புன்னகைக்க வைக்கும் பொன்னகை விலை.. சவரனுக்கு ரூ.1,200 சரிவு..!

அடித்தட்டு மக்கள் முதல் கொண்டு மேல் தட்டு மக்கள் வரை அவரவர் தகுதிக்கு ஏற்ப கொஞ்சமேனும் தங்கம் வாங்க வேண்டும் என்பது தான் அவர்களின் முதலாவது முதலீட்டு ஆப்சனாக இருக்கும்.

இன்னும் உண்மையை சொல்லவேண்டுமானால் முதலீடு செய்கிறோமோ இல்லையோ? ஒரு கிராம் தங்கமேனும் வாங்கி அணிந்து கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் ஆசையாக இருக்கும்.

இப்படி ஒரு புறம் எனில், நம் மக்களின் எதிர்பாராத செலவுகளுக்கு முக்கிய கடன் கொடுக்கும் கடன்தாரர் இந்த தங்க நகைகளே என்றே கூறலாம்.

கடன் வாங்க தங்கம்

கடன் வாங்க தங்கம்

ஏனெனில் தங்கம் வாங்குவதே அவசர தேவைக்கு வைத்து கடன் வாங்க முடியும் என்பதால் தான். ஒரு நல்ல முதலீடு என்பது நமக்கு நல்ல லாபத்தினை தர வேண்டும். அல்லது தேவைப்படும் நேரத்தில் முதலீட்டுக்கு கேடு இல்லாமல் ஆவது நமக்கு உதவ வேண்டும். ஆக இந்த வகையில் லாபம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை நம் மக்கள் முதல் ஆப்சனாக இருப்பதே தங்கம் ஆபரணம் தான்.

றெக்கை இல்லாமல் தங்கம்

றெக்கை இல்லாமல் தங்கம்

இந்த நிலையில் உலகம் முழுக்க கொரொனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தொழில்துறையும் தேக்கமடைந்து வரும் நிலையில், தொடர்ந்து உலகமே தங்கத்தில் பாதுகாப்பு கருதி முதலீடு செய்து வந்த நிலையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது றெக்கை இல்லாமல் பறந்து கொண்டு இருந்தது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

இதன் எதிரொலியாக இந்தியாவிலும் ஆபரண தங்கம் விலையும் பறந்து கொண்டு இருந்தது. அதிலும் இந்தியாவினை பொறுத்தவரையில் இறக்குமதி வரி, ஜிஎஸ்டி என அனைத்தும் சேர்த்து இன்னும் கூடுதலாக செலுத்த வேண்டி இருந்தது. இதனால் சர்வதேச சந்தையில் விலை குறைந்தாலும், இந்திய ஆபரண தங்கத்தின் விலையானது அவ்வளவாக குறைவதில்லை.

இன்று விலை எப்படி?

இன்று விலை எப்படி?

சென்னை ஆபரண தங்கத்தினை பொறுத்த வரையில் கடந்த 7 நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து 4,060 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து 32,480 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. லாக்டவுன் சமயத்தில் இவ்வாறு குறைந்திருந்தாலும், மக்கள் வாங்க முடியாத நிலையே நிலவி வருகிறது.

சுத்த தங்கம் விலை

சுத்த தங்கம் விலை

இதே 24 கிராம் சுத்த தங்கத்தின் விலையானது கிராமுக்கு 168 ரூபாய் அதிகரித்து, 4,429 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 1,680 ரூபாய் அதிகரித்து 40,600 ரூபாயாகவும் உள்ளது. என்ன தான் விலை குறைந்து என்ன பயன் தற்போது வாங்க முடியவில்லையே..பொறுங்கள் இதுவும் நல்லதுக்கு தான் இன்னும் குறைந்தால் நல்ல விஷயம் தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+