தங்கம் விலை குறையுமா? விலை அதிகரிப்பால் தவிக்கும் மக்கள்.. யோசிக்கும் விற்பனையாளர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் அடுத்த வாரங்களில் வரவிருக்கும் தீபாவளி மற்றும் தந்தேராஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாக்காலங்களில் பொதுவாகவே தங்கம் விற்பனை அதிகரிக்கும்.

இந்த பண்டிகை தினங்களில் தங்கம் வாங்கினால் அது பல்கிப் பெருகும் என்றும் நம்பப்படுகிறது.

அதோடு தந்தேராஸ் பண்டிகையில் தங்கம் வாங்குவது செல்வம் பெருக வைப்பதுடன், பல நன்மைகளை அளிக்கும் என்பதும் ஐதீகம்.

தங்கம் தேவை குறைவு

தங்கம் தேவை குறைவு

பொதுவாக இந்தியாவில் இந்த காலகட்டத்தில் சில்லறை வர்த்தகத்தில், தங்கம் விற்பனையானது அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒட்டுமொத்தத்தில் நடப்பு ஆண்டில் கொரோனா வைரஸின் காரணமாக, ஒட்டுமொத்த தேவை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜீவல்லரி உரிமையாளர்கள் கூட, தங்கம் வாங்குவதை குறைத்துள்ளதாக இடி அறிக்கைகள் கூறுகின்றது.

ஸ்பாட் தங்கம் விலை அதிகரிப்பு

ஸ்பாட் தங்கம் விலை அதிகரிப்பு

இது குறித்த அறிக்கையில் தங்கத்தின் மிகப்பெரிய நுகர்வோரான சீனாவிலேயே டிஸ்கவுண்ட் குறைந்துள்ளதாக கூறியுள்ளது. இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ப்யூச்சர் தங்கத்தின் விலையானது 10 கிராமுக்கு 52,425 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 20ல் இருந்து சர்வதேச ஸ்பாட் தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

விற்பனையாளர்கள் தள்ளுபடி

விற்பனையாளர்கள் தள்ளுபடி

எனினும் விற்பனையாளர்கள் உத்தியோகபூர்வ உள்நாட்டு விலையை அவுன்ஸூக்கு 4
டாலர் தள்ளுபடியை வழங்கி வருகின்றனர். இதில் இறக்குமதி வரி 12.5 சதவீதம் மற்றும் 3 சதவீதம் விற்பனை வரி உட்பட அனைத்தும் அடங்கும். கடந்த வாரம், 1 டாலர் பிரிமீயம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நகைக்கடை விற்பனையாளர்கள்

நகைக்கடை விற்பனையாளர்கள்

நகைக்கடை விற்பனையாளர்கள் தீபாவளிக்கு ஏராளமான கொள்முதல் செய்துள்ளனர். இப்போது அவர்கள் மேலும் ஒரு திருத்தம் செய்ய காத்திருக்கிறார்கள் என்று மும்பையைச் சேர்ந்த சில வியாபாரிகள் கூறியுள்ளனர். ஏனெனில் விழாக்காலத்தில் தேவை அதிகரித்து வரும் நிலையில், விற்பனையை ஊக்குவிக்க ஒரு திருத்தம் அவசியம். சிங்கப்பூரில் சர்வதேச ஸ்பாட் தங்கம் விலையினை விட, தங்கம் விலை 0.80 - 1.40 டாலர் பிரீமியத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

தேவை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பு

இந்த நிலையில் நகைக் கடைக்காரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தேவை அதிகரிப்பதை
பார்க்கிறார்கள். ஏனெனில் இது வரவிருக்கும் பண்டிகை காலம் என்பதால் தேவை அதிகரிக்கலாம். ஆனால் இது சீனா மற்றும் இந்தியா போன்ற முக்கிய சந்தைகளுடன் ஒப்பிடும்போது கணிசமாக இருக்காது என்று கோல்ட் சில்வர் சென்ட்ரலின் நிர்வாக இயக்குனர் பிரையன் லேன் கூறியுள்ளார்.

முதலீட்டாளர்கள் தங்கத்தினை நோக்கி செல்லலாம்

முதலீட்டாளர்கள் தங்கத்தினை நோக்கி செல்லலாம்

எனினும் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவலானது இரண்டாம் கட்டமாக பரவி வரும் நிலையில், மீண்டும் லாக்டவுனை கடுமையாக்க வழிவகுத்துள்ளளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தினை நோக்கி செல்லலாம் என்று ஜே.ரோட்டட்பார்ட் கோ நிறுவனத்தின் தென் கிழக்கு வணிக மேம்பாட்டு நிர்வாகி ஸ்விகா ரோட்பார்ட் கூறியுள்ளார்.

தள்ளுபடிகள் சரிவு

தள்ளுபடிகள் சரிவு

சீனாவில் தள்ளுபடிகள் கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் 30 - 32 டாலர்களாக இருந்த நிலையில், நடப்பு வாரத்தில் 20 - 26 டாலர்களாக குறைந்துள்ளது. சீனாவின் யுவான் மதிப்பு 28 மாதங்களில் இல்லாத அளவு உச்சத்தினை தொட்டது. எனினும் சீனாவில் தேவை வலுவாக காணப்படுகிறது. இதற்கிடையில் மக்கள் அவுன்ஸூக்கு 1,870 - 1,880 டாலர்கள் என்ற நிலையில் வந்தால், வாங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold high prices hit demand

India’s Gold jewellers stare at a gloomy Diwali as high prices hit gold demand and sales
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X