நாம் என்ன தான் முதலீடு செய்தாலும், அதில் கொஞ்சமேனும் தங்கத்தின் முதலீடு செய்யாமல் இருக்க மாட்டோம். அந்தளவுக்கு நம் வாழ்வில் அங்கம் வகிக்கும் தங்கத்தின் இன்றைய நிலவரம் பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.
உலகமே கொரோனா பாதிப்பின் காரணமாக அரண்டு போய் கிடந்தாலும், மறுபுறம் தங்கம் அதன் வேலையை சரிவர செய்து கொண்டே தான் இருக்கிறது. அதாவது, கடந்த வாரம் சில வாரங்களாக மனம் தளராமல் ஏறிக் கொண்டே தான் இருகிறது.

இந்தியாவினை பொறுத்தவரையில் இன்றைய அளவில் ஆபரணத் தங்கம் தேவையானது பெரிய அளவில் இல்லாததால், ஆபரண தங்கத்தின் விலை குறைந்தாலும் சரி, அதிகரித்தாலும் சரி, அது அவ்வளவாக மக்களிடம் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை என்றே கூறலாம்.
எனினும் உலகளவில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை, பாதுகாப்பினை காரணம் காட்டி தங்கத்தின் பக்கம் முதலீடுகளை திருப்பி வருகின்றனர். இதன் காரணமாக தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும் கடந்த 4 தினங்களாக சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் சீனா தேசிய பாதுகாப்பு சட்டத்தினை அமல்படுத்த தயாராகி வருவது தான். சீன அரசு ஹாங்காங் மீது கொண்டு வர உள்ள புதிய பாதுகாப்பு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால், அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
,மேலும் இவ்வாறு தடை விதித்தால் பொருளாதார மையமாக விளங்கும் ஹாங்காங் பெருமளவு பாதிக்கப்படும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. இச்சட்டத்தின் மூலம் ஹாங்காங் தனித்துவமாக செயல்முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ சில தினங்களுக்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தார்.
இதே அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், சீனாவின் புதிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக வலுவான பதிலை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆக இத்தகைய அக்கப்போர்களுக்கு மத்தியிலும், அமெரிக்காவின் பொருளாதாரத்தினை மேம்படுத்தவும், சைலண்டாக ஒருபுறம் அமெரிக்கா வேலை பார்த்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆக இதுபோன்ற பல காரணிகள் தங்கம் விலை குறைய காரணமாக அமைந்துள்ளன.
சர்வதேச சந்தையில் இன்று அவுன்ஸூக்கு தங்கம் விலையாது 6.50 டாலர் குறைந்து, 1,699.05 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இது தொடர்ச்சியான 4வது நாள் வீழ்ச்சியாகும்.
இதுவே இந்தியாவின் கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலையானது (10 கிராம் ) 217 ரூபாய் குறைந்து, 46,115 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது கமாடிட்டி வர்த்தகத்தில் இரண்டாவது நாள் சரிவாகும்.
இதே தங்க ஆபரண விலையை பொறுத்தவரையில், சென்னையில் கிராமுக்கு 92 ரூபாய் குறைந்து, 4,431 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 736 ரூபாய் குறைந்து 35,448 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

Today Gold Silver Rate Live: தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

Gold Silver Rate Live: தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..! தங்க நகை காதலர்களுக்கு குட்நியூஸ்..!



Click it and Unblock the Notifications