இந்தியாவில் தங்கத்தினை விரும்பாத பெண்கள் இருப்பது மிக குறைவு. குறிப்பாக தமிழகத்தில் இருப்பது மிக குறைவே. அந்தளவுக்கு தங்கத்தின் மீது மோகம் உண்டு.
இதற்கிடையில் தங்க ஆர்வலர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே தங்கம் விலையானது இதுவரையில் 8% குறைந்துள்ளது.
இதன் எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலையும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இது தங்க நகை ஆர்வலர்களுக்கு, சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக உள்ளது.
சந்தைகளில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் எம்சிஎக்ஸ் தங்கத்தின் விலை கடந்த சில அமர்வுகளாக பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. இதற்கிடையில் இந்தியாவில் ஆபரண தங்கத்தின் பயன்பாடு அதிகம் என்றாலும், தற்போது இரண்டாம் கட்ட கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தங்க விற்பனையாளர்கள் தங்கத்தின் மீதான ஆர்வம் குறைந்து வருவதாக கூறியுள்ளனர்.
ஆபரண தங்கத்திற்கு ஊக்கம்
கடந்த பட்ஜெட் 2021ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்தார். இது இன்னும் இறக்குமதியாளர்களுக்கு ஊக்கத்தினை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தங்கத்தின் தேவையும் குறைந்து வரும் நிலையில், விற்பனையை ஊக்குவிக்க விற்பனையாளர்கள் பல சலுகைகளையும் அறிவித்து வருகின்றனர்.
இன்று விலை எப்படி?
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையினை பொறுத்த வரையில், கடந்த சில நாட்களாகவே பெரியளவில் மாற்றம் காணாவில்லை. எனினும் இன்று ஒரே நாளில் கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து, 4,212 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து 33,696 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
சுத்த தங்கம் விலை
இதே 24 கிராம் சுத்த தங்கத்தின் விலையானது கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, 4,595 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 320 ரூபாய் குறைந்து, 36,760 ரூபாயாகவும் உள்ளது. தூய தங்கத்தின் விலையும் கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே பெரியளவில் மாற்றம் காணாத நிலையில் இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
இதே கிராம் வெள்ளியின் விலையானது கிராமுக்கு 1.80 ரூபாய் குறைந்து 70 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே கிலோவுக்கு இன்று 1800 ரூபாய் குறைந்து 70,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையும் கடந்த சில தினங்களாக பெரியளவில் மாற்றம் காணாத நிலையில், இன்று பலத்த சரிவினைக் கண்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications