இந்தியாவில் ஒரு பக்கம் கொரோனா தொற்று இருந்தாலும், மாநில அரசுகள் தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் வேளையில் மக்களுக்கு எதுவான சூழ்நிலையை அமைத்துக்கொடுக்கும் வகையில் லாக்டவுன் கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளார்.
இதன் மூலம் நகை கடைகள் நீண்ட காலத்திற்குப் பின், முக்கியக் கட்டுப்பாடுகள், விதிமுறைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா மூலம் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மோசமாக இருக்கும் நிலையில் மாநில அரசுகளின் இந்தத் தளர்வுகள் வியாபாரிகளால் வரவேற்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக நகைக்கடைக்காரர்கள் மத்தியில் அதிக வரவேற்பு அளித்து, வாடிக்கையாளர்களைத் தள்ளுபடிகள் உடன் ஈர்க்க உள்ளது.
தங்கம் விலை சரிவு
இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து இரண்டு வர்த்தக நாட்களாகக் குறைந்து வரும் நிலையில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. இந்தியாவைப் போலவே சீனாவிலும் தங்கம் அதிகளவில் வாங்கப்பட்டு வருகிறது. உலகளவில் ரீடைல் சந்தையில் அதிகளவில் தங்கம் நுகர்வை கொண்டு இருக்கும் நாடுகள் இந்தியா மற்றும் சீனா.
லாக்டவுனுக்குப் பின் நகை கடைகள்
லாக்டவுனுக்குப் பின் நகை கடைகள் திறக்கப்பட்டு உள்ள காரணத்தால் தங்கம் மற்றும் தங்க நகைகள் விற்பனையை அதிகரிக்கத் தங்கம் விற்பனை செய்யும் டீலர்கள் ஒரு அவுன்ஸ் தங்கத்தைச் சுமார் 12 டாலர் தள்ளுபடிக்கு விற்பனை செய்து வருகிறது.
12 டாலர் தள்ளுபடி
இதில் 10.75 சதவீத இறக்குமதி கட்டணம் மற்றும் 3 சதவீத சேவை வரி ஆகியவற்றையும் சேர்த்து 12 டாலர் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பதால் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கையும், வாங்கும் அளவீடு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
தங்க நகைக் கடைக்கார்கள்
சந்தையில் தங்க நகை விற்பனை எவ்வளவு வேகமாக மீண்டு வரும் என்பது தெரியாத நிலையில் தங்க நகைக்கடைக்காரர்கள் தங்கத்தை அதிக விலை கொடுத்து வாங்க தயாராக இல்லை. இதனாலேயே இந்த நிலையை மாற்ற தற்போது தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.
தங்கம் இறக்குமதி
2020 லாக்டவுன் நிறைந்த மே மாதத்திற்கும், 2021 மே மாதத்திலும் தங்கம் விலை சுமார் 9 மடங்கு அதிகரித்துச் சுமார் 12 டன் தங்கம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.
மக்களுக்கு ஜாக்பாட்
தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள தள்ளுபடிகளைப் பயன்படுத்தி நகைக்கடைகாரர்களும் வாடிக்கையாளர்களுக்குத் தங்க நகைகள் மீது தள்ளுபடி அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் தங்கம் விலை அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தள்ளுபடி கிடைக்கும் காரணத்தால் மக்களுக்கு ஜாக்பாட் ஆக அமையும்.
More From GoodReturns

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!



Click it and Unblock the Notifications