மும்பை: இன்று உலகமே பயந்து கொண்டு இருக்கும் கொரோனா என்னும் அரக்கனால், இன்னும் எந்த மாதிரியான பிரச்சனைகளையெல்லாம் எதிர்கொள்ள போகிறோமோ தெரியவில்லை.
ஒரு புறம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டுள்ள நிலையில், மறுபுறம் கொரோனாவால் முடங்கி போயுள்ள பொருளாதாரம், அதிகரித்து வரும் வேலையின்மை, இப்படி மக்களை பாடாய் படுத்தி வரும் கொரோனாவால் ஜொலி ஜொலிக்கும் தங்கத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
கொரோனாவினால் சரியும் பொருளாதாரம் ஒரு புறம் உள்ள நிலையில், இதனால் பங்கு சந்தைகளும் தொடர்ந்து சரிய ஆரம்பித்துள்ளன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்களது பாதுகாப்பு கருதி, பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் தங்களது முதலீடுகளை செய்து வருகின்றனர்.
வரலாறு காணாத உச்சம்
இவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வரும் முதலீடுகளால் தங்கம் விலையானது தொடர்ந்து வரலாறு காணாத அளவு உச்சம் கண்டு வருகிறது. இந்த நிலையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய இறக்குமதியாளரான இந்தியாவில், விலையுயர்ந்த உலோகங்களின் இறக்குமதியானது வீழ்ச்சி கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இறக்குமதி வீழ்ச்சி
இது குறித்து வெளியான செய்தியில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, ஜுன் மாதத்தில் தங்கம் இறக்குமதியானது 86 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் வரலாறு காணாத அளவு தங்கம் விலை அதிகரித்துள்ளதே என்றும் கூறப்படுகிறது. இதுவும் தங்கம் இறக்குமதி வீழ்ச்சி காண வழி வகுத்துள்ளது. மேலும் விமான போக்குவரத்துகளும் முடங்கியுள்ள நிலையில், ஜூவல்லரி கடைகளூம் முடங்கியிருந்தன.
இதுவும் ஒரு காரணம்
அதோடு கொரோனா வைரஸினை கட்டுக்குள் கொண்டு வர லாக்டவுன் கிட்டதட்ட 3 மாதங்கள் செய்யப்பட்டிருந்த நிலையில், இதுவும் இறக்குமதி வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. இது கடந்த சில வாரங்களுக்கு முன்பு சற்று தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் வெறும் 11 டன்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இறக்குமதி மதிப்பு
இதே கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தங்கம் இறக்குமதியானது 77.73 டன்னாக இருந்தது. இதன் மதிப்பு கடந்த ஆண்டு 2.7 பில்லியன் டாலராக இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் வெறும் 608.76 மில்லியன் டாலராக குறைந்துள்ளது. நிபுணர்கள் மத்தியில் தங்கம் விலையானது இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படும் நிலையில், தங்கம் விலையானது தொடர்ந்து அதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக ஏற்றம் கண்டு வருகிறது.
இறக்குமதி இன்னும் குறையுமா?
இதனால் தங்கம் இறக்குமதியானது இன்னும் குறையவே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. தங்கம் இறக்குமதி குறைவது ஒரு வகையில் நல்ல விஷயமே என்றாலும், உள்ளூர் கடைகளின் தங்கம் விலை இன்னும் அதிகரிக்க இதுவே காரணமாக அமைந்துவிடும் என்கிறார்கள் நிபுணர்கள். ஆக இனி வரும் மாதங்களிலாவது இது சரியாகுமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே..
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications