தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் பெரியளவில் மாற்றமின்றி சற்று தடுமாற்றத்தில் தான் காணப்படுகின்றது. இது அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது இன்று முக்கிய அறிவிப்பினை வெளியிடவுள்ள நிலையில், தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது.
அதோடு இன்று நுகர்வோரின் செலவினங்கள் குறித்த PCE தரவானது இன்று வெளியாகவுள்ளது. இது பணவீக்கத்தின் எதிரொலி இதில் தாக்கத்தினை ஏற்படுத்தி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாலரின் மதிப்பு
கடந்த வியாழக்கிழமையன்று அமர்வில் தங்கம் விலையானது 1% மேலாக சரிவில் காணப்பட்டது. அமெரிக்காவின் பொருளாதாரம் தற்போது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது மேற்கொண்டு டாலரின் மதிப்பினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்கலாம்.
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம்
வேலையின்மை நலன் குறித்தான விகிதமானது எதிர்பார்த்ததை விட குறைந்துள்ளது. எனினும் முன்பை விட க்ளைம் விகிதம் அதிகரித்துள்ளது. இது பொருளாதாரம் மிக வேகமாக முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், வளர்ச்சி கண்டு வருகின்றது. இது மூன்றாவது காலாண்டில் 3.2% ஆக அதிகரித்துள்ளது. இது முன்னதாக 2.9% ஆக எதிர்பார்க்கப்பட்டது.
பணவீக்கம் Vs தங்கம்
பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையானது, தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்து வரும் சூழலில், வட்டியில்லா முதலீடான தங்கத்தில் குறையலாம். இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
பிரிட்டன் பொருளாதாரம்
அதேபோல ஐரோப்பிய மத்திய வங்கியானது தற்போதைய நிலையில் இருந்து வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். பிரிட்டன் பொருளாதாரமும் தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், இதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை?
தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 7.35 டாலர்கள் அதிகரித்து, 1802.55 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்றே தடுமாற்றத்தில் இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் பொறுத்திருந்து வாங்கலாம்.
இதே வெள்ளி விலையானது சர்வதேச சந்தையில் 0.83% அதிகரித்து, 23.828 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்றே அதிகரித்து பின்னர் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
இந்திய சந்தையில் தங்கம் விலை?
இந்திய சந்தையில் தங்கம் விலையானது 18 ரூபாய் அதிகரித்து, 54,539 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்றே அதிகரித்தாலும், மீண்டும் குறையலாம் எனும் விதமாக காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
இதே வெள்ளி விலையானது இந்திய சந்தையில் 278 ரூபாய் அதிகரித்து, 68,799 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்றே அதிகரித்து பின்னர் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
ஆபரணத் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், ஆபரணத் தங்கம் விலை குறைந்தே காணப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலையானது சென்னையில் இன்று கிராமுக்கு 58 ரூபாய் குறைந்து, 5066 ரூபாயாகவும், சவரனுக்கு 464 ரூபாய் குறைந்து, 40,528 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 64 ரூபாய் குறைந்து, 5526 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 640 ரூபாய் குறைந்து, 55,260 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையும் குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 73.70 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்து, 73,700 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?



Click it and Unblock the Notifications