தங்கம் விலையானது கடந்த அமர்வில் பலத்த சரிவினைக் கண்ட நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.
கடந்த அமர்வில் இந்திய சந்தைகள் காலை அமர்வில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், மாலை நேர அமர்வில் சரிவினைக் கண்டது.
வழக்கமாக கடந்த சில அமர்வுகளாகவே தொடச்சியாக சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டிருந்தாலும், இந்திய சந்தையில் ஏற்றத்தில் தான் காணப்பட்டது. இந்த நிலையில் இன்று இரு சந்தைகளிலும் ஏற்றத்தில் காணப்படுகிறது.
இன்று என்ன பார்க்க போகிறோம்?
சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன? வெள்ளி விலை நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் விலை நிலவரம் என்ன? இந்த இரு சந்தைகளிலும் வெள்ளி விலை என்ன? தங்கம் ஆபரண விலை நிலவரம் என்ன? இன்று விலை எப்படி இருக்கும்? நீண்டகால நோக்கில் எப்படி இருக்கும்? முக்கிய காரணிகள் என்னென்ன? இது வாங்க சரியான இடமா? அடுத்த என்ன செய்யலாம்? வாருங்கள் பார்க்கலாம்.
இது வாங்க சரியான இடம்
தங்கம் விலையானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வரலாற்று உச்சமான 56,200 ரூபாயுடன் ஒப்பிடும்போது, சுமார் 9,400 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. இதே இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சுமார் 3,000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கி தங்கம் விலை அதிகரிக்கும் என்றே பல நிபுணர்களும் கூறி வருகின்றனர். அதற்கேற்ப காரணிகளும் தங்கத்திற்கு ஆதரவாகவே உள்ளது. ஆக தங்கத்தினை நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகத் தான் பார்க்கப்படுகிறது.
இன்று காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது இன்று சற்று ஏற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 6.20 டாலர் அதிகரித்து, 1742.55 டாலர்களாக காணப்படுகிறது. அதோடு தங்கம் விலையானது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலையானது இன்றும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.
இன்று காமெக்ஸ் வெள்ளி விலை
தங்கம் விலையினை போலவே வெள்ளி விலையும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 0.13% அதிகரித்து, 25.558 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளியின் விலையும் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் காணப்படுகிறது. எனினும் நேற்றைய அதிகபட்ச விலையை உடைத்துக் காட்டியுளது. ஆக தற்போது பெரியளவில் மாற்றமில்லா விட்டாலும், இன்னும் சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.
இன்று எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 152 ரூபாய் அதிகரித்து, 46,760 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. அதோடு முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலையானது இன்று இன்னும் சற்று அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ்
இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும், சர்வதேச சந்தையினை போலவே பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 285 ரூபாய் அதிகரித்து, 67,923 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. அதோடு நேற்றைய உச்சத்தினையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக வெள்ளியின் விலையானது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.
இன்று ஆபரண தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 4,363 ரூபாயாகவும், சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து, 34,904 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக பெரியளவில் இல்லாவிட்டாலும், சற்று குறைந்து காணப்படுகிறது.
24 கேரட் தங்கம் விலை
சென்னையில் இன்று 24 கேரட் தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. இது கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து, 4760 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து, 38,080 ரூபாயாகவும் காணப்படுகிறது. தூய தங்கத்தின் விலையும் கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து சற்று குறைந்து வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் ஆபரண வெள்ளியின் விலையானது கடந்த சில நாட்களாக பலமான ஏற்ற இறக்கத்தினை கண்ட நிலையில், இன்று விலையில் மாற்றமில்லை. கிராமுக்கு 71.90 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 71,900 ரூபாயாகவும் காணப்படுகிறது. வெள்ளியின் விலையானது இரண்டாவது நாளாக இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை.
சப்போர்ட் லெவல்
தங்கம் விலையானது சரிவினைக் கண்டால் 46,300 ரூபாய் சப்போர்ட் லெவலாகவும், இதே அதிகரிக்கும்பட்சத்தில் 47,100 ரூபாய் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலாகவும் காணப்படுகிறது.
இதே வெள்ளியின் விலை குறைந்தால் 66,000 ரூபாய் என்பது முக்கிய சப்போர்ட் லெவலாகவும், இதே ஏற்றத்தில் 68,000 என்பது முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதே டாலரில் தங்கத்தின் உடனடி சப்போர்ட் லெவல் 1720 டாலர்களாகும். இதே ஏற்றத்தில் 1760 முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
தங்கத்தில் முதலீடுகள்
அமெரிக்க பத்திர லாபம் சற்று குறைந்துள்ள நிலையில், டாலரின் மதிப்பு மூன்று வார சரிவில் காணப்படுகிறது. ஆக இது தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. ஏனெனில் டாலரின் மதிப்பு சரிவு என்பது, மற்ற நாணயதாரர்களுக்கு தங்கத்தினை குறைவான விலைக்கு வாங்க வழிவகுக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக பத்திர லாபம் சரிந்து வரும் நிலையில், வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
முதலீட்டாளர்களின் கவனம்
அதோடு அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் காரணமாக, ரூபாயின் மதிப்பு சரிவினைக் கண்டு வருகிறது. இதனால் இந்தியாவிலும் தங்கம் விலையானது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதோடு முதலீட்டாளர்கள் இன்று வரவிருக்கும் வேலையின்மை நலன் குறித்தான டேட்டா மற்றும் தொழில்துறை உற்பத்தி குறித்தான அறிவிப்புகளும் வெளியாகவுள்ள நிலையில் அதனை கவனித்துக் கொண்டுள்ளனர். ஏனெனில் இது தங்கத்தின் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கத்தினை பொறுத்த வரையில் மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. நீண்ட கால நோக்கில் வாங்கி வைக்கலாம். ஏனெனில் தங்கத்திற்கு சாதகமாகவே அனைத்து காரணிகளும் உள்ளன. குறிப்பாக 1760 டாடலர்களை உடைத்து சென்றால், இன்னும் நல்ல ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!



Click it and Unblock the Notifications