்ப அவற்றை எப்போதும் வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம்.
கோல்டு இ.டி.எஃப்.-ல் முதலீடு செய்ய முதலில் டீமேட் கணக்கை தொடங்க வேண்டும். கோல்டு இ.டி.எஃப். யூனிட்களை நீங்கள் வாங்கும்போது, உங்கள் டீமேட் கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும். அடுத்த 2 தினங்களுக்குள் இ.டி.எஃப். கணக்கில் தங்கம் வரவு வைக்கப்படும். தங்க யூனிட்களை விற்க நினைத்தால் உங்கள் வர்த்தக கணக்கு வாயிலாக விற்பனை செய்யலாம். நாட்டில் உளள் சில கோல்டு இ.டி.எஃப். நிதி திட்டங்கள், வழக்கமான வங்கி டெபாசிட்டுகளை காட்டிலும் சிறப்பான வருமானத்தை அளித்துள்ளன என்று நிதி சேவை நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
நிதித் சேவை தளமான க்ரோ அறிக்கையின்படி, Axis Gold ETF கடந்த ஆண்டில் 19.74 சதவீதம் வருவாய் ஈட்டியுள்ளது, மூன்று ஆண்டு சராசரி வருமானம் 16.44 சதவீதமாகும். SBI Gold ETF கடந்த ஒராண்டில் 19.77 சதவீதமும், மூன்று ஆண்டில் 16.44 சதவீதமும் ஆதாயம் அளித்துள்ளது. இந்த வருமானம் பொதுவாக வங்கி பிக்சட் டெபாசிட்களில் கிடைப்பதை விட இரண்டரை மடங்கு அதிகமாகும். Invesco India Gold ETFல் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கடந்த ஒராண்டில் 10.49 சதவீதமும் மூன்றாண்டு காலத்தில் 17.58 சதவீதமும் வருவாய் ஈட்டியுள்ளனர். Nippon India Gold ETF நிதி திட்டம் கடந்த ஓராண்டில் 19.75 சதவீதமும், மூன்றாண்டுகளில் 14.64 சதவீதமும் வருவாய் ஈட்டியுள்ளது.
More From GoodReturns

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!



Click it and Unblock the Notifications