Gold price update: தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் இருந்து சரிவில் காணப்படுகிறது. இது மேற்கொண்டு டெக்னிக்கலாக இன்னும் சரிவினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்று வார இறுதி வர்த்தக நாள் என்ற நிலையிலும், தங்கத்தின் நடப்பு காண்ட்ராக்ட் அடுத்த வாரம் எக்ஸ்பபெய்ரி ஆகவுள்ள நிலையில், அதுவும் தங்கம் விலையில் சரிவினை ஏற்படுத்தியிருக்கலாம்.
முதலிட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்திருக்கலாம். இதன் காரணமாக தங்கம் விலையானது இன்று சரிவில் காணப்படுகின்றது.
ஜிடிபி
அமெரிக்காவின் பொருளாதாரம் என்பது வளர்ச்சி பாதையில் இருந்தாலும், அது சரிவில் தான் காணப்படுகின்றது. இது தங்கம் விலை அதிகரிக்க நீண்டகாக நோக்கில் காரணமாக அமையலாம். எனினும் தங்கம் விலையானது 9 மாத உச்சத்தில் தொடர்ந்து இருந்து வரும் நிலையில், இதில் புராபிட் புக்கிங் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது மீடியம் டெர்மில் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
டெக்னிக்கலாக தங்கம் விலை?
தங்கம் விலையானது குறைந்துள்ள நிலையில், டெக்னிக்கலாக இன்னும் 1900 டாலர்கள் என்ற லெவலுக்கு மேலாகத் தான் காணப்படுகின்றது. இது பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும், இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு, 4.45 டாலர்கள் குறைந்து, 1925.55 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. எப்படியிருப்பினும் டெக்னிக்கலாக சற்று குறையலாம் எனும் விதமாகவே மீடியம் டெர்மில் காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை அவுன்ஸூக்கு 1.14% குறைந்து, 23.767 டாலராக காணப்படுகிறது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் டெக்னிக்கலாக சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம்
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் நடப்பு காண்ட்ராக்ட் எக்ஸ்பெய்ரி என்பதால், தங்கம் விலை அழுத்தத்தில் காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 251 ரூபாய் குறைந்து, 56,711 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும் இன்று கீழாக காணப்படுகின்றது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்திய சந்தையில் வெள்ளி
வெள்ளி விலையும் இன்று சற்றே அழுத்தத்தில் காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு, 74 ரூபாய் குறைந்து, 68,602 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும் இன்று கீழாக காணப்படுகின்றது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் வெள்ளி விலை சற்று குறைந்தாலும், பின்னர் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆபரணம் தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையானது நேற்று சற்றே குறைந்திருந்த நிலையில், இன்று கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, 5345 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, 42,760 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 38 ரூபாய் குறைந்து, 5831 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 380 ரூபாய் குறைந்து, 58,310 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
ஆபரண வெள்ளியின் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 40 பைசா குறைந்து, 74.60 ரூபாயாக விற்பனை செய்யபட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து, 74,600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
More From GoodReturns

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?



Click it and Unblock the Notifications