ரூ.42,000 தாண்டிய தங்கம் விலை.. சாமானியர்கள் இனி கனவில் தான் நினைக்கணும் போல!

தங்கம் விலையானது இன்று மீண்டும் உச்சத்தில் காணப்படுகின்றது. இது 7 மாத உச்சத்தில் காணப்படுகின்றது. தங்கத்தின் இந்த விலை அதிகரிப்பானது டாலரின் மதிப்பில் ஏற்பட்ட தடுமாற்றம், ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் இந்த மெதுவான அதிகரிப்பு திட்டம் என பலவும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

டாலர் இன்டெக்ஸ் ஆனது சற்று குறைந்துள்ள நிலையில், இது டாலரில் தங்கத்தினை வாங்குபவர்களுக்கு விலை மலிவானதாக மாற்றியுள்ளது. ஆக இதனால் தங்கத்தில் முதலீடுகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சேவைத் துறை

சேவைத் துறை

அமெரிக்காவின் வேலை குறித்தான தரவானது கடந்த வெள்ளிக்கிழமையன்று தங்கத்திற்கு ஆதரவாகவே வந்தது. இதற்கிடையில் டிசம்பர் மாதத்தில் சேவைத் துறையானது 2 1/2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுருக்கத்தினை கண்டுள்ளது. இது பணவீக்க விகிதமானது தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் நிலையில், சரிவினைக் கண்டுள்ளது. இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.

சிறந்த ஹெட்ஜிங்

சிறந்த ஹெட்ஜிங்

தங்கம் சிறந்த பாதுகாப்பு புகலிடமான பார்க்கப்படும் நிலையில், தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்தாலும், பணவீக்கமும் அதிகரித்து வரும் சூழலில் சிறந்த ஹெட்ஜிங் ஆக செயல்படலாம். இதற்கிடையில் சீனாவில் தேவையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலை அதிகரிக்கலாம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த ஆண்டில் பெரியளவில் மாற்றம் காணவில்லை. இது ரெசசன் அச்சம், அரசியல் பதற்றங்கள் என பல காரணிகளுக்கு மத்தியில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டிக்கு மத்தியில், பெடரல் ரிசர்வ் வங்கியானது மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மீண்டும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 10.95 டாலர்கள் அதிகரித்து, 1880.65 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் தங்கத்தினை போல அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 24.130 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. இது மேற்கொண்டு இன்று சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே டெக்னிக்கலாக காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 323 ரூபாய் அதிகரித்து, 56,066 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவினை காட்டிலும், இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 418 ரூபாய் அதிகரித்து, 69,591 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரணம் தங்கம் விலை

ஆபரணம் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக ஆபரண தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 39 ரூபாய் அதிகரித்து, 5260 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 312 ரூபாய் அதிகரித்து, 42,080 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 42 ரூபாய் அதிகரித்து, 5738 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு, 420 ரூபாய் அதிகரித்து, 57,380 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

வெள்ளியின் விலையானது இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, 74.90 ரூபாயாக விற்பனை செய்யபட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 500 ரூபாயாக அதிகரித்து, 74,900 ரூபாயாக விற்பனை செய்யபட்டும் வருகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+