தங்கம் விலை மீண்டும் ஏற்றம்.. நகை பிரியர்கள் மிக கவலை..!

தங்கம் விலையானது கடந்த அமர்வில் 8 மாத உச்சத்தில் காணப்பட்ட நிலையில், இன்று பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக ஆபரணத் தங்கம் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த 2 நாட்களாகவே சரிவினைக் கண்டு வந்த ஆபரணத் தங்கம் விலையானது, இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது தங்க ஆர்வலர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் மீண்டும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

தங்கம் விலை குறையலாம்

தங்கம் விலை குறையலாம்

எப்படியிருப்பினும் முதலீட்டாளர்கள் இன்று வெளியாகவிருக்கும் பணவீக்க தரவு குறித்த எதிர்பார்ப்பில், பெரியளவில் முதலீடு செய்யாமல் காத்துக் கொண்டுள்ளனர் எனலாம். ஒரு வேளை பணவீக்க விகிதமானது சந்தைக்கு ஆதரவாக சரிவினைக் கண்டால், பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையும் சரியலாம்.

முக்கிய பங்கு வகிக்கலாம்

முக்கிய பங்கு வகிக்கலாம்

இந்த பணவீக்கத் தரவானது வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தில் முக்கிய முடிவெடுக்க ஒரு முக்கிய காரணியாகவும் அமையலாம். ஆக முதலீட்டாளர்கள் மத்தியில் இது மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் தான் தங்கம் விலையானது இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் அதிகளவில் வாங்கி வைக்க தூண்டினாலும், தொடர்ந்து பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக பணவீக்கம் குறைய ஆரம்பிக்கலாம். எனினும் நிபுணர்கள் பணவீக்கத்தினை கட்டுப்படுத்த வட்டி அதிகரிப்பு மட்டும் போதாது எனவும் கூறி வருகின்றனர்.

பாதுகாப்பு புகலிடத்திற்கு ஆதரவு

பாதுகாப்பு புகலிடத்திற்கு ஆதரவு

இப்படி தொடர்ந்து வட்டியை அதிகரிப்பதால் அது மேற்கொண்டு பொருளாதாரம் சரிவுக்கு தான் செல்லும். இதனால் ரெசசன் வரலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது. ஆக பணவீக்கம் என்பது குறையத் தொடங்கினால், பொருளாதாரம் சரிவில் இருப்பதும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

பிரச்சனைகள் ஓய்ந்த பாடில்லை

பிரச்சனைகள் ஓய்ந்த பாடில்லை

இன்று உலகம் முழுக்க நிலவி வரும் மந்த நிலைக்கு முக்கிய காரணிகளில் ஒன்று ரஷ்யா உக்ரைன் பிரச்சனை. ஆனால் இன்று வரையில் இப்பிரச்சனைக்கு முடிவு ஏற்பட்டதாக தெரியவில்லை. இது தவிர சீனா மீண்டும் தாய்வான் எல்லையில் போர் ஒத்திகையில் ஈடுபட்டும் வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆக இது எப்போது வேண்டுமானாலும் பிரச்சனையாக வெடிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இத்தகைய பரவலான சூழலுக்கு மத்தியில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 8.30 டாலர்கள் அதிகரித்து, 1887.30 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. இது மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று தடுமாறினாலும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் எனலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் தங்கத்தினை போல அவுன்ஸூக்கு 1.07% அதிகரித்து, 23.733 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. இது மேற்கொண்டு இன்று சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே டெக்னிக்கலாக காணப்படுகின்றது.

 இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 179 ரூபாய் அதிகரித்து, 55,872 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று அதிகரித்தே காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் எதிரொலியாக சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 537 ரூபாய் அதிகரித்து, 68,58 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரணம் தங்கம் விலை

ஆபரணம் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக ஆபரண தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து, 5236 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து, 41,888 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து, 5712 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு, 70 ரூபாய் அதிகரித்து, 57,120 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று இதுவரையில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது கிராமுக்கு 74 ரூபாயாக விற்பனை செய்யபட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 74,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+