உலகளவில் தங்கம் வாங்க வேண்டுமென ஒரு பிரச்சாரம் தீவிரமாகக் கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்டது பலருக்கும் நினைவிருக்கும். ஆனால் இந்த வருடம் சர்வதேச வர்த்தகச் சூழ்நிலை காரணமாகத் தங்கம் தான் அதிகப்படியான லாபத்தைக் கொடுத்த முதலீடாக இருந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் மட்டும் தங்கம் மீதான முதலீட்டுக்கு சுமார் 13% க்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தங்கம் விலை உயர்வில்லை என்றாலும் பங்குச்சந்தை, மியூச்சவல் பண்ட், அரசு பத்திரம் ஆகியவற்றுக்கு இணையாக லாபத்தைத் தங்கம் கொடுத்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் கோவிட் தொற்று காலத்தின் போது தங்கம் விலை 28.23% என்ற அளவில் உயர்ந்து முதலீட்டாளர்களுக்குச் சிறந்த வருமானத்தைக் கொடுத்தது. இதன் மூலம் தங்கம் நிச்சயமற்ற பொருளாதாரக் காலங்களில் ஏன் சிறந்த ஹெட்ஜிங் கருவி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபணம் செய்துள்ளது.
இந்தியச் சந்தையைப் பொறுத்த வரையில் 2023 ஆம் ஆண்டில் சென்செக்ஸ் குறியீடு 16.25 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, நிஃப்டி 50 குறியீடு 17.32 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. தங்கம் விலை 56080 ரூபாயில் இருந்து 64875 ரூபாய் வரையில் உயர்ந்து 17.46 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது.
தங்கம் விலை இந்த ஆண்டுத் துவக்கத்தில் அமெரிக்க வங்கி திவால், அடுத்தடுத்து வட்டி உயர்வு, பொருளாதாரம் சரிவு, பணவீக்கம் உயர்வு, ரெசிஷன் அச்சம் எனப் பல பிரச்சனைகள் இருந்த காரணத்தால் தங்கம் விலை முதல் 6 மாதத்தில் தடாலடியாக உயர்ந்தது. அடுத்த 6 மாதத்தில் தங்கம் விலை உயர்வான இடத்திலேயே தக்கவைத்துக்கொள்ளும் அளவுக்குச் சர்வதேச பொருளாதாரச் சூழ்நிலை இருந்தது.
இதேவேளையில் எம்சிஎக்ஸ் தங்கம் விலை மற்றும் காமெக்ஸ் விலையை ஒப்பிடும் போது, எம்சிஎக்ஸ் விலை சற்று அதிகமாகவே உயர்ந்துள்ளது. 2023ல் எம்சிஎக்ஸ் தங்கம் விலை 13.55 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் காமெக்ஸ் தங்கம் விலை 11.70 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் எம்சிஎக்ஸ் தங்கம் விலை வரலாற்று உச்ச அளவான 64,063 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2023ல் எம்சிஎக்ஸ் தங்கம் விலை 13.55 சதவீதம் உயர்ந்தது போல் 2011ல் அதிகப்படியாக 31.84 சதவீதமும், 2010ல் 29.61 சதவீதமும் உயர்ந்துள்ளது. 2013ல் எம்சிஎக்ஸ் தங்கம் விலை 7.89 சதவீதம் சரிந்த காலமும் உள்ளது.
பங்குச்சந்தை போல் தங்கம் மீதான முதலீட்டின் மீதும் ரிஸ்க் இருந்தாலும் இதன் அளவு குறைவு. எப்போதும் உங்கள் போர்ட்போலியோவில் குறிப்பிடத்தக்க முதலீடு தங்கம், வங்கி வைப்பு நிதி போன்ற முதலீடுகள் இருப்பது அவசியம்.
More From GoodReturns

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?



Click it and Unblock the Notifications