இனி சாமனியர்கள் தங்கத்தினை நினைக்க மட்டும் தான் முடியும் போல.. ஒரே நாளில் ரூ.520 அதிகரிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் தங்கத்தினை விரும்பாத ஆண், பெண்கள் உள்ளார்களா என்றால், அது மிக குறைவு தான். குறிப்பாக தமிழகத்தில் இருப்பது மிக குறைவே. அந்தளவுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகம்.

 

இதற்கிடையில் கடந்த சில தினங்களாகவே தங்க ஆர்வலர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக, தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வந்தது. ஆனால் தற்போது ஒட்டுமொத்த சரிவினையும் சேர்த்து, இன்று ஒரே நாளில் ஏற்றம் கண்டுள்ளது.

இது தங்க நகை ஆர்வலர்களுக்கு மிக கவலையை ஏற்படுத்தியுள்ளது எனலாம். ஏனெனில் நிபுணர்கள் தொடர்ந்து தங்கம் விலையானது ஏற்றம் காணும் என்று கூறி வரும் நிலையில், இன்று பலமான ஏற்றத்தினை கண்டுள்ளது. ஆக பலரும் குறைந்த விலையில் வாங்காமல் மிஸ் பண்ணிவிட்டோமோ என்று நினைதிருப்பர்.

சந்தைகளில் தங்கம் விலை

சந்தைகளில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் எம்சிஎக்ஸ் தங்கத்தின் விலை பலமான ஏற்றத்திற்கு பிறகு, இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் இன்று தங்க ஆபரண விலையானது உச்சத்தினை தொட்டுள்ளது. இன்று காலையில் கூட பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்பட்ட நிலையில், தற்போது உச்சத்தினை தொட்டுள்ளது.

இன்று விலை எப்படி?

இன்று விலை எப்படி?

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையினை பொறுத்த வரையில், கடந்த சில நாட்களாகவே பெரியளவில் மாற்றம் காணவில்லை. எனினும் இன்று ஒரே நாளில் கிராமுக்கு 67 ரூபாய் அதிகரித்து, 4,428 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து 35,424 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சுத்த தங்கம் விலை
 

சுத்த தங்கம் விலை

இதே 24 கிராம் சுத்த தங்கத்தின் விலையானது கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து, 4,830 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 700 ரூபாய் குறைந்து, 48,300 ரூபாயாகவும் உள்ளது. தூய தங்கத்தின் விலையும் கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே பெரியளவில் மாற்றம் காணாத நிலையில் இன்று நல்ல ஏற்றத்தினை கண்டுள்ளது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே கிராம் வெள்ளியின் விலையானது கிராமுக்கு 1.50 ரூபாய் அதிகரித்து, 73.40 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே கிலோவுக்கு இன்று 1500 ரூபாய் அதிகரித்து 73,400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையும் கடந்த சில தினங்களாக பெரியளவில் மாற்றம் காணாத நிலையில், இன்று பலமான ஏற்றத்தினைக் கண்டுள்ளது. .

மற்ற பகுதிகளில் விலை நிலவரம் என்ன? (22 கேரட்)

மற்ற பகுதிகளில் விலை நிலவரம் என்ன? (22 கேரட்)

சென்னையில் இன்று சவரனுக்கு 35,424 ரூபாயாகவும்

மும்பையில் இன்று சவரனுக்கு ரூ.35,880 ஆகவும்

டெல்லியில் இன்று சவரனுக்கு ரூ.35,880 ஆகவும்

பெங்களூரில் இன்று சவரனுக்கு ரூ.35,200 ஆகவும்

ஹைதராபாத்திலும் இன்று சவரனுக்கு ரூ.35,200 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உண்மையில் சாமனியர்களின் தங்க கனவு என்பது இனி நிறைவேறுவது கடினம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold jewellery price rises today at Rs.520 per 8 gram

Gold jewellery price updates.. Gold jewellery price rises today at Rs.520 per 8 gram
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X