மும்பை: வெள்ளி இறக்குமதியானது செப்டம்பர் மாதத்தில் 93% குறைந்து, 20 டன்னாக குறைந்துள்ளது.
இதே தங்கம் இறக்குமதியானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 59% குறைந்துள்ளது. இது நான்கு மாதத்தில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
இறக்குமதியானது குறைந்தாலும், கொரோனாவின் காரணமாக விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வரலாறு காணாத அளவு கண்ட விலை அதிகரிப்பினால், மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது.
தங்கம் இறக்குமதி சரிவு
இந்தியா செப்டம்பர் மாதத்தில் 11 டன் தங்கத்தினை இறக்குமதி செய்த உலகின் இரண்டாவது மிகப்பெரிய நுகர்வோர் ஆகும். இது முந்தைய ஆண்டில் 27 டன்னிலிருந்து குறைந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இதற்கிடையில் தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில், வரலாறு காணாத உச்சத்தினை தொட்டது.
தங்கம் விலை வரலாற்று உச்சம்
உலகளவில் கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், தங்கம் விலையானது வரலாறு காணாத உச்சத்தினை தொட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச சந்தையிலும், இந்திய கமாடிட்டி வர்த்தகம், ஆபரண சந்தை என அனைத்திலும் தங்கம் விலையானது வரலாறு காணாத உச்சத்தினை தொட்டது.
செப்டம்பரில் சரிவு
ஆகஸ்ட் மாதத்தில் வரலாறு காணாத உச்சத்தினை தொட்டிருந்தாலும், செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையானது தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகின்றது. இந்திய சந்தையில் 10 கிராம் தங்கத்திற்கு 6000 ரூபாய்க்கு மேலும், இதே சர்வதேச சந்தையில் 180 டாலர்களுக்கு மேலாகவும், ஆபரணத் தங்கம் விலையானது சவரனுக்கு 5,000 ரூபாய்க்கு மேலும் சரிந்துள்ளது.
நிபுணர்கள் தங்கம் விலையானது நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது, தற்போதைய நெருக்கடியான நிலையில் எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம், அது லாபகரமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆக இதுவும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு தான்.
தங்கத்தினை வாங்கலாமா?
தங்கத்தினை பொறுத்த வரையில் பாதுகாப்பு புகலிடமாக விளங்கி வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவல், பொருளாதார மந்த நிலை, முதலீட்டு தேவை, பிசிகல் தங்கத்திற்கான தேவை உள்ளிட்டவை, தங்கத்திற்கு ஆதரவாக செயல்படலாம். இதனால் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம். இதனால் நீண்டகால நோக்கில் தங்கத்தினை வாங்கி வைக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?



Click it and Unblock the Notifications